ஓரடி வயிற்றுக்கு
உணவுக்கு வழி தேட
நூறடி கயிற்றினில்
நுண்ணிய நடையிது.
பாரடி மீதிலே
பசிக்காக ஏங்கியே
மாரடித்து வாழ்ந்திடும்
மழலைகள் சாபமோ ?
கோரப்பிடி வறுமையோ
கொல்லுது தினம் தினம்
ஊரடி போயினும்
உதவுவார் யாருளர்
நேரடியாய் எம்மை
நேசத்தை காட்டிலர்
வாரடி படுகின்றோம்
வஞ்சகர் கைகளால்
போராடி வாழ்கிறோம்
பொய்யான வாழ்க்கையை
உருப்படியாய் எமை
உயர்த்துவோர் காண்கிலேன்
தெருப்படி ஓரமே
தேயு து காலமே
ஆரடி காரணம்
என்பதைக் கூறணும்
சீரடி சிறப்படி
சீக்கிரம் தோன்றுமோ?
உணவுக்கு வழி தேட
நூறடி கயிற்றினில்
நுண்ணிய நடையிது.
பாரடி மீதிலே
பசிக்காக ஏங்கியே
மாரடித்து வாழ்ந்திடும்
மழலைகள் சாபமோ ?
கோரப்பிடி வறுமையோ
கொல்லுது தினம் தினம்
ஊரடி போயினும்
உதவுவார் யாருளர்
நேரடியாய் எம்மை
நேசத்தை காட்டிலர்
வாரடி படுகின்றோம்
வஞ்சகர் கைகளால்
போராடி வாழ்கிறோம்
பொய்யான வாழ்க்கையை
உருப்படியாய் எமை
உயர்த்துவோர் காண்கிலேன்
தெருப்படி ஓரமே
தேயு து காலமே
ஆரடி காரணம்
என்பதைக் கூறணும்
சீரடி சிறப்படி
சீக்கிரம் தோன்றுமோ?
#
ஆக்கம் கவிஞர்.
ஏரூர் கே. நெளஷா
Keine Kommentare:
Kommentar veröffentlichen