பந்தியிடும் உலக இயக்கத் தொடர்பு.
விந்தையுடை பல சாதனைகள் உழைப்பு
சந்திக்கும் மனிதரால், சிந்தனைகளால் உதிப்பு.
சந்திக்கும் உடல்களால் சீவராசிகள் பிறப்பு.
சந்திக்கும் ஆதவனால் நாளின் பிறப்பு.
அந்தமற்ற அணுக்கதிர்கள் ஆற்றும் இணைப்பு
அளவற்ற கோள்கள் கண்களிற்குப் பதிப்பு.
சாலைகள் சந்திப்பு உலக இணைப்பு.
வேலை குறைவுபாடு குறுக்குச் சந்திப்பு.
மாலைச் சந்திப்பு இருட்டு வியப்பு.
மூலை ஒரு நிகழாத சந்திப்பு.
முகநூல் கணனியிலொரு சிறந்த சந்திப்பு.
அகம் விரும்புவதும் விரும்பாததும் தொகுப்பு.
தகவுடை நிலாமுற்றக் குழு இணைப்பு.
முகம் மலருதென் கவிதையும் தரிப்பு
சிந்தனையில் உதிக்கும் கவிதைக் குதிப்பு
சொந்தப் பூவை அரங்கேற்றத் தவிப்பு.
வந்தது நிலாமுற்ற ஆண்டுப் பிறப்பு.
முந்தினால் பொறலாம் முன் வரிசையிருப்பு.
பா ஆக்கம் பா வானதி
டென்மார்க்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen