Social Icons

Montag, 26. September 2016

சரஸ்வதி அம்மாவின்.அந்தியேஸ்டியில் பிரதீபன் “செவ்வானம்” கவிதைநுால் அறிமுகமானது நிழல்படங்களைப்பார்க்க

திருநாவுகரசு சரஸ்வதி அம்மாவின்.அந்தியேஸ்டி நிகழ்வு. 25.09.2016 அன்று அவரது இல்லத்தில் சரஸ்வதி அம்மாவின் பிள்ளைகள் இணைந்து நல்ல முறையான ஏற்பாட்டுடன் நடைபெற்றதுஅதில் எம்மை நிகழவைக்கும் அளவுக்கு அனைத்து செயல் பாடுகளும்இருந்தது,

.உண்மையில் எமது தமிழ் கலை, கலாச்சாரத்தை கட்டி பாதுகாக்கிற வகையில் அன் நிகழ்வு அமைந்து இருந்தது அதைப் பார்க்கும் போது வருகை தந்த அனைவவரின் மனமும் அங்கே சரஸ்வதி அம்மாவின் ஞாபகத்தை மீட்டிப்பார்த்து ஒருவரை ஒருவர் உரையாடிக் கொண்டனர்,
அது மட்டுமல்லாமல் சரஸ்வதி அம்மாவின். அந்தியேஸ்டியில் எமது தாயகத்தின் பல்துறை கலைஞர் படைப்பாளி பூபாலசிங்கம். பிரதீபன் அவர்களின்”செவ்வானம்” எனும் திறந்த கவிதை நூலினை சரஸ்வதி அம்மாவின் அந்தியேஸ்டிநாளில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்
சிங்கம் அவர்கள் .

உண்மையிலேயே இது ஒரு வித்தியாசமான சிந்தனை உள்ள களம் நாம் சென்றது சஸ்வதி அம்மாவின்.அந்தியேஸ்டிக்காக ஆனால் சமுதாயத்தின் கலைவளர்பின் சிறப்பு அங்கே படைப்பாளி பூபாலசிங்கம். பிரதீபன் அவர்களின் “செவ்வானம்” எனும் கவிதை நூல் வெளியீடு இதில் கலைத்தாகம் கொண்டவர்கள் எமது சமுதாய நல் நடத்தையைபற்றி எழுதிய இந்த நூலினை பலரும் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி வாசித்து அறிந்து கொண்டனர் என்பது சிறப்பம்சம் ஆகும். அத்தோடு சரஸ்வதி அம்மாவின். அந்தியேஸ்டிக்காக கீரிமலை சென்று அங்கேஅவர்நினைவை நெஞ்சில் சுமந்த அவர் பிள்ளைகள் உற்றார் உறவினர் அன்புகளையும் மறக்கமுடியாத நெஞ்சுக்கு ஆவண நினைவுகள் ஆகும்
சரஸ்வதி அம்மாவின் அந்த நிகழ்வில் எம்மை அழைத்து கலைக்கு கலைப்படைப்புக்கு
புதிய வரவிலக்கணம்தந்த நிகழ்வில் நாமும் கலந்து கொண்டது மிகவும் சந்தோசம்தந்த நினைவுகள் ஆகும்
அன்புடன் கு.யோகேஸ்வரன்.





























Samstag, 24. September 2016

சேமமடுவூர் சிவகேசவன் எழுதிய மூன்றாவது நூல்..வெளிவருகிறது


 சேமமடுவூர் சிவகேசவன் மூன்றாவது நூல்.....
"வவுனியாக் குளப் பண்பாட்டுச் சூழலில் கிராமிய வழிபாடு" என்ற எனது ஆய்வு நூலின் அச்சுப் பணிகள் நிறைவடைந்துள்ளன..  


இந்த நுால்:வெளியீட்டு விழாவின்றி வெளிவர இருக்கின்றது அத்தோடு
இந்த நூலை நூலகங்களிற்கு அன்பளிப்புச் செய்ய எதிர்பார்க்கிறார் சேமமடுவூர் சிவகேசவன்

. வவுனியா மாவட்டத்தில் கிராமிய வழிபாடுகளைத் தொடரும் ஆலயங்களில் என்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு நூல் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. என்பது புறிப்பிடத்தக்கது:

Montag, 19. September 2016

ஈழத் தென்றல் கவிதைகள்எழுதிய பட்டுப் பாதங்களை தொட்டிட நினைத்தேன்

பட்டுப் பாதங்களை தொட்டிட நினைத்தேன்
அவளின் தோழி உறுத்துப் பார்த்தாள்.

இடையழகில் மயங்கி கிறங்கி நின்றேன்
நீயார் எனவே முறைத்துப் பார்த்தாள்.

சொற்கள் மறந்து ஊமையாய் நின்றேன்
கண்களாலே பல கணைகள் எய்தாள்

என்னவள் அழகை அள்ளிட நினைத்தேன்
அநியாயம் ஈதென அரணாய் நின்றாள்.

என்னவள் இவளென அவளிடம் சொன்னேன்
ஆகாதென்றே பல வாதங்கள் செய்தாள்.

கள்ளியே எந்தன் காதலி நீயும்
தள்ளியே நிற்கும் பாவனை ஏனோ?

தோழி எறியும் கூர்முனை வீச்சு
காதலை சொல்லும் சாகசம் தானோ?

நாழிகை கழியும் சோகத்தை அறிவாய்
வேல்விழி திருப்பி மலர் முகம் காட்டு!

ஆக்கம் 

                                                              ஈழத் தென்றல் கவிதைகள்

Sonntag, 18. September 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய ஆகாயம் பார்க்கிறதோ....

அதிசயம் நிகழுதென்று
ஆவாரம்பூவொன்று
ஆகாயம் பார்க்கிறதோ...???
அடி அம்மாடி உன்பார்வை பட்டு
ஆதவனும் துண்டாகி விழுமோ..??
ஆகாயம் இரண்டாகி விடுமோ...??

ஆரவாரம் செய்யும் அழகு முல்ல
ஆலோலம பாடுதே மனசு உள்ள
ஆசைகளுக்கு எல்லையில்ல
அழகில் அகதியா நிற்கிறேன்
அன்பே நான் என்ன சொல்ல

ஆட்பரிக்கும் உன் அழகு கூந்தல்
ஆட்டி வதைக்கும் கண்கள் திங்கள் - நீ
ஆடை கட்டி வந்த வெண்பொங்கல் -
ஆசம் என்பேன் நான் கவித்தென்றல்

அறுசுவை இதழ் தரும் தேன் கனி
அழகென சொல்லிடும் இரு மான்விழி
அரைநொடி காண்பவன் உன்வழி
அவதியில் விழுபவன் படுகுழி
 

ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

 
 

Freitag, 16. September 2016

மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய காத்திருப்பு உனக்கானது

நிலவை இழந்த ஆகாயமாய்
நீயின்றி நகர்கின்றது வெறுமையாய்
கண்களில் தினம் பணிக்கும் நீர்
சிவந்தவிழியே காண்கிறேன்

தனிமையே ஒர் கொடிய நோய்
இனிமையே உன்னுடன் உரையடுவது
மலர்களைக்காணும் போதல்லாம்
மனமானது உன்னையே நினைக்கின்றது
என் காத்திருப்பு உனக்கானது
திருமணத்தில் நறுமணம் வீச வந்து விடு

ஆக்கம் மட்டுநகர்
கமல்தாஸ்

கவிஞர் ரி.தயாநிதி எழுதிய இடம் மாறிடும் இன அழிப்பு..!

விடியலுக்காய்
கடும் தவம்.
சுடும் வெய்யிலில்
நெடும் தூரம்
பாத யாத்திரை.!

தேசம் மலர
வாசம் பரப்பிய
புனித மலர்கள்.
தியாகமும் இவர்கள்
அர்ப்பணங்களும்
போராட்டங்களும்..!

எல்லாம் கரைந்து
காவிரி நதியால்
கலவரம் தரும்
பெரும் துயரம்.
ஈரம் உலர்ந்த
தேசங்களில் கோரம்
பெருகி குருதி
ஆறாய் ஓடுகின்றது.!

தமிழன் வாழாத
நாடுகள் இல்லை
அவன் அடி வாங்காத
நாட்களும் இல்லை.
இவன் பெருமைகள்
கல் வெட்டுக்களில்
கடாரம் வென்றவன்
பாடல் வரிகளில்..!

மூளைச் சலவையல்
இந்திய தமிழன்
சினிமாவால்
பெரும் சிதைவுக்குள்.
கட்டவுட் வைத்து
பால் வார்த்து
பாழாய்ப் போகின்றான்.!

காவிரி வந்தால் என்ன
வராமல் போனால் என்ன
தலை தளபதியின்
அடுத்த றிலீசுக்கும்
வசூலுக்கும் வாய்
பிளந்து கிடக்கின்றான்.
தமிழின அழிப்பு
இடம் மாறி தொடருது...
 
ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி
 
 

மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய காத்திருப்பு உனக்கானது

நிலவை இழந்த ஆகாயமாய்
நீயின்றி நகர்கின்றது வெறுமையாய்
கண்களில் தினம் பணிக்கும் நீர்
சிவந்தவிழியே காண்கிறேன்

தனிமையே ஒர் கொடிய நோய்
இனிமையே உன்னுடன் உரையடுவது
மலர்களைக்காணும் போதல்லாம்
மனமானது உன்னையே நினைக்கின்றது
என் காத்திருப்பு உனக்கானது
திருமணத்தில் நறுமணம் வீச வந்து விடு

 ஆக்கம் மட்டுநகர்
கமல்தாஸ்

Mittwoch, 14. September 2016

குமுதினி ரமணன் எழுதிய மலர்களைப் போல.

உயிர்கள் பூத்துக் குலுங்கி 
மணம் பரப்பியவண்ணமேயுள்ளது.

அதன் வண்ணமும் அழகும்
இயற்கையின் எண்ணப்படி 
அற்புதங்கள் செய்தவண்ணமே உள்ளது.

இருந்தும் வாடும் தருணம்
 தடுக்க முடிவதில்லை மலர்களை.

மனித மனமும் 
அழகியல் சிந்தனைகளில் 
எண்ணங்களில் செயல்களில் உயர்ந்து
கொண்டே இருக்க வேண்டும்.
எதிர்பார்ப்புகள் இன்றி மலர்களைப் போல.

ஆக்கம்  குமுதினி ரமணன்.

மயன் கொப்லன்ஸ். யேர்மனி.

Disqus Shortname

Comments system

 
Blogger Templates