Social Icons

Sonntag, 18. September 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய ஆகாயம் பார்க்கிறதோ....

அதிசயம் நிகழுதென்று
ஆவாரம்பூவொன்று
ஆகாயம் பார்க்கிறதோ...???
அடி அம்மாடி உன்பார்வை பட்டு
ஆதவனும் துண்டாகி விழுமோ..??
ஆகாயம் இரண்டாகி விடுமோ...??

ஆரவாரம் செய்யும் அழகு முல்ல
ஆலோலம பாடுதே மனசு உள்ள
ஆசைகளுக்கு எல்லையில்ல
அழகில் அகதியா நிற்கிறேன்
அன்பே நான் என்ன சொல்ல

ஆட்பரிக்கும் உன் அழகு கூந்தல்
ஆட்டி வதைக்கும் கண்கள் திங்கள் - நீ
ஆடை கட்டி வந்த வெண்பொங்கல் -
ஆசம் என்பேன் நான் கவித்தென்றல்

அறுசுவை இதழ் தரும் தேன் கனி
அழகென சொல்லிடும் இரு மான்விழி
அரைநொடி காண்பவன் உன்வழி
அவதியில் விழுபவன் படுகுழி
 

ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

 
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates