நிலவை இழந்த ஆகாயமாய்
நீயின்றி நகர்கின்றது வெறுமையாய்
கண்களில் தினம் பணிக்கும் நீர்
சிவந்தவிழியே காண்கிறேன்
தனிமையே ஒர் கொடிய நோய்
இனிமையே உன்னுடன் உரையடுவது
மலர்களைக்காணும் போதல்லாம்
மனமானது உன்னையே நினைக்கின்றது
என் காத்திருப்பு உனக்கானது
திருமணத்தில் நறுமணம் வீச வந்து விடு
ஆக்கம் மட்டுநகர்
கமல்தாஸ்
Keine Kommentare:
Kommentar veröffentlichen