Social Icons

Freitag, 16. September 2016

கவிஞர் ரி.தயாநிதி எழுதிய இடம் மாறிடும் இன அழிப்பு..!

விடியலுக்காய்
கடும் தவம்.
சுடும் வெய்யிலில்
நெடும் தூரம்
பாத யாத்திரை.!

தேசம் மலர
வாசம் பரப்பிய
புனித மலர்கள்.
தியாகமும் இவர்கள்
அர்ப்பணங்களும்
போராட்டங்களும்..!

எல்லாம் கரைந்து
காவிரி நதியால்
கலவரம் தரும்
பெரும் துயரம்.
ஈரம் உலர்ந்த
தேசங்களில் கோரம்
பெருகி குருதி
ஆறாய் ஓடுகின்றது.!

தமிழன் வாழாத
நாடுகள் இல்லை
அவன் அடி வாங்காத
நாட்களும் இல்லை.
இவன் பெருமைகள்
கல் வெட்டுக்களில்
கடாரம் வென்றவன்
பாடல் வரிகளில்..!

மூளைச் சலவையல்
இந்திய தமிழன்
சினிமாவால்
பெரும் சிதைவுக்குள்.
கட்டவுட் வைத்து
பால் வார்த்து
பாழாய்ப் போகின்றான்.!

காவிரி வந்தால் என்ன
வராமல் போனால் என்ன
தலை தளபதியின்
அடுத்த றிலீசுக்கும்
வசூலுக்கும் வாய்
பிளந்து கிடக்கின்றான்.
தமிழின அழிப்பு
இடம் மாறி தொடருது...
 
ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி
 
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates