யேர்மனி எசன் தமிழர் கலாச்சார நற்பணிமன்றத்தின் 31 வது ஆண்டு வாணிவிழா கலைமாலை 15,10.2016 அன்று வெகு சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் ,சிறுவர் சிறுமியர் பட்டாளங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.நடனம்,தமிழிசை,வயலினிசை,
வீணையிசை,மிருதங்க இசை,சுரத்தட்டு வாத்திய இசை,பெற்றோர்கள்,,குழந்தைகள் இணைந்து வழங்கிய நாடகம்,என பல்சுவை நிகழ்வுகள் இடம் பெற்றன.விழாவுக்கு வருகை தந்து சிறப்புரையாற்றி வாழ்த்திய நகர பிதா மதிப்புக்குரிய ரூடொல்ஃப் ஜெலினெக் அவர்களுக்கும் , மணிக்கிறாம் நிறுவனத்துக்கும் எங்கள் நன்றிகள்.நிகழ்வுகளை தந்து உதவிய நடன ஆசிரியைகளுக்கும்,நாடகம், மற்றும் ஏனைய ஆக்கதாரர்களுக்கும், விழா சிறக்க ஒத்துழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள். மண்டபம் போதாமை அறிவோம் பொறுத்தருள்க,,அடுத்துவரும் நிகழ்வுகளில் கவனம் கொள்வோம். இந்த வருடம் பிள்ளைகளின் வேண்டு கோளுக்கு எற்ப அவர்களுக்கான நினைவுப் பரிசுக்கான தொகையை,தாயகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு அந்தநிதியையும்,பார்வையாளர்கள் தந்த அன்பளிப்பையும் இணைத்து மேடையில் வைத்தே
வழங்கப்பட்டது.குறிப்பிடத்தக்கது.இந்த முன்மாதிரியை,நிகழ்த்திய குழந்தைகளுக்கும்,மன்றத்தினருக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
எதிர்கலச்சந்ததிகளை ஊக்குவிக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.நன்றிகள்.
செய்திப்பிரிவு-படங்கள். தமிழருவி. நயினை விஜயன்.