இதமாக ஜன்னல் ஓரம்
உனைத்தேடி எந்த நாளும்
இசைத்தேனே நெஞ்சில் கானம்
இளம் தென்றல் எங்கே நீயும்...
மழைச்சாரல் தூறும் நேரம்
மனதோரம் உன்தன் மோகம்
நனையாத என்தன் தேகம்
நிலையாக உன் நினைவில் வேகும்
உன் உருவம் மின்னல் போல
ஒளி கொடுத்து மறைகிறது
என் உயிரில் உன் நினைவு
வலி கொடுத்து வாழ்கிறது
விழி நீரும் மழை நீரில் கரைகிறது
விண் இறங்கி வா என் மன்னவா
விடையின்றி அலை பாய்கிற - என்
எண்ணங்களை கவியெழுதி சொல்லவா
உனைத்தேடி எந்த நாளும்
இசைத்தேனே நெஞ்சில் கானம்
இளம் தென்றல் எங்கே நீயும்...
மழைச்சாரல் தூறும் நேரம்
மனதோரம் உன்தன் மோகம்
நனையாத என்தன் தேகம்
நிலையாக உன் நினைவில் வேகும்
உன் உருவம் மின்னல் போல
ஒளி கொடுத்து மறைகிறது
என் உயிரில் உன் நினைவு
வலி கொடுத்து வாழ்கிறது
விழி நீரும் மழை நீரில் கரைகிறது
விண் இறங்கி வா என் மன்னவா
விடையின்றி அலை பாய்கிற - என்
எண்ணங்களை கவியெழுதி சொல்லவா
Keine Kommentare:
Kommentar veröffentlichen