எத்தனை முறை படித்தாலும்
காதலா இனிக்குதடா !
நீ எழுதிய காகிதம்
களவாய் படிக்கும் காதல் கடிதம்
கனவை நினைக்க வைக்குதடா !
நீ எழுதிய வாக்கியம்
ஒளிமறைவு இல்லையென
ஒழிமறைவா நான் படித்தேன்
விழி நிறைவு கொண்டதடா
என் உயிர் உன்மொழியில் உள்ளதடா
தனிமையுள்ள வேளைகளில்
தணிக்கும் தாகம் உந்தன் கடிதம்
தவிக்கும் நேரங்களில்
தாய் அருகிலிருந்தால் படிக்க கடினம்
துடிக்கும் இதயம் தினமும்
உன்பெயரை உரைக்கும்
பிடிக்கும் என்று சொல்வேன்
உன் உயிர் இருக்கும் வரைக்கும்
உன் கடிதம் முற்றுப்பெறும் போது
என் மூச்சு முட்டுதடா !
உன் முத்துச் சொற்கள் முடிச்சு போட்டு
நாக்கில் சுத்துதடா.!
காதலா இனிக்குதடா !
நீ எழுதிய காகிதம்
களவாய் படிக்கும் காதல் கடிதம்
கனவை நினைக்க வைக்குதடா !
நீ எழுதிய வாக்கியம்
ஒளிமறைவு இல்லையென
ஒழிமறைவா நான் படித்தேன்
விழி நிறைவு கொண்டதடா
என் உயிர் உன்மொழியில் உள்ளதடா
தனிமையுள்ள வேளைகளில்
தணிக்கும் தாகம் உந்தன் கடிதம்
தவிக்கும் நேரங்களில்
தாய் அருகிலிருந்தால் படிக்க கடினம்
துடிக்கும் இதயம் தினமும்
உன்பெயரை உரைக்கும்
பிடிக்கும் என்று சொல்வேன்
உன் உயிர் இருக்கும் வரைக்கும்
உன் கடிதம் முற்றுப்பெறும் போது
என் மூச்சு முட்டுதடா !
உன் முத்துச் சொற்கள் முடிச்சு போட்டு
நாக்கில் சுத்துதடா.!
Keine Kommentare:
Kommentar veröffentlichen