Social Icons

Dienstag, 12. Juli 2016

கவிக்குயில் சிவரமணி எழுதிய உனக்கே உனக்கு.

என்னை உணர்ந்த பூவே
ஏனோ உன்னில் மாற்றம்
கண்ணில் நிறைந்த அன்பை
கணக்கிடுவதும் முறையோ
முன்னே போல இல்லை
முழுதும் இப்போ வேறு.
எண்ணம் போல உணர்வாய்
எண்ணில் இல்லை பாவம்.

தன்னைக்கூட வருத்திடுவேன்
தளராத போதும்
உன்னைக்கண்டபின்னே தான்
உனக்கான வலி சுமந்தேன்.
பஞ்சு போல பொசுங்கிய மனம்
பரிதவிப்பில் அறியாயோ.

காயம் எல்லாம் காயமல்ல
கண்ணீரும் மிச்சமில்லை
வெண்ணை உடைந்த தாழியாக
வெதும்புது என் மனம்

கண்ணன் செய்த லீலையாய்
கண்மணியாய் உனை களித்திருந்தேன்
கசப்பு வார்த்தையினால்
காறி உமிழ்கிறாயே

இன்னும் நான் என்ன சொல்வேன்
இன்றுவரை நானேதான்
பெண் என ஆனபோதும்.
பொய்மை என்னிடமில்லை
புரிந்தால் உறவு அதற்கே ..
என் இதயம் திறவு..!!

கவிக்குயில் சிவரமணி

1 Kommentar:

  1. கவிதை வரிகள் மிகவும் அற்புதம் இரசித்தேன் வாழ்த்துகள்

    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    AntwortenLöschen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates