Social Icons

Donnerstag, 28. Juli 2016

செல்விகள் தர்சிகா யோகலிங்கம், அர்ச்சணா அற்புதராஜா ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம்

கனடாவில் பல வருடங்களாக இயங்கிவரும் அற்புத நர்த்தனாலயா நடனக் கல்லுாரி ஸ்தாபகர் ஸ்ரீமதி அற்புதராணி கிருபராஜ் அவர்களின் மாணவிகளான நடனச் செல்விகள் தர்சிகா யோகலிங்கம், அர்ச்சணா அற்புதராஜா ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் இன்று மிகவும் அற்புதமாக ஸ்காபுறோ நகரில் உள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
திருமதி ஜனனி ரவிசங்கர் மற்றும் ஜேர்மனி வாழ் ரமேஸ் ஜெயகுமார் ஆகியோர் முறையே ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக நடன ஆசிரியை சாந்தா பொன்னுத்துரை மற்றும் சிறப்பு விருந்தினராக திருமதி உமா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்த்தைகளால் நடனச் செல்விகளை வாழ்த்திச் சென்றார்கள். அரங்கேற்றச் செல்விகளுக்கு சபையோர் வழங்கிய கரகோசம் சீனக் கலாச்சார மண்டபத்தை மட்டுமல்ல, அந்த இடத்தைச் சூழவுள்ள பிரதேசத்தையே அதிர்வலைகளால் ஆடச் செய்திருக்கும்.
இரண்டு நடனச் செல்விகளும் தமது குருவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கள் அரங்கேற்ற உருப்படிகளை சிறப்பாகவே செய்தார்கள். ஒவ்வொரு உருப்படி மேடையில் இடம்பெறும் போதும் அது நிறைவுற்றபோதும் ஆசிரியை ஸ்ரீமதி அற்புதராணி அவர்களின் முகத்தில் தோன்றிய நம்பிக்கை ஒளி வீசிய புன்னகை, தமது மாணவிகளின் அர்ப்பணிப்புள்ள நடனத் தன்மைக்கு அவர் கொடுத்த அங்கீகாரத்திற்கு எடுத்துக் காட்டாக இருந்தது. ஆசிரியை ஸ்ரீமதி அற்புதராணி அவர்களின் நடனம் மற்றும் மொழி ஆற்றல் பற்றி அதிகம் சொல்லலாம். மேலும் நாட்டியாஞ்சலியில் பாடப்பட்ட பாடல் வரிகளை எழுதி அதை பாடகர் வர்ண ராமேஸ்வரனோடு சேர்ந்து நடனத்திற்கு ஏற்ற வகையில் பாடியது போன்ற விடயங்கள் அவரது தரத்தை இ்ன்னும் அதிகரித்துள்ளன.
மிகுந்த கவனமெடுத்து அனைத்து தரப்பினரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்ற, அரங்கேற்றம் கண்ட இ்ந்த செல்விகளின் கலைம மீதான ஆர்வம் அவர்களை படி ப்படியாக வெற்றியின் உச்சத்திற்கு எடுத்துச்செல்லும் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.
அரங்கேற்றத்தின் பக்கவாத்தியக் கலைஞர்களின் பங்களிப்புக்கள் அவர்களின் அனுபவம் மற்றும் ஆற்றல்ஆகியவற்றை எடுத்துக் காட்டின. பல மேடைகள் கண்ட இந்த மூன்று பக்கவாத்தியக் கலைஞர்களும் ஆசிரியை ஸ்ரீமதி அற்புதராணி அவர்களும் இன்று பெற்ற பாராட்டுக்கள் ஊடகங்கள் வாயிலாக உலகமெல்லாம் சென்றடைய வேண்டும் என்று கனடா உதயன் வாழ்த்துக்கின்றான்.
கனடா உதயன் செய்திப் பிரிவு











Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates