தமிழ் மணம் அறியாத ஒரு பிள்ளை வெறும் 4 வருடங்களில் தமிழ் முறையாக பயின்று பரதமும் முறையாக கற்று பெருமை சேர்க்கின்றாள்,
. 19/7/16அன்றய தினம் கொழும்பில் மிகவும் திறமையான முறையில் தன் நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தி காட்டினாள். லக்ஷாயினி குலேந்திரன். இவள் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை காட்டியவள்,
இவள் திறமை கண்டு அனைவரும் வியத்தே நிற்கின்றனர், அரபு நாட்டில் வளர்ந்து அரபு மொழியும், ஆங்கில மொழியையும் மட்டுமே அறிந்த இவள் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் மட்டக்களப்பு சிசிலியா பாடசாலையில் கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் பயின்று தமிழ் மொழி மூலம் பரீட்சையில் தோற்றி 9A (9விசேட) சித்திகளை பெற்று உயர்தரத்தை கொழும்பில் பயிலும் இவள் மேலும் இவள் கலையிலும் மொழியிலும் வளர்ச்சி ஓங்கி நிற்க
கலைஞர்கள் இணையம் எமது கலைஞர்கள் சார்பில் வாழ்த்துகின்றது
கலைஞர்கள் இணையம் எமது கலைஞர்கள் சார்பில் வாழ்த்துகின்றது
Keine Kommentare:
Kommentar veröffentlichen