ஈர்பத்து ஆயிரம் ஆண்டுகள் முன்
மூச்சோடு கலந்திட்ட முதல் மொழி வாழியவே.
மொகஞ்சதோரா, ஹாரப்பா, சுமேரிய
நாகரீகத்தின் முன் தோன்றிய மூத்தவள்
வாழியவே.
நாற்பத்து ஒன்பது நாடுகள் சேர்ந்த
குமரிக்கண்டத்தின் சரித்திரம்
படைத்தவள் வாழியவே.
முப்பத்திரண்டு மொழிகளைப் பெற்ற
முன்தமிழ் திராவிடம் வாழியவே.
ஆயிரம் ஆண்டு முன் எழுத்துருப்பெற்ற எம்மொழி வாழியவே.
சங்கங்கள் அமைத்து உயிர் தந்த
முத்தமிழ் வாழியவே.
வான்புகழ் கொண்ட வள்ளுவன்
தந்த உயர் மொழி வாழியவே.
தமிழன்னை அலங்கரித்த பெரும் காப்பியம் வாழியவே.
காதோடு குண்டலகேசி, கையோடு வளையாபதி, மார்போடு சீவகசிந்தாமணி,
இடையோடு மணிமேகலை, காலோடு சிலம்பும் அழகுற வாழியவே.
மூவேந்தர் தத்தெடுத்த உயிர் மொழி வாழியவே.
ஏழ்கோடி மக்களின் தேசிய மொழி
வாழியவே.
எண்கோடி மக்களின் இரண்டாம் மொழி
வாழியவே.
நவீன மயம் ஆங்கிலத்தில் ஆழ்ந்திடாமல் மீண்டிட வாழியவே
ஆக்கம் குமுதினி ரமணன் யேர்மனி

Keine Kommentare:
Kommentar veröffentlichen