Social Icons

Donnerstag, 18. Februar 2016

பூக்களைப்பறிக்காதீர்கள்...

மொட்டு விட்டு அலர்ந்த இளம் பூக்கள் வாழமுன் கசக்கி எறியப்படும் சேதிகள் கேட்டு கண்கள் கடலாகிறது. பெண்மைக்கு மதிப்பு மரியாதை கொடுத்து வாழ்ந்த இனத்திற்குள் பேய்களும் ரத்தக்காட்டேறிகளும் புகுந்தது எதனால்? பிள்ளைவளர்ப்பின் குறைபாடா? போதைபொருட்களின் தாக்கமா? வித்தியாவின் ரத்தக்கறை காயமுன்னே இன்று இந்த 14 வயதுக்குழந்தை காமுக பிசாசுகளால் கலங்கப்பட்டு கழுவேற்றப்பட்டிருக்கிறது... அடுத்த வீட்டில்தானே என்று கண்ணைமூடி இருந்தால் நாளை உங்கள் வீட்டு கதவை தட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்...,,வரலாறு படைத்த வீரம் விளையாடிய வன்னி மண்ணில் இந்த கொடுமையா?ஆண்டாண்டு காலமாக கட்டிக்காத்த கலாச்சாரமும், பண்பாடும் தொலைந்தே போய்விடுவதா?
ஐயகோ எப்படி இச்சம்பவத்தை எந்தன் வார்த்தைகளுக்குள் அடக்குவேன்? கண்களை மூடி ஒருகணம் சிந்தித்தால்
அந்த குழந்தை எப்படி துடிதுடித்து இருப்பாள்??? அவளின் இறுதி மூச்சு போகையில் அம்மா என்றுதானே கதறியிருப்பாள்.. இந்த வேதனையை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை... அங்கு பெண்பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் எத்தனை நாளைக்கு நெருப்பை வயிற்றில் கட்டிக்கொண்டு வாழ்வது?
காலம் பதில் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட்டு எமது குழந்தைகளை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழ்குடிமகனின் கடமை...
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்...
சமுதாயத்தின் தூண்களாக உள்ள ஆண்களே (தகப்பனோ தம்பியோ அண்ணாவோ)நீங்கள்தான் குழந்தைகளை நடமாடும் இந்த குட்டிப்பிசாசுகளிடமிருந்து காப்பாற்றியேஆகவேண்டும்...
மௌனித்து நீங்கள் இன்றிருந்தால் நாளை எம் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயம் புகுத்தப்படும்...
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு...என்பதற்கிணங்க... ஒன்று சேருங்கள்.. சட்டத்தால் இந்த பதர்களை அழித்துவிடுங்கள்... இல்லையென்றால் நீங்களே பதர்களை எரித்துவிடுங்கள்...
இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை... எழுத்துக்களை கண்ணீர் நனைக்கிறது... பெண்கள் நாட்டின் கண்கள்... பிடுங்கி எறியாதீர்கள்...

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates