மொழி பெயர்க்கமுடியா
என்னுணர்வுகள்
பிசுபிசுத்து
மூளைக்கனுப்பபடாத
சோகங்கள்
இயைபாக்கமற்ற
தசை வழியே
உருகிப்போகிறது.
என் கண்ணீர்
கோப்பைக்குள்
தெரியும்
வெண்ணிலவை
என் நினைவெறிந்து
துரத்துகிறேன்.
உன்னை
தொட்டுணர
முடியாதென்
விரல்களை
இறுக பொத்திக்கொண்டென்
மார்பில் குத்திக்கொள்கிறேன்.
என் நெஞ்சுடைத்து
வழியுமென் துக்கப்பெருக்கை
இடை நிறுத்திக்கொள்ள.
என் தலை பிய்த்து
பெருமூச்செறிகிறேன்.
உன் மார்பு கச்சைக்குள்
நுழைய முடியாதென்
காதல் கிரணங்களை
எகிப்திய பிரமிட்டுக்களுக்குள்
மம்மிகளாய் அடக்கம் பண்ணுகிறேன்
மீண்டுமோர் உயிர்ப்புவரா
உணர்வுகளாய்....
ஆக்கம்நெடுந்தீவு அரவிந்
Keine Kommentare:
Kommentar veröffentlichen