சீர்திருத்தம் நவீன மாற்றமுமாகலாம்.
யார் திருத்தம் செய்தாலும்
ஆர்வமுடன் வரவேற்று ஒத்துழைக்கலாம்.
ஊர் உறவு நன்மையடைய
ஏர் பிடித்துழுது விதைப்பதாக
ஓர்மமாய் கல்வி சமுதாயமென
சீர்திருத்தலெனும் ஒழுங்கு ஏற்படுத்தலருமை.
நிர்ப்பயமற்று வாழ மனிதர்
சர்வாலங்காரத்தில் தங்கம் குறைக்கலாம்.
கர்நாடகத் தன்மை அழித்து
சர்வமமாய் பெண் விழிப்புணர்வடையலாம்.
கள்ளமற்ற வகையில் நேர்மையாய்
பிள்ளைகள் வாழ சிறுவயதிலேயே
நல்ல பாதை அமைத்து
வல்லமையாயச் சமதாயம் சீர்திருத்தலாம்.
(ஓர்மம் – உறுதி)
ஆக்கம்
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரா
AntwortenLöschenதங்கள் வலையில் என் கவிதையை
இடம் பெறச் செய்ததற்கு.
(வேதாவின் வலை)