இதயம் பட படக்கிறது
சாலையோர விபத்தில் சிக்கிய
உடலாக உயிர் துடி துடிக்கிறது
நிம்மதி தேடியலைகிறது
மனம் தினம் தினம்
நிறைவில்லாத வாழ்வில்
ஏது வரைவிலக்கணம்
சொப்பனம் இல்லையென்றால்
மனித வாழ்வு நடைப்பிணம்
சொர்க்கமென்று வாழ்பவன்
உலகில் ஒரு விதம்
சம்சாரம் போனா சகலதும் போச்சி
உண்மையானால்
சந்நியாசியாக வாழ்பவன்
நிலையென்னயாகும்
நீ சொல்வாயானால்
குறை காணும் பூமியில்
நிலையாக வாழ்ந்திட உனை நீயே
செய்திடு தியாகம்
இறை சொன்ன வழியில்
மணம் வீசட்டும் உன் மரணம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen