சூரிய கதிரொளி சுடர்மிகு பரப்ப
வீரியமாய் உடல் விளைவாக எழ
பாரிய சக்தி பலம் மிகு தந்திட
காரிய சித்தி கனிவாய்ப் பிறந்திடும்
நாளைய விடியலின் நம்பிக்கை ஒளி
நயமாய் மனதில் முளைவிட
காலை வேலைகள் கனிவாய் தொடர
கன்னி முயற்சிகள் முகிழ்ப்பாய் அரங்கேறும்
அமைதியின் விடியலில் ஆனந்தம் பொங்கிட
அடுக்கடுக்காய் ஆயத்தங்கள் நிறைவு பெற
ஐம்புலன் அறிவும் தம்புலன் போட்டியிட
வென்றது மனது வெற்றியின் கழிப்பில்
ஒவ்வொரு விடியலும் தந்திடும் சுகம்
ஒளிமயமாய் இருக்கையில் ஓராயிரம் சுகம்
விடியல்தானே முனைப்பைக் கூட்டிடும்
நொடியில் வாழ்வை நுணுகிக் கற்றிடும்
விடியல் இல்லா வாழ்வு ஏது?
விளக்கு இல்லா ஒளி ஏது?
கவிஆக்கம் – நகுலா சிவநாதன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen