தின பத்திரிகையை வாசித்து ....
உலக நடப்பை விவாதித்து ....
கொண்டிருந்த இருவரை பார்த்து ....
தோளில் இருந்த துணியால் ....
வாயை பொத்திய படி சிரித்த ....
வழிப்போக்கன் ........!!!
பேசத்தொடங்கினான் ....!!!
விசித்திர உலகமையா ......
உண்மை உலகை ஒருமுறைசுற்றி.....
வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி .....
வந்து விடுகிறது - இதுதான் இன்றைய .....
உண்மையின் இன்றைய நிலை ....!!!
இதனால் தான் .....
தீர்ப்புக்களும் தீர்வுகளும் .....
காலம் கடந்தே போய்விடுகிறது .....
உண்மையை நிரூபிக்க முன் ....
பொய் உண்மையை கொஞ்சம் ....
கொஞ்சமாய் தின்று விடுகிறது .......!!!
உலகை ஏமாறுவதர்காக .....
இன்றைய சட்டங்களும் விதிகளும் .....
உண்மையும் பொய்யும் கலந்த ....
சட்டத்தில் இயங்கி வருகின்றன ......
எல்லோருக்கும் நல்லவனாக .....
சட்டம் வேஷம் போடுகிறது ......!!!
உலகில் ஒருபக்கம் அழிவு .....
மறுபக்கம் ஆனந்த கூத்து ......
இதற்கெல்லாம் காரணம் ......
சட்டம் "உண்மை பாதி" .....
" பொய் பாதி" ஆக இருப்பதே .....
வேதனை என்வென்றால் .....
உண்மையை நியாயப்படுத்த ....
முன்னர் பொய் அதனை .....
முழுமையாக தின்றுவிடும் .....!!!
இதுதான் இன்று ஈழத்தின் .....
உலக போக்காகும் ....
தனக்குள் முணு முணுத்த ...
படி சென்றான் வழிப்போக்கன் ....!!!
ஆக்கம் கவிப்புயல் இனியவன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen