அந்திம காலங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறேன்
அதற்குள் நர்த்தனமாடும்
சீதோட்சணமில்லா
என்மனம் வெறுக்கும்
பாவங்களுக்கு காசியும்
கங்கையும் கீரிமலையும்
ஏதோ என் பாவங்களை
கழுவுவதாய் பச்சாதாபம்
தேடுகின்றேன்.
அடித்துப்புழுகும் என் வாய்வார்த்தைகளில்
நம்பிஏமாரும் மனங்களுக்கும் பஞ்சமில்லை.நேத்திரமாய் நான் கொண்டகோலங்களில்
அதற்குப்பின்பும் முதலிருந்தே
அங்கு செல்ல ஆயத்தமாகின்றேன்.
தொடர்கதையாய் நகர்ந்து
கொண்டிருக்கும் பொருத்தமான
பொய்களில் இன்பங்கொண்டாடும் நான் மட்டும் வெந்தபாறையாய்
என் பாவங்கள் நிறைந்திருந்தாலும்
தொட்டுப்பார்க யாருக்கும் தகுதி(யுமில்லை)யளிக்கவில்லை.
ஆக்கம் நெடுந்தீவு
அரவிந்
Keine Kommentare:
Kommentar veröffentlichen