Social Icons

Montag, 2. Januar 2017

சபையோரால்; மண்டபம் நிறைந்து வழிந்த 'வணக்கம் ஐரோப்பா 2017 ' கந்தையா முருகதாஸ் அவர்களின் ஒருபார்வை

சபையோரால்; மண்டபம் நிறைந்து வழிந்த நிலையில் நடந்து முடிந்த 'வணக்கம் ஐரோப்பா 2017 ' கலை நிகழ்வு. சபையோர் முன்னிலையிலேயெ வரவு செலவுக் கணக்கை அறிவித்த முன்னோடிச் செயல்.

எழுத்தாளர் கவிஞர் ஆய்வாளர் நடிகர்  என பண்முகம் ஆற்றல்கொண்ட கந்தையா முருகதாஸ் அவர்களின் ஒரு நேரியல் பார்வை

நேற்றைய தினமான புதுவருடப் பிறப்பன்று (01.01.17) ஜேர்மனி ஒபகௌசன் நகரில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாதிப்புற்ற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக கலைக்கூடம் ஒன்றை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் நிகழ்வாக 'வணக்கம் ஐரோப்பா 2017 நெஞ்சம் மறக்குமா என்ற பல்துறை கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

சபையோரால் மண்டபம் நிறைந்து வழிந்த நிலையில் மேடையேறிய அத்தனை கலை நிகழ்ச்சிளும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு நடந்தன. சபையோர் மகிழ்ச்சியுடனும் வியப்புடனும் இரசித்து மகிழ்ந்தனர்.

இனிவருங்காலம் என்பது இளந்தலைமுறையினரின் கைகளிலேதான் என்பதை யாருமே மறுக்க முடியாது. இளந்தலைமுறையினரின் கலை நிகழ்வுகளும் பெரியவர்களின் நிகழ்வகளும் சபையோரை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தன.ஆர்ப்பரித்து இரசிக்க வைத்தன.

இந்த விழாவை ஐந்து அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்கள்.
விடுதலைப்பாடல்கள் திரையிசைப் பாடல்கள் என எல்லாவற்றையும் சபையோர் இரசித்தனர். ஈழ மக்களுக்கு எதிரான மக்கள் என்று யாரும் இல்லை என்பதையும். தவறுகளை கண்டிப்பதாலும் விமர்சிப்பதாலும் அதை நேர் கொள்ள முடியாதவர்கள் , மடியில் கனம் இருப்பவர்கள் பழிக்குப் பயப்படுவது போல பயந்து கொண்டு நானே எல்லாம் என்ற கோயல்பல்சின் தந்திரங்களை கட்டவிழ்த்து இந்நிகழ்விற்கு பல வழிகளிலும் இடைஞ்சல் கொடுத்துப் பார்த்தார்கள். (விமர்சனங்களையும் கண்டனங்களையும் நிராகரிப்பவர்களால் நேர்ப்பாதையில் செல்லவே முடியாது.)
ஆனால் எதுவுமே எடுபடவில்லை.பொதுமக்களின் ஆதரவுடன் இவ்விழா வெற்றிவிழாவாக நடந்திருக்கின்றது. பொது வாழ்வில் ஊழலற்றவன் எங்கும் எந்தச் சபையிலும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்பான் என்பதற்கு இந்த விழா சான்றாக அமைந்துவிட்டது.

இறுக்கமான புலம்பெயர் வாழ்வில் மக்களை ஆறுதல்படுத்த கலைவிழாக்கள் தேவை. இந்த விழா இரண்டு செயலைச் செய்திருக்கின்றது. மக்கள் இரசித்து சிரிக்க கலை நிகழ்ச்சிகளையும், நிகழ்ச்சிகளைப் பார்க்க மக்களால் கொடுக்கப்பட்ட நிதி விழுப்புண் அடைந்த போராளிகளின் கலைக்கூடச் சேவைக்கும் போயச் சேருகின்றது.

விழாவின் இறுதியில் அண்ணளவாக விழாவுக்கான வரவு செலவினை சபையோருக்கு விழா அமைப்பாளர்கள் வாசித்துக் காட்டியமை ஒரு முன்னோடிச் செயலாகும்.

'நாங்களே எல்லாம், நாங்கள் சொல்வதையே நீங்கள் கேட்க வேண்டும், கேட்காவிட்டால் மேடை இல்லை 'என்று கலைஞர்களை கொத்தடிமைகளா கோழைகளாக எண்ணியவர்களின் கோட்:டை பொதுமக்களின் ஆதரவினால் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.

ஓவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை என்பது அவனது பிறப்புரிமை. அதனைச் சீண்டினால் என்ன நடக்கும் என்பதை இந்த விழா சர்வாதிகாரிகளுக்கு நினைவூட்டிவிட்டது


























































Disqus Shortname

Comments system

 
Blogger Templates