Social Icons

Sonntag, 31. Juli 2016

தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை'யினால் நடத்தப்பட்ட 'முகடு' சஞ்சிகையின் இரண்டாம் ஆண்டு நிறைவைவிழா

இன்று பாரீஸ் நகரில் 'தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை'யினால் நடத்தப்பட்ட 'முகடு' சஞ்சிகையின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பிதழின் வெளியீட்டு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
முரண்பாடு கொண்ட பலரையும் உடன்பாடுடன் ஒரு தளத்தில் ஒருங்கிணைத்திருந்தமை பாராட்டுதற்குரிய செயற்பாடாக அமைந்திருந்தது.

Samstag, 30. Juli 2016

கவிமகன்.இ எழுதிய நீ உன் முடிவை சொல்லி விட்டாய்...!

நீ என்னை விட்டு
பிரிய நினைத்ததில்லை
என்னை இன்றிய வாழ்வுக்கு
ஆசைப்பட்டதும் இல்லை
முகத்துக்குள் முகம் வைத்து
பேசிய வார்த்தைகள்
வீதியோரம் வீசப்பட்ட
கடதாசியாய் காற்றோடு
அடிபட்டு செல்கிறது.

பிரியாத சொந்தமாய்
நீ பிரிந்து சென்று விட்டாய்
பிரிந்து விடாமல் இருப்பதாக
கண்ணுக்குள் கண்ணான
காதல் மொழியில்
சபதம் செய்தாய்
வெய்யில் பட்ட பனியாய்
கொடுத்த வாக்கை மீறி
நீ உன் முடிவை எடுத்து சென்றாய்

மனம் ஒன்றை மட்டுமே
எண்ணுகிறது
வாழ்க்கை பயணத்தின்
இறுதி எல்லை வரை
உன் கரம் என் கரத்தின்
பிடிக்குள் வேண்டும்.
குளிருக்கு சூடாய்
சூரியனின் எரிப்புக்கு குளிராய்...
எண்ணமெல்லாம் இது
நிறைந்து கிடக்க
வண்ணம் தொலைத்து
கருமைபூசி ஏன் சென்றாய்

சுயமாய் சிந்தக்க முடியாது
சுகமாய் சிரிக்க முடியாது
சிந்தை முழுக்க உன்
நினைவில் நான் என்பதறியாது
நீ சென்றே விட்டாய்
உன் கரம் தந்து
எனக்கின்னோர் தாயை
தருவாயா என்று என்னால்
கேட்க முடியவில்லை
நீ உன் முடிவை சொல்லி
நினைவை மட்டும்
விட்டு ஏன் சென்றாய்

என் முடிவை பற்றி
சிந்திக்கவே இல்லை
நீ போன திசையில் என்
விழிகள் நிலைத்து கிடக்கின்றன
நீ நடந்த பாதச்சுவடுகள் என்
இரத்தத்தால் நிரப்பப்பட்டு
உறைந்து கிடப்பதை கூட
நீ அறியாய்

நீ சென்று விட்டாய்
நீ பதித்த குருதிச் சின்னங்களோடு
நகர்கிறது இப்போதெல்லம்
என் பாதங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
விழியில் இருந்து வடியும்
குருதியின் இறுதித்துளி
உன் பாதச்சுவட்டை
நனைத்து கொள்ளும்
அப்போதெல்லாம் நான்
நடந்து வந்த பாதச்சுவட்டின்
இடம் ஈரமற்று காய்ந்து போகும்...
உன் பாத சுவட்டின் ஓரத்தில்
இரத்தம் தோய்ந்த உதடுகள்
பதியும் போதாவது உணர்ந்து கொள்
உன் வாழ்க்கை தன்
இறுதி துளி குருதியை
இழந்து விட்டது என்று...

ஆக்கம்   கவிமகன்.இ 

Donnerstag, 28. Juli 2016

செல்விகள் தர்சிகா யோகலிங்கம், அர்ச்சணா அற்புதராஜா ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம்

கனடாவில் பல வருடங்களாக இயங்கிவரும் அற்புத நர்த்தனாலயா நடனக் கல்லுாரி ஸ்தாபகர் ஸ்ரீமதி அற்புதராணி கிருபராஜ் அவர்களின் மாணவிகளான நடனச் செல்விகள் தர்சிகா யோகலிங்கம், அர்ச்சணா அற்புதராஜா ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் இன்று மிகவும் அற்புதமாக ஸ்காபுறோ நகரில் உள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
திருமதி ஜனனி ரவிசங்கர் மற்றும் ஜேர்மனி வாழ் ரமேஸ் ஜெயகுமார் ஆகியோர் முறையே ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக நடன ஆசிரியை சாந்தா பொன்னுத்துரை மற்றும் சிறப்பு விருந்தினராக திருமதி உமா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்த்தைகளால் நடனச் செல்விகளை வாழ்த்திச் சென்றார்கள். அரங்கேற்றச் செல்விகளுக்கு சபையோர் வழங்கிய கரகோசம் சீனக் கலாச்சார மண்டபத்தை மட்டுமல்ல, அந்த இடத்தைச் சூழவுள்ள பிரதேசத்தையே அதிர்வலைகளால் ஆடச் செய்திருக்கும்.
இரண்டு நடனச் செல்விகளும் தமது குருவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கள் அரங்கேற்ற உருப்படிகளை சிறப்பாகவே செய்தார்கள். ஒவ்வொரு உருப்படி மேடையில் இடம்பெறும் போதும் அது நிறைவுற்றபோதும் ஆசிரியை ஸ்ரீமதி அற்புதராணி அவர்களின் முகத்தில் தோன்றிய நம்பிக்கை ஒளி வீசிய புன்னகை, தமது மாணவிகளின் அர்ப்பணிப்புள்ள நடனத் தன்மைக்கு அவர் கொடுத்த அங்கீகாரத்திற்கு எடுத்துக் காட்டாக இருந்தது. ஆசிரியை ஸ்ரீமதி அற்புதராணி அவர்களின் நடனம் மற்றும் மொழி ஆற்றல் பற்றி அதிகம் சொல்லலாம். மேலும் நாட்டியாஞ்சலியில் பாடப்பட்ட பாடல் வரிகளை எழுதி அதை பாடகர் வர்ண ராமேஸ்வரனோடு சேர்ந்து நடனத்திற்கு ஏற்ற வகையில் பாடியது போன்ற விடயங்கள் அவரது தரத்தை இ்ன்னும் அதிகரித்துள்ளன.
மிகுந்த கவனமெடுத்து அனைத்து தரப்பினரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்ற, அரங்கேற்றம் கண்ட இ்ந்த செல்விகளின் கலைம மீதான ஆர்வம் அவர்களை படி ப்படியாக வெற்றியின் உச்சத்திற்கு எடுத்துச்செல்லும் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.
அரங்கேற்றத்தின் பக்கவாத்தியக் கலைஞர்களின் பங்களிப்புக்கள் அவர்களின் அனுபவம் மற்றும் ஆற்றல்ஆகியவற்றை எடுத்துக் காட்டின. பல மேடைகள் கண்ட இந்த மூன்று பக்கவாத்தியக் கலைஞர்களும் ஆசிரியை ஸ்ரீமதி அற்புதராணி அவர்களும் இன்று பெற்ற பாராட்டுக்கள் ஊடகங்கள் வாயிலாக உலகமெல்லாம் சென்றடைய வேண்டும் என்று கனடா உதயன் வாழ்த்துக்கின்றான்.
கனடா உதயன் செய்திப் பிரிவுஈழத் தென்றல் எழுதிய அகதிகளாக நாம்!

கருணை உள்ளம்
கொண்டவள் தான் நீ!
கூண்ட திறந்து விட்டாய்
இதோ நாங்கள் பறக்கின்றோம்! 

கூண்டுப் பறவைகளான நாம்
சுதந்திரம் எண்ணிப் பறந்தால்..
விட்டுப் பிரிந்த எம் இனம்
எம்மை சேர்க்காது என்பதை
நீ அறிய மாட்டாயா? 

எம்மை ஏன் சிறை பிடித்தாய்..
பெண்ணே.. பறந்து விரிந்த வானில்
இதோ, அகதிகளாக நாம்!
 ஆக்கம்
ஈழத் தென்றல்

Montag, 25. Juli 2016

பொத்துவில் அஜ்மல்கான் எழுதிய காலத்தின் கோலம்


பழுத்த புல்லு
வெலுத்த நெல்லு
அடிக்கத்தான் யாருமில்ல
என்ன நான் பாடுரன்
நின்னு

தூத்தி எடுக்கையில
தூய்மை கொஞ்சம்
ஆகுதப்பா
இப்ப

எட்டி நின்னு நான்
பார்க்கையில
தூண்டில்போல வேட்டுதய்யா
இந்த மிசின்

மிச்சம் என்று பார்க்க காசியும் இல்ல
இலஞ்சம் என்னு கொடுக்க நெல்லுமில்ல

தூக்கி வீசிய வைக்கோலும்
காசிக்குதான் போகுது
என்னு நானும் பாக்கையில்ல

ஒட்டு என்னு எட்டி
நின்னு நான் பார்க்கையில்ல
ஒட்டி உறவாடிய வேளையில

ஏழை எண்டறு நான்
படவில்லை
பாசமில்லாத இந்த
உலகத்துல

நேசம் கொண்ட
பாவத்துக்கு
நாசமா போனது போதுமையா

ஆக்கம் பொத்துவில்
அஜ்மல்கான்

Samstag, 23. Juli 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய தமிழே..!

பொன்வரி கொண்டு புனைகிறேன் தமிழே..!
புன்னகை பொழிகிறது என் மனதிலே
கண் நகை புரியும் காந்தம் நீதானே
கண்ணிமை போல் காப்போம் கவியை நாமே

இசை மீட்டும் என்னுள் நீயும் உயிரே
இசைவாக்கும் செய்யும் எந்தன் உறவே
உன்னில் உறவாடி மகிழ்வேன் தமிழே
உயர்வாக கருதும் என்றும் உலகே

படித்தவன் கையில் வரமாய் தமிழே
பாமரன் கண்ட புதுமையும் நீயே தமிழே
ஏட்டினில் சுவைக்கும் அமிர்தமும் தமிழே
ஏற்பார் உள்ள வரை உயருமெம் உயிர்த் தமிழே

ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

ஈழத் தென்றல் எழுதய என்னை மறந்தேன்

சிறகை விரித்தேன்
சிட்டென பறக்க..
வெட்டவெளி வானில்
பறந்தே சிறக்க.. 

அன்னமே உந்தன்
அழகில் திளைத்தே,
தேனுண்ட வண்டென
போதையில் திளைத்தே,
என்னை மறந்தே
சுகமாய் தூங்குகின்றேன்!

 ஆக்கம் 
ஈழத் தென்றல்

Mittwoch, 20. Juli 2016

லக்‌ஷாயினி குலேந்திரன். நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தி காட்டினாள்

 தமிழ் மணம் அறியாத ஒரு பிள்ளை வெறும் 4 வருடங்களில் தமிழ் முறையாக பயின்று பரதமும் முறையாக கற்று  பெருமை சேர்க்கின்றாள்,

. 19/7/16அன்றய தினம் கொழும்பில் மிகவும் திறமையான முறையில் தன் நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தி காட்டினாள். லக்‌ஷாயினி குலேந்திரன். இவள் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை காட்டியவள்,

 இவள்  திறமை கண்டு  அனைவரும் வியத்தே நிற்கின்றனர், அரபு நாட்டில் வளர்ந்து அரபு மொழியும், ஆங்கில மொழியையும் மட்டுமே அறிந்த இவள் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் மட்டக்களப்பு சிசிலியா பாடசாலையில் கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் பயின்று தமிழ் மொழி மூலம் பரீட்சையில் தோற்றி 9A (9விசேட) சித்திகளை பெற்று உயர்தரத்தை கொழும்பில் பயிலும் இவள் மேலும் இவள்  கலையிலும் மொழியிலும் வளர்ச்சி ஓங்கி நிற்க
 கலைஞர்கள் இணையம் எமது கலைஞர்கள் சார்பில் வாழ்த்துகின்றது

Dienstag, 19. Juli 2016

ஈழத் தென்றல் எழுதிய என்னில் ஏனிந்த மாற்றம்?

என்னில் ஏனிந்த மாற்றம்?
என்ன விந்தை இறைவா!

கண்களில் ஏனிந்த வெளிச்சம்,
நடையில் காணவில்லை சோர்வு..
உணரவில்லை இதயத்தின் அதிர்வு,
உணர்வினில் கூட தெளிவு..

பற்றிட கொம்பில்லா கிளையின்,
பரிதாப நிலையில் கிடந்தேன்..
சகலமும் நீக்கி இறைவா,
சட்டென தெளிவினை தந்தாய்!

நன்றி உரைப்பேன் உனக்கே!
எல்லாப் புகழும் உனக்கே!!
 
ஆக்கம் ஈழத் தென்றல்  
 

Samstag, 16. Juli 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய வஞ்சியுன் வதனம்

ஓரவஞ்சம் செய்யுதடி உன்னழகு -என்னில்
ஓசையெழுப்பி கொல்லுதடி எம்மனசு
ஈர நெஞ்சம் இலகுமாடி உனக்கு
ஈர்த்து உன் விழியால் என்னை உருக்கு

கன்னங்கள் கண்டு கற்பனை வருது
கங்கணம் கட்டி கவிதையும் எழுது
வஞ்சியுன் வதனம் வெண்பனி மெழுகு
வன்முறை செய்யுது என்னுள்ளம் அழுது

உமிழும் எச்சில் ஒரு தீர்த்தம் என்பேன் -என்
உடலில் பட்டால் அதை மோட்ஷம் என்பேன்
தமிழில் பேசு நான் கீர்த்தம் என்பேன் - நீ
தயங்கி நின்றால் நான் வருத்தம் கொள்வேன்

பவளமும் தோற்கும் பாவையுன் பற்கள்
பாக்களில் படைத்திட தேடுறேன் சொற்கள்
பூக்களின் மென்மை போல் பூவையுன் இதழ்கள்
பூமியில் உன்போல் பெண்கள் புதுவரங்கள்

               ஆக்கம் வித்தென்றல் 


                                                

 

ஈழத் தென்றல் எழுதிய அன்பிற்கு ஏது எல்லை?

எனக்கோர் வானம், எனக்கென்றே மேகம்
என்னுள் விழும் மழைத்துளி..
எப்போதும் விதைக்கும் கவித்துளி!

அனுபவங்கள் பாடங்கள் என்றால்
அனுதினமும் பரீட்சையே..
அன்றும், என்றும் அகிலம் ஓயும்வரை!

யதார்த்தமான உறவுகள் நாளும்
யன்னல் திறந்து பார்க்கும்..
யாதுமாகி உன்னை அலைக்கழிக்க பார்க்கும்!

உண்மை உணர்ந்த மனதில்
உறவாகும் அன்பு என்றும்..
உன்னை என்றும் உணர்ந்து கொள்ளும்!

அன்பிற்கு ஏது எல்லை?
அணையிட ஆயுதம் இல்லை..
அரவணைக்கும் எண்ணம் கொண்டால்,
ஆ(பேரா)சை அழிந்து போகும்!

ஆக்கம் ஈழத் தென்றல் 

Freitag, 15. Juli 2016

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத் எழுதிய ஓர விழிப் பார்வையிலே

ஓரவிழிப் பார்வையிலே
உசிர வச்சி தச்சவளே!
சீரவிழ்ந்த பேச்சாலே
சிந்தையினை பிச்சவளே

தேக்குமர தேகம் கொண்டு
தேவதையாய் ஈர்க்குற
பாக்கிறவன் கண்ணில் நின்று
பைத்தியமா ஆக்கிற .

கட்டழகி உன்னை எண்ணி
கனவுலயும் தவிக்கிறேன்.
பொட்டுக்குள்ள சிக்கி சிக்கி
போதையில் மிதக்கிறேன்.

ஒத்தையில் நீயும் நின்று
ஓரக்கண்ணால் பார்க்கிற
மெத்தையில் நான் படுத்தா
மெச்சி என்னைக் கொல்லுற

ரத்தமெல்லாம் சூடேறி
ரகளை பல பண்ணுதடி
பித்தம் வந்து தலைக்கேறி
பிச்சி என்னை மெல்லுதடி.

சத்தமில்லா நெஞ்சுக்குள்ள
சங்கமித்த கங்கைநதி - நீ
சந்தாகி வாழ்க்கையில
சஞ்சரித்த சங்கநிதி

எத்தனையோ நாள் கணக்கா
ஏங்கி நான் காத்திருக்கேன்.
ரத்தினமே ராத்திரியில்
எண்ணத்தில் பூப்பறிக்கேன்.

கொத்தான பூவையல்லாம்
கோர்வையில மாலையாக்கி
அத்தான் நான் சூட்டிவிட
ஆவலாய்த்தானிருக்கன்.

ரத்தினமே வாழ்க்கையில
சங்கிலியா இணைந்திருப்போம்.
முத்தான மாலையைப் போல்
முழுவதுமாய் பிணைந்திருப்போம்.

ஆக்கம் கவிஞர். ஏரூர் கே.

நெளஷாத்


 

Mittwoch, 13. Juli 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய சீதனம் பெண்ணின் மூலதனம்

 அம்மி மிதிச்சு
அருந்ததி பார்த்து அழகா முடிப்போம் திருமணம்
இல்லறம் தொடங்க
இம்மியளவும் குறையாமல் கொடுப்போம் சீதனம்

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன் உண்மை வாக்கியம்
சொல்லால் அடங்கா
சுகங்கள் பெற்றால் பெண்கள் பெரும் பாக்கியம்

பெண்ணை சீரழிக்க
பெற்றவர்கள் கொடுப்பதில்லை சீதனம்
தன்னை வாழ வைக்க
தங்கம், ரொக்கமுடன் கொடுப்பார் சொகுசு வாகனம்

கணவன் கேட்ட நகைகள்
கழுத்தில் ஆடி பலர்முன் அழகா ஜொலிக்கும்
அதிகம் கேட்டதாக
அயலவர்கள் கடும் சொல் கணவனை பழிக்கும்

கேட்டதெல்லாம் தனக்கல்ல
கெட்ட பெயரை மட்டும் அவனில் ஒற்றிக்கொள்ளும்
வரதட்சணை வாங்கி
வாழ்கிற கபோதியென்று ஊரே கரிச்சிக் கொட்டும்

தன் உழைப்பால்
தாலி கட்டி பெண் ஆசைகளை தீர்க்க முடியாது
அளவுக்கு அதிகமாக
ஆசைப்பட்ட பெண்ணை வைத்து உலகில் வாழ இயலாது

கைக்கூலி வாங்கி
கரைப்பான் தண்ணி போல அவள் காசி என்ற நினைப்பாலே
கடனாளி இல்லாமல்
கவலைகள் மறந்து நிம்மதியாக இருப்பான் அவள் கூட

சீதனம் கொடுத்து
சிறப்புடன் வாழுது பிள்ளை பெற்று தம்பதி
சீ என சொல்லி
சினத்தில் அலைகிறது வாழ்வினை வெறுத்த சில புத்தி

ஆக்கம்

கவித்தென்றல் ஏரூர்


                                      

 

Dienstag, 12. Juli 2016

கவிக்குயில் சிவரமணி எழுதிய உனக்கே உனக்கு.

என்னை உணர்ந்த பூவே
ஏனோ உன்னில் மாற்றம்
கண்ணில் நிறைந்த அன்பை
கணக்கிடுவதும் முறையோ
முன்னே போல இல்லை
முழுதும் இப்போ வேறு.
எண்ணம் போல உணர்வாய்
எண்ணில் இல்லை பாவம்.

தன்னைக்கூட வருத்திடுவேன்
தளராத போதும்
உன்னைக்கண்டபின்னே தான்
உனக்கான வலி சுமந்தேன்.
பஞ்சு போல பொசுங்கிய மனம்
பரிதவிப்பில் அறியாயோ.

காயம் எல்லாம் காயமல்ல
கண்ணீரும் மிச்சமில்லை
வெண்ணை உடைந்த தாழியாக
வெதும்புது என் மனம்

கண்ணன் செய்த லீலையாய்
கண்மணியாய் உனை களித்திருந்தேன்
கசப்பு வார்த்தையினால்
காறி உமிழ்கிறாயே

இன்னும் நான் என்ன சொல்வேன்
இன்றுவரை நானேதான்
பெண் என ஆனபோதும்.
பொய்மை என்னிடமில்லை
புரிந்தால் உறவு அதற்கே ..
என் இதயம் திறவு..!!

கவிக்குயில் சிவரமணி

Montag, 11. Juli 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய உன் பார்வை

ஊடுருவி தாக்குதடி உன் பார்வை
உயிரு உடலை விட்டு தாவுதடி உன்மேல
ஈடு கட்ட முடியலயே என் பாவை
ஊடு கட்டி விளையாடவா உன்னுள்ள

மூடு வந்து முனுமுனுக்கிறா முறப்பையா
மூணு முழப் பூக் கொடுத்தா உன் இரவய்யா
ஈடு கொடுத்து நான் இருப்பேன் உண்மையா
ஈரைந்து திங்கள் நான் சுமந்தா துன்பமய்யா

காடு வளம் நிறைந்திருக்கும் பூமியடி நான்
களையெடுத்து விதைக்க வாரேன் புரிஞ்சிக்கோடி
கூடு விட்டு கூடு பாயும் இது வித்ததான்டி - நாம்
கூத்தடிச்சி சேர்ந்திருந்தால் என்ன குத்தமாடி

பாடு பட்டு உழைக்கிறப்போ பயனளிக்கும்
பாவம் பார்த்து உணவளித்தால் பசி தீரும்
தேனெடுத்து நீ குடிக்க தெம்பிருக்கும் - நீ
தேருழுத்து தெருவில் விட்டால் ஊர் சிரிக்கும்
ஆதிமுதல் அந்தம்வரை - உலகில்
நிரந்தரமாக யாரும் இருந்ததில்லை
ஆணும் பெண்ணும் வாழ்ந்து - மண்ணில்
ஆசையின்றி யாரும் இறந்ததில்லை

ஆக்கம்

கவித்தென்றல் ஏரூர்


                                                

Samstag, 9. Juli 2016

கவிக்குயில் சிவரமணி எழுதிய இன்னும் மாறலை...!!

 எங்கோபோகுது உலகம்
உள்ளங்கையில் தவழுது இன்று
இருந்தும் இந்நிலை ??

மனித வர்க்கம் மாறுது
மலையைக்குடைந்தும் தேடுது
இருந்தும் இந்நிலை

பணத்தை இறைக்கும் அரசியல்
வரியாய் மனித வேர்வைகள்
இருந்தும் இந்நிலை

ஊருக்குள் பல இல்லங்கள்
சிறுவர் பெரியவர் மகளிர் என
இருந்தும் இந்நிலை

மனிதம் பேசும் மகாத்மாக்கள்
தர்மவானாய் உலவும் தர்மர்கள்
இருந்தும் இந்நிலை

நியாயம் பேசும் சட்டங்கள்
நீதிகேட்பவரையே துன்புறுத்தும்
இருந்தும் இந்நிலை

பிள்ளையின்றி பல
நல்ல உள்ளங்கள்
பிறப்பின் தேடலால்
இருந்தும் இந்நிலை

எண்சான் வயிறு
எறும்புக்கும்
பசியும் தாகமும் இருக்குமே
பாவப்பட்ட இவர்களை
கவணிக்க மட்டும் மானிடர் இல்லையோ
மனிதர்கள் தான் யாவரும்
இருந்தும் இந்நிலை.

எல்லாமே மாறுது
விண்ணிலே ஏறுது
மனிதமும தூங்குது
அதனால் தான்
இந்த இழிநிலை
இருந்தும் எந்நிலையானாலும.
இந்நிலை இன்னும் மாறலையே..!!

கவிக்குயில் சிவரமணி

Freitag, 8. Juli 2016

ஈழத் தென்றல் எழுதிய உன்னை நீ அறிவாய்!

பொய்களும், கற்பனைகளும் மட்டுமே
கலந்த கடந்த கால நினைவுகள்..

ஊரறிய உரைக்க இயலா
வாழ்வின் தழும்புகள் ..


முகம் மறைத்த முகமூடியின்
நிழலில் எத்தனை காலம் மறைந்திருப்பாய்?


இதோ, உன் விரல்களின் பதிவுகளே சாட்சி..
வடுக்களும், வலிகளும் மறப்பதற்கு அல்ல,


வழி நடத்த வந்த நீயே வழி தவறலாமோ?
உன்னை நீ அறிவாய் மனமே!


                          ஆக்கம் வித்தென்றல் 


                                                

Donnerstag, 7. Juli 2016

கவிஞர் எழுத்தாளர் தயாநிதிய நவீன நுழைவுகள்..!

விஞ்ஞான வேகம்
வேடிக்கை காட்டுது
செல்பிக் கலாச்சாரம்
சொல்லாமல் சொல்லுது
நில்லமல் நீளுது..
நிஜமான செய்திகள்.
நகர சுத்திகளின்
நையாண்டி இன்றைய
யதார்த்தம்..இவர்கள்
வீதியில் தினம்
கண்டு நகைக்கும்
செல்பிக் கூத்துக்கள்.!

முகத்தை கோணலாக்கி
அங்கவீனர்களாக்கி
அடிக்கடி எடுக்கும்
செல்பியால் முகநூல்
முற்றம் வடிவிழக்குது..!

பிரசவ அறையில்
பிறந்த பிள்ளை கண்
விழிக்க முன்னரே
தொட்டிலில் போட்டு
அழகு பார்க்காமல்
அதன் பேஸை
பேஸ்புக்கில் போட்டு
உலகறிய வைப்பதில்
செல்பி முதலிடமன்றோ..!

ஆனந்தக் களிப்பும்
அவசர எடுப்பும்
சந்தர்ப்பவாதிகளினால்
சந்திக்கும் வருவதுண்டு
சிந்திக்கத் தவறினால்
கண்ணீருக்கும் இடமுண்டு
காலம் கோலம்
மாறிக் கூத்தடிக்கும்..!ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி
படம் நன்றி Suga Rama

Mittwoch, 6. Juli 2016

கவிப்புயல் இனியவன் எழுதிய நட்பு

வருவது தெரியாது
வந்தால் போகாது
நட்பு 

பள்ளி பருவம் தொடங்கி
பல் விழுந்த பருவம் வரை
நட்புகண்டவுடன் கொண்டாலும்
கண்டமற்றது
நட்புதடக்கி விழுந்தால் தூக்கும்
தூக்கிவிடுவதே தொழில்
நட்புகாடு செல்லும் போது
முதல் கட்டை பிடிப்பது
நட்பு

Montag, 4. Juli 2016

கவிப்புயல் இனியவன் எழுதிய உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன்

என்னுடன் பேச ....
துடிக்கும் இதயங்கள் ....
ஆயிரம் ஆயிரம் .....!!!

உன்னோடு மட்டும்...
பேசத்துடிக்கும் என் ....
மனசை ஒருமுறை ....
நேசித்துப்பார் ....!!!

என்னை விட உன்னை ...
அப்படி நேசிக்க யாரும் ....
இருக்கமாட்டார்கள் ....
உனக்காக பலர் வாழலாம் ....
நானோ .....
உனக்காகவே உயிர்.....
வாழ்கிறேன் ....!!!


ஆக்கம் கவிப்புயல் இனியவன்Freitag, 1. Juli 2016

நெடுந்தீவு தனு எழுதிய இரசனை

என் அவள்
எங்கோ பிறந்த
தேவதை...
நீலப் பட்டுடுத்தி
வெண் நுரை
தலை சூடி
ஆடிவரும் ஆடல்
குழந்தை...

சல்லாபிக்கும்
இசை தாளங்களின்
ஆதி தாளம்
இவள்...

காற்றின்
சுவாச இராகங்களால்
தினம் தினம்
இரட்டிப்பாகும்
அபிநயக்காரி...

உயிரொன்றின்
பிறத்தலில்
சத்துருக்களை
விரட்டி விடும்
வீரப்பெண்...

அசைதலில்
உட்பொருள் கொண்ட
இலக்கணக்காரி..

அடங்கலில்
மாற்றங்கள் குறிக்கும்
சாத்திரக்காரி...

என் அவள்
எங்கோ பிறந்த
தேவதை...

தினம் தினம்
நான் விழிக்கும்
என் குழந்தை...

அந்தமில்லா பேருடலை
லயித்து நிற்கும்
இமை வெட்டா
கண்௧ளின் மறுபெயர்
என்னவளுக்கான
ரசணை...


ஆக்கம்  
நெடுந்தீவு தனு 

கவித்தென்றல் ஏரூர் எழுதிய அடடா அழகிய கண்ணா.!

உன் நிழலில் மயங்குது இம்மண்....
உன் நினைவில் கிறங்குது என் கண்கள்
நான் நிஜமா சொல்லுறேன் அடிபொண்ணே
நீ நெருங்கி வந்தென்னை தின்னு

அடடா அழகிய கண்ணா.!
என் அழகில் மயங்கிட வேணா.!
உன் ஆசை எதுவென சொன்னா.!
நாளும் வருவேன் உந்தன் பின்னால்

குளிரா வந்து தாக்கிடு பெண்ணே.!
குழந்தை போல் தூக்கிடு என்னை
தளிரா ஆடுது என் மனம் முன்னே
தாவணிக் கனவுள்ள பெண்ணே.!!

பூப்போல் மனசுள்ள பெண்கள்
பூமியில் பார்க்குது உன் கண்கள்
புலமையில் வியக்கிறாம் நாங்கள்
புலம்புவதேனோ நீ கவித்தென்றல்

            ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

 

Disqus Shortname

Comments system

 
Blogger Templates