Social Icons

Mittwoch, 30. November 2016

யேர்மனி அம்மா உணவகம் தலைவரின் பிறந்தநாளில் இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியது !

தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர்

இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு யேர்மனி , பேர்லின் நகரத்தில் இயங்கும் தாயக மக்களுக்கான பொதுநலச் சேவை அம்மா உணவகத்தால் வழங்கப்பட்டது. அம்மா உணவகம் இப் புனித மாதத்தில் மேலும் பல மாவீரர் குடும்பங்களுக்கான உதவிகளையும் , தாயகத்தில் அல்லலுறும் முன்னாள் போராளிகளுக்கும் சுயதொழில் வேலைத் திட்டங்களையும் உருவாக்கி கொடுத்ததோடு , சிறார்களுக்கான கல்வி உபகரணங்களையும் வழங்கியுள்ளது

தந்தை போலாகுமா! கவிதை வேதா. இலங்காதிலகம்.

முந்தைப் பண்புகளையும் சேர்த்து மிளிர்த்தியவர்
சிந்தை எண்ணங்களை வைரமாய் செதுக்கியவர்.
விந்தை உலகில் பெருமுறவு என்
தந்தை போலாகுமா சொல் உறவே!

பக்தியைப் பாங்காய் ஒளிர்ததிய சமயவாளர்
சக்தியாய் விடாமுயற்சியை என்னுள் ஊன்றியவர்.
பக்குவமாய் கேட்பவைகளை ஆரத் தழுவி
அக்கறையாய் உணர்ந்து அன்பளிப்புச் செய்தவர்.

வசந்தக் காற்றில் குளிர் சுவாசமாய்
கசந்திடாது ஊக்கமூட்டும் உங்கள் நினைவுகள்
அசர்தலற்ற தெவிட்டாத அற்புத சஞ்சீவி.
பிசங்கலற்ற பரிசுத்து உறவன்றோ தந்தை.

நீங்கள் மேலுலகம் சென்றாலும் அன்பான
உங்கள் ஞாபகக் கிடக்கைகளெனக்கு வைரம்.
தங்கமான கிராமத்து ஞாபகச் சுரங்கள்
அங்கம் முழுதும் ஓடுவது அப்பாவாலன்றோ.

இளவேனிலாக இதயத்தில் அப்பா என்றும்.
அளவற்ற நினைவு வேர்களை ஊன்றியவர்.
தளம்பாத என்னுயர்வின் அத்திவாரம் வேறெவர்!
வளமுயரவுதவும் தாய் தந்தை போலாகுமா!


பா ஆக்கம் வேதா.
இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

ஒற்றை மழைத்துளி!குறும் கவிதை மீரா , ஜெர்மனி

ஒற்றை மழைத்துளி
ஒர் உருவம் கொள்ள
வண்ணம் தீட்டும்
ஆசை மனதுக்குள்
தூரிகை இல்லாமல்
விழிகளின் முன்னே
ஓவியமாய் உருப்பெறும்
ஆக்கம் மீரா         ஜெர்மனி  

Dienstag, 29. November 2016

"பொன்மணி குலசிங்கம்" காலமானார்

ஒரு சகாப்தம் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டது.....
எங்கள் தாய்வீடாகிய இலங்கை வானொலியில் 'வானொலி மாமா' என அழைக்கப்பட்டவர்கள் பலருண்டு.
ஆனால் ஒரே ஒரு 'வானொலி அக்கா' மட்டுமே இருந்திருக்கிறார்.
அவரும் இன்று மறைந்துவிட்டார் என்ற இழப்புச் செய்தி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்து நம் நெஞ்சங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை......
கவி பாரதி, 'புதுமைப்பெண்ணை' வர்ணித்த இந்த வரிகளை நினைக்குந்தோறும், எமது மனக்கண்ணில் தோன்றும் உருவத்தின் பெயர்தான்-
"பொன்மணி குலசிங்கம்"
1960 ம் ஆண்டு 'சிறுவர் மலர்' நிகழ்ச்சிக்குப் போனபோது அந்நிகழ்ச்சியின் 'நிலையத் தயாரிப்பாளராக' அவரை சந்தித்த நாள்முதல் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் வந்தபின்னும்..... ஏன் கடைசியாக அவுஸ்திரேலியாவில், நடைதளர்ந்த நிலையில் ( ஆனால் கம்பீரம் சற்றும் குறையாத நிலையில்) சந்தித்தபோதும், அந்த அன்னையை 'அக்கா' என்றுதான் உரிமையோடும் பாசத்தோடும் அழைத்திருக்கிறேன்.
அம்மா என்று அழைக்காமல் அக்கா என்று அழைத்தது ஏன்?
60 பதுகளில், மழலைகளுக்காக அவர் 'ஓடிவிளையாடு பாப்பா' நிகழ்ச்சியை நடத்தியபோதும் - அவர் 'வானொலி அக்கா'
பின், மகளிருக்காக 'மாதர் பகுதி' நிகழ்ச்சியை நடத்தியபோதும்- அவர் 'வானொலி அக்கா'தான்.
வானொலி வரலாற்றில் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் பணியாற்றிய காலம் - ஒருபொற்காலம்.
ஒலிபரப்பு உதவியாளர்களாக தமிழ் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பினைப் பெறவும் பின்னாளில் அவர்கள் மிகச் சிறந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாகப் பரிணமிக்கவும் வித்திட்டவர்.
வானொலி நிலயத்திற்கென, தமிழ் மெல்லிசை வாத்திய இசைக்கலைஞர் குழுவினரை முதன்முதலில் உருவாக்கியவர்.
வடக்கைச் சேர்ந்த இசைக்கலைஞருக்கென யாழ்ப்பாணத்திலேயே ஒரு ஒலிப்பதிவுக் கலையகத்தை நிர்மாணித்தவர். யாழ் பகுதியிலே ஒரு ஒலிபரப்பி நிலையம் (transmitter) அமைப்பதற்கும் காரணியானவர்.
6 மணியோடு நிறைவுபெற்ற தமிழ் வர்த்தக ஒலிபரப்பினை இரவு 10 மணிவரைக்கும் விரிவு படுத்தியவர்.


தென்னிந்தியாவுக்கென தனியாக ஒரு வர்த்தக ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்து பெரும் வருமானத்தை ஈட்ட வழிவகுத்தவர்.
மத்தியகிழக்கு நாடுகளுக்காவும் தனியாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப வழிவகுத்தவர்.


ரூபவாஹினி ஆரம்பிக்கப்பட்டபோது உத்தியோகபூர்வமாக நடனமேதை 'சித்ரசேன' அவர்களது நாட்டிய நாடகம் ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும், அதற்கு முதல் நாளே 'Know your culture' என்ற பெயரில் 'பரதநாட்டியம்' பற்றிய ஒரு விவரணச் சித்திரத்தை முதன்முதலாக தயாரித்துச் சாதனை செய்தவர்(அந்நிகழ்ச்சிக்கு உதவித் தயாரிப்பாளர் என்ற பெருமையினையும் எனக்கு ஏற்படுத்தித் தந்தவர்)
எம்போன்றவர்களை ஊக்குவித்து கொழும்பிலும் யாழ்மண்ணிலும் நாடக விழாக்களை நடத்திச் சாதனை புரிந்தவர்.
திறமை உள்ளவர்கள் யாராயிருப்பினும் தட்டிக்கொடுத்து ஊக்குவித்த அந்த அன்னையைப்பற்றிய நினைவுகள் அடுக்கக்காய் வந்து நெஞ்சில் அலைமோதுகின்றன.


இனக்கலவரத்தின் பின்னரும் கூட, இரண்டாம் தரக் குடிமக்கள், போன்ற தாழ்வு மனப்பான்மை இன்றி, வானொலி நிலையத்தில் நாம் தலைநிமிர்ந்து நடக்கும் தைரியம், அவர் தமிழ் சேவையின் பணிப்பாளராக பணியாற்றிய காலம்வரை தொடர்ந்தது என்பதை, எமது சமகாலத்தில் பணியாற்றிய அனைவருமே இப்போது நன்றியோடு நினைவு கூர்வர் என நம்புகிறேன்.
'பிறப்பவர் எல்லோரும் என்றோ ஓர்நாள் இறப்பது நியதி'
என்ற உண்மையை உணர்ந்து உள்ளத்தைத் தேற்றி, அந்த அன்னையின் ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனை செய்வோம்.
குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Samstag, 26. November 2016

பிரிவும் ஒரு வகை மரணம்..கவிதை கவித்தென்றல் ஏரூர்

தாவணி போட்டு நான் நடந்தேன்
தண்ணீரில் தாமரை போல..
தாயவள் அன்பு தாங்கி நின்றது
தரணியில் நான் வாழ....

பெற்றவள் பெரும் கவலை - தன் பெற்ற
பெண்ணுக்கு திருமணம் அவள் கடமை
நற்குணமென்று தேடிடும் மாப்பிள்ளை
நாட்கள் நகர்ந்ததும் அறிந்திடும் அவன் பிழை

கற்பனை கனவுகள் கொண்டவள் மாது
கணவன் குற்றங்கள் குறைகள் கண்டிடும் போது
கட்டிலில் இன்பங்கள் காண்பது ஏது
கவலை கொட்டிடும் மனது விடியாது

இல்லற வாழ்வினில் இல்லாத ஏழை
இணைந்து கொண்டதும் வாழ்வாகிடும் பாலை
உள்ளதை சொல்லிட முடியாத பாவை
உள்ளுக்குள் உருகிடும் உணர்வுள்ள ஊமை

பிரிவு வந்து எரிக்கும் தன் உடலை
பாலுணர்வு கொண்ட பெண் விடலை
திணிக்கும் இரவு சுடும் தினமும் அவளை
தியாகம் செய்து வாடும் பெண் அவலை

இழந்ததை பெற்றிட நினைக்கும்
இன்பம் இரண்டென கலந்திட துடிக்கும்
நடந்தவை கண்முன்னே இனிக்கும் - உணர்வுகள்
நிழலின்றி தனிமையில் நடக்கும்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்


தமிழீழத்தலைவர் மேதகு திரு பிரபாகரன் அவர்களின் 62 வது பிறந்தநாள்வாழ்த்து 26.11.16

அடிமை விலங்கொடித்த வீரத்தலைவன்
தாயிடம்
கருவாகி
உருவாகி
பூமியில்
பிறந்தநாள்
அகவை அறுபத்தியிரண்டு இன்று
இவன் -விடிவின் கதிர் ஒளி
வீரத்தின் முரசொலி
தலைவனின் குரல்கேட்க
தரணியில் பறந்தது புலிக்கொடி
கொடிகாண புலிக்கொடி
எழுந்தது தமிழ் புலி
விடிவாழ வந்தது எங்கள்
வீரப்புலிக்கொடி
விழிப்புக்கு குரலடி
வீரத்தில் புலிக்கொடி
வியத்திட வரும் இனி
விழித்திடு புலிக்கொடி
கருப்பிள்ளை பெயர்சொல்லும் - உன்
கடமையை உலகு  போற்றும்
சிறப்புடை போர்தன்னை
சித்தரித்து உலகம் போற்றும்
நாயகனே
வாழ்க பல்லாண்டு வளம்கொண்டு நுாறாண்டு

ஆக்கம் ஈழத்து இசைக்கவிஞன் எஸ்.தேவராசாகார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை
கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை போல் இந்த ஆண்டும் கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் ஒழுங்கு செய்யபப்ட்டு தரப்படும் என அறியத்தரப்படுகினறது.
அதற்கான விபரங்கள் கீழே தரப்படுகின்றன..
பேருந்து 1
Malvern Mall
Denison Plaza
(In front of Mc Donalds)

12:45 p.m. -1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m.
ERAA Super Market
(Morningside and Finch)
1:00 p.m. – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m
New Spice Land
(Markham and Steels) (McCowan &
Denison)
1:15 p.m – 1:30 p.m. 1:30 p.m. – 1:45 p.m.
5:15 p.m. – 5:30 p.m. 5:30 p.m. –
5:45 p.m.
பேரூந்து 2
Eraa Super Market
(Midland & Eglinton)
12:30 p.m. -12:45 p.m.
4:30 p.m. – 4:45 p.m.
SP Importers
(Brimley & Lawrence)
12:45 p.m. – 1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m
Asian Textiles
(Markham and Lawrence)
1:00 p.m – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m.
20 Taxedo Crt
(Markham and
Ellesmere) (McCowan & Denison)
1:15 p.m. – 1:30 p.m.
5:15 p.m. – 5:30 p.m.
Woodside Cinema
(Mc Cowan & Finch)
1:30 p.m. – 1:45 p.m.
5:30 p.m. – 5:15 pm
பேருந்து 3
Columbia Video
(Kennedy and Steels, Brampton)
4:00pm- 4:30pm
Uthayas Super Market (Kipling &
Steels)
4:30pm – 5:00pm
Arun Bakery
(Jane and Major Mackenzie, in front of Wonderland)
5:00pm – 5:30pm
இங்கு தரப்பப்டும் தொடர்பு இலக்கனலுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
1) Maria – (647)-856-6548
2) Punith- (647)-389-7120
3) Komala (416)-451-5241
கனடிய நினைவெழுச்சி அகவம் தொடர்பு இலக்கம்- 647 980 – 5219
- See more at: http://www.canadamirror.com/canada/74815.html#sthash.zAKn5jsV.myyi4gdv.dpuf
கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை
கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை போல் இந்த ஆண்டும் கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் ஒழுங்கு செய்யபப்ட்டு தரப்படும் என அறியத்தரப்படுகினறது.
அதற்கான விபரங்கள் கீழே தரப்படுகின்றன..
பேருந்து 1
Malvern Mall
Denison Plaza
(In front of Mc Donalds)

12:45 p.m. -1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m.
ERAA Super Market
(Morningside and Finch)
1:00 p.m. – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m
New Spice Land
(Markham and Steels) (McCowan &
Denison)
1:15 p.m – 1:30 p.m. 1:30 p.m. – 1:45 p.m.
5:15 p.m. – 5:30 p.m. 5:30 p.m. –
5:45 p.m.
பேரூந்து 2
Eraa Super Market
(Midland & Eglinton)
12:30 p.m. -12:45 p.m.
4:30 p.m. – 4:45 p.m.
SP Importers
(Brimley & Lawrence)
12:45 p.m. – 1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m
Asian Textiles
(Markham and Lawrence)
1:00 p.m – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m.
20 Taxedo Crt
(Markham and
Ellesmere) (McCowan & Denison)
1:15 p.m. – 1:30 p.m.
5:15 p.m. – 5:30 p.m.
Woodside Cinema
(Mc Cowan & Finch)
1:30 p.m. – 1:45 p.m.
5:30 p.m. – 5:15 pm
பேருந்து 3
Columbia Video
(Kennedy and Steels, Brampton)
4:00pm- 4:30pm
Uthayas Super Market (Kipling &
Steels)
4:30pm – 5:00pm
Arun Bakery
(Jane and Major Mackenzie, in front of Wonderland)
5:00pm – 5:30pm
இங்கு தரப்பப்டும் தொடர்பு இலக்கனலுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
1) Maria – (647)-856-6548
2) Punith- (647)-389-7120
3) Komala (416)-451-5241
கனடிய நினைவெழுச்சி அகவம் தொடர்பு இலக்கம்- 647 980 – 5219
- See more at: http://www.canadamirror.com/canada/74815.html#sthash.zAKn5jsV.myyi4gdv.dpuf

Donnerstag, 24. November 2016

khjgdhsf


கனடா வாழ் ஈழத்தமிழர்களுக்கு கார்த்திகை 27க்கானஅறிவித்தல்!

ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை

கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை போல் இந்த ஆண்டும் கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் ஒழுங்கு செய்யபப்ட்டு தரப்படும் என அறியத்தரப்படுகினறது.

அதற்கான விபரங்கள் கீழே தரப்படுகின்றன..

பேருந்து 1

Malvern Mall
Denison Plaza
(In front of Mc Donalds)

12:45 p.m. -1:00 p.m.

4:45 p.m. – 5:00 p.m.

ERAA Super Market
(Morningside and Finch)

1:00 p.m. – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m

New Spice Land
(Markham and Steels) (McCowan &
Denison)

1:15 p.m – 1:30 p.m. 1:30 p.m. – 1:45 p.m.
5:15 p.m. – 5:30 p.m. 5:30 p.m. –
5:45 p.m.

பேரூந்து 2

Eraa Super Market
(Midland & Eglinton)

12:30 p.m. -12:45 p.m.

4:30 p.m. – 4:45 p.m.

SP Importers
(Brimley & Lawrence)

12:45 p.m. – 1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m

Asian Textiles
(Markham and Lawrence)
1:00 p.m – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m.

20 Taxedo Crt
(Markham and
Ellesmere) (McCowan & Denison)
1:15 p.m. – 1:30 p.m.
5:15 p.m. – 5:30 p.m.

Woodside Cinema
(Mc Cowan & Finch)

1:30 p.m. – 1:45 p.m.
5:30 p.m. – 5:15 pm

பேருந்து 3

Columbia Video
(Kennedy and Steels, Brampton)

4:00pm- 4:30pm

Uthayas Super Market (Kipling &
Steels)

4:30pm – 5:00pm

Arun Bakery
(Jane and Major Mackenzie, in front of Wonderland)

5:00pm – 5:30pm

இங்கு தரப்பப்டும் தொடர்பு இலக்கனலுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

1) Maria – (647)-856-6548
2) Punith- (647)-389-7120
3) Komala (416)-451-5241

கனடிய நினைவெழுச்சி அகவம் தொடர்பு இலக்கம்- 647 980 – 5219
- See more at: http://www.canadamirror.com/canada/74815.html#sthash.zAKn5jsV.myyi4gdv.dpuf

"சித்திரமும் கற்பனையும்" கவிதை ஏரூர் எழுதிய

சிலையொன்று சிரிக்கக் கண்டேன் - மனம்
சிதைவுற்று துடித்து நின்றேன்
சித்தாடை கட்டி வந்து - மங்கை
சிரித்து சுட்டாலே கண்ணைக் கொன்று

சிறை பிடிக்கும் விழிகள் தீயோ
சிந்து நதி செம்மீன் தானோ - உன் சிகை
சிறகடிக்கும் இருள் வானோ - என்
சிந்தைகளை நதியோடும் திருடுவேனோ ?

சிங்காரி உன் சில்மிசத்தில் நாளும்
சிற்றிடையில் நானமர சிம்மாசனம் வேணும்
சீக்கிரமா சொல்லி விடு நீயும்
சில காலம் உயிர் வாழ்ந்தால் போதும்

சிக்கன் குனியா வந்தது போல்
சீக்குல நான் துடிக்கிறேன்
சித்திரமே உன்னை நினைத்து
செத்து தினமும் பிழைக்கிறேன்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்

Dienstag, 22. November 2016

விதை!..கவிதை மணியம்

விதை
தந்தை விதை போட்டார்
தாயார் பயிர் வளர்த்தார்
வயலில் நிற்காமல்
வந்துவிட்டோம் வெளியினிலே!
நாங்கள் விதை போட்டு
நல்லபயிர் வளர்ப்போமா?
நாட்டுக்கும் மொழியினுக்கும்
நற் தொண்டு செய்வோமா?
ஏக்கம் எங்களுக்குள்
எமது விதை என்ன செய்யும்?

ஆக்கம் மணியம்

Montag, 21. November 2016

தபோலா வாத்தியக்கலைஞர் ரவி காலமானார்

யாழ்.அல்வாய்- வடக்கைச்  பிறப்பிடமாகவும் , கடந்த 30 ஆண்டுகளாக யேர்மனி- எசன் நகரில் வாழ்ந்து
வந்தவருமான பிரபல தபோலா றம் மேளம்  என பல வாத்தியக் கருவிகளை  மேடைநிகழ்வுகளில் மீட்டி சிறப்பித்த சிறப்பான கலைஞன் ரவிச்சந்திரன் ராஜரட்ணம் அவர்கள்-,ரவி- இன்று எசனில் காலமாகி விட்டார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இவர் சாந்தியின் அன்புக்கணவரும், கீர்த்தன்,தூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.இத்தகவலை, நண்பர்கள்,உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் மகன் கீர்த்தன் ரவி.

Donnerstag, 17. November 2016

மார்க் ஜனாத்தகன் எழுதிய கவிதை நூலின் வெளியீட்டு விழா17.11.2016

மார்க் ஜனாத்தகன் எழுதிய கவிதை நூலின் வெளியீட்டு விழா
(முகநூலினால் மூச்சு கொடுப்போம்)
ஈழத்தில் மல்லாவியைச் சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்து தேசத்தில் வசிப்பவருமாகிய மார்க் ஜனாத்தகன் அவர்கள் எழுதிய 'ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 17.11.2016 வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு, மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெறும். எமது ஈழப்படைப்பாளியின் இந்த முயற்சிக்கு கரம் கொடுத்து உயர்த்துவோம்.

Mittwoch, 16. November 2016

ஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் 19.05.2016 காலமானார்

ஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார்.
19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது.
யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்கு முன்னர் தனது இசை வித்துவத்தால் பல்லாயிரம் இரசிகர்களைக் கவர்ந்துகொண்டவர் யாழ் சீலன்.
''யாழ்ப்பாணத்தில் இசைவாணர் எம்.கண்ணன் அவர்கள் இருந்திருக்காவிட்டால் நான் இசைக்கலைஞனாகியிருக்கமாட்டேன். என் இசைக்கடவுள் கண்ணன் அவர்கள்'' எனக் கூறி வந்தவர் யாழ்.ரி.சீலன்.
இவர் தொடாத வாத்தியங்கள் இல்லை என்றே கூறலாம். கிற்றார் வாத்தியம் இசைப்பதில் புகழ்பெற்றிருந்தவர், மேலும் கீ போட், புல்லாங்குழல், வீணை, மிருதங்கம், ஈற்றில் ஸ் ரீல் கிற்றார் போன்ற வாத்தியங்களை இசைப்பதில் மிகவும் கைதேர்ந்தவராக விளங்கி வந்த எங்கள் தேசத்தின் இசைச் சொத்து.
கலாலயா இசைக்குழுவிலே தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தவர் தொடர்ந்து யாழ் நகரில் இயங்கிவந்த பல்வேறு இசைக்குழுக்களில் தனது பங்களிப்பை வழங்கி வந்தார்.
‘சீலன்ஸ்ரோன்’ என தனியாக ஓர் இசைக்குழுவையும் இவர் இயக்கியிருந்தார்.
தாயக மண்ணை விட்டுப் புலம் பெயரும் வரை யாழ் சுண்டுக்குளி ராஜன்ஸ் இசைக்குழுவில் அங்கம் பெற்று கீ போட், கிற்றார் போன்ற வாத்தியங்களை ஒரே வேளையில் இசைத்து இரசிக உள்ளங்களை மகிழ்வித்து வந்தார்.
பிரிட்டன் நாட்டுக்கு வருகை தந்த சீலன் அவர்கள் ரெய்ன்போ இசைக்குழுவின் வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்துக்கொண்டார்.
நாடக ஆசான் ஏ.சி.தாஸீஸியஸ் அவர்களின் நாடகங்களுக்கு இசையமைப்பதில் முழுமையான சிரத்தையோடு ஈடுபட்டுவந்தார்.
ஐபிசி தமிழ் 1997ல் லண்டன் - வொக்ஸோல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் தனது ஒலியமைப்பு தொழில் நுட்பத்தை பகிர்ந்திருந்தார்.
கலைஞர்களுடன் மிகவும் நேசத்துடன் உறவாடிவந்த யாழ் சீலன் அவர்களை கடந்த 07.05.2016 அன்று வைத்திய மனையில் பாடகர் கே.எஸ்.பாலச்சந்திரன் - ஜேர்மனி, பாடகர் எம்.பாக்கியராஜா - டென்மார்க், இசைக்கலைஞர் எம்.குருநாதன் - பிரிட்டன், இசையமைப்பாளர் கே.சுந்தர் (குட்டி மாஸ்ரர்) - நோர்வே, - நோர்வே இசைக்கலைஞர் ஆர்.கணேஸ் , ஆகியோர் சகிதம் சென்று பார்க்க முடிந்தது.
எம்மைக் கண்டதும் மிகவும் சந்தோசமடைந்தார்.
அவரது கடைசி நிமிடங்களில் சந்தித்துக்கொண்டதில் எமக்கும் திருப்தி.
ஈழத்து இசையுலகில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் யாழ்.ரி.சீலன்.
வாழ்க யாழ்.ரி.சீலன் புகழ்.

Sonntag, 13. November 2016

முல்லைத்தீவு தேசிய இளைஞர் சேவையினரால் முன்னெடுக்கப்பட்ட மூன்றுநாள் பயிற்சி நிறைவுகண்டது (நிழல்படங்களைபார்க்க)

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவையினரால் மூன்று நாட்கள்  தலைமைப்கயிற்சி முள்ளியவளை மகாவித்தியாலயத்தில் மகவும் சிறப்பாக இளைஞர்கள் மாவட்ட வளவாரை யுவதிகளும்  இளைஞகளும் சிறப்புடன் கலங்து கொண்டனர்  இதில் முல்லை நாடகக் கலைஞர்,யோகா பயிற்றுவிப்பாளருமான  குமாரு. யோக்கேஸ் அவர்கள் தியானப்பயிற்றியை  வழங்கி தலைமைப்கயிற்சி நிறைவு கண்டள்ளது இதில்  வேறு பயில்றுவிப்பாளர்கள் அரச ஊழியர்கள் என கலந்து பறின்றவர்களுக்கான  சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்ததுடன் நிகழ்வு நிறைவானதுDisqus Shortname

Comments system

 
Blogger Templates