Social Icons

Freitag, 23. Dezember 2016

கரிசல் காட்டு கரும்புப் பூவ!கவிதை கவித்தென்றல் ஏரூர்

தென்றல் வீசும் வேளையிலே - கவித்
தெம்மாங்கு பாடிவந்தேன் சோலையிலே
தென்னங்கீற்று கிளிபோல
தேடி வந்தேன் நான் மாலையிலே

பத்த வைச்ச வாழையில போல
பத்தினியா நானிருக்கேன்யா காள
பாசம் வைத்து வாடுதுய்யா உன் பாவை
பாவம் பார்க்க தோணலியா உன் பார்வை

எத்தனை நாள் காத்திருக்கேன்
ஏங்கி ஏங்கி பாத்திருக்கேன்
என்னுசுர தாங்கிருக்கேன்
எந்நேரமும் உன் நினப்பில் தானிருக்கேன்

கிழக்கப் பார்த்து போறீயே
கிறுக்கா நானும் இருக்கேனே
சிறுக்கி என்னை பாத்தாலே
சீவன் என்னுடலில் இருக்குமே

எட்டி எட்டி உதைக்கிறது
இரவில் வந்து உன் நினப்பு
இருட்டில் நானும் துடிக்கிறேனே
என்ன இது உன் குறும்பு

கரடு முரடு மனசா உனக்கு
கரும்பா மாத்த என்னை உருக்கு
கழனிக் காட்டில் என்ன இருக்கு
கரும்புச் சாறா தாறேன் உனக்கு

கொலுசு சத்தம் கொல்லுதென்ன
கொழுவிருக்க எண்ணுதுன்ன - இந்த
கரிசல் பூவ பாரு பச்சமண்ணே
கரிசனையா வந்து சேரு ஆசை மச்சானே
 

Sonntag, 11. Dezember 2016

யார் இந்த ரோஜா....?கவிதை பொத்துவில் அஜ்மல்கான்

இதழோடு இதழ்
உரசிக் கொண்ட போது
பூர்வ ஜெம்ம ஞாபகங்கள்
என் உள் நொஞ்சில்
வந்தது.
என் பூர்வ ஜெம்மத்தில்
பூத்துக்கிடந்த காதலின்
ஞாபகம் என் மீது
ஓடியாது.
யார் இந்த ரோஜா
என்று பார்த்தால்
உன்னை என்று பித்துப் பிடிதவனாய் கூறுகின்றது
என் உள்ளம்
என்ன மாயம் பல
முறை வரமடுத்தது நம்
காதல் என்று அறியாமல்
தோடுகிறேன்.
ஆக்கம் பொத்துவில் அஜ்மல்கான்

Samstag, 10. Dezember 2016

இதயமே...! கவிதை நெடுந்தீவு தனு

கண் பார்க்கும் என்னவளே
மண் பார்த்து மெல்ல நட
உன் உதட்டு சிரிப்பாலே
என் இதயம் நகருதடி...

கட்டை விறகு கவனமடி
மட்டை தாண்டி தூக்கி வீசு
காடு மேடு கடந்திருப்பாய்
கால கொஞ்சம் நீட்டித் தூங்கு...

கை வளையல் ஓசையிலே
தை வருவதும் இதுதானோ
வளை புருவ நெற்றியிலே
விதை முளைப்பதும் அழகு புள்ள...

மனசோரம் எனை வைச்சு
தவிப்போடு இருப்பவளே
உனதருகில் நானிருந்து
தந்திடவா என் நகலை...

தலையிலே துணிவைச்சு
சாலை நோக்கி வருபவளே
காலையிலே நானும் வருவேன்
மாலைக்குள்ளே மணந்திடுவோம்...

ஆக்கம்  

நெடுந்தீவு தனு 

Freitag, 9. Dezember 2016

கனவுகளும் கவிதை படிக்கும்..!கவிதை கவித்தென்றல் ஏரூர்

என்னை சிறை பிடித்தது
நீ மட்டும் அல்ல
உன் நினைவுகளும் தான்

நான் சொல்ல
நினைப்பதெல்லாம்
எந்தன் இந்த எழுத்துகள் தான்

என் சொந்தம்
என்று சொல்வேன்
உன் ஒருவனைத் தான்

கனவுகளும் கவிதை படிக்கும்
உன் நிழலில் நின்று
என் உயிரும் அடம் பிடிக்கும்
என்னில் நீயே என்று

ஒவ்வொரு பொழுதுகளும் கனக்கிறது
உன்னை எண்ணி எண்ணி
உன் நினைவுகள்
என்னை தின்று குடிக்கிறது
உண்மைச் சொல்லி

விழிகளில் நிறைந்தவனே
எந்தன் வலிகளை மறைக்கிறேன்
ஒரு விடை தருவாயா நீ
என் உணர்வுகள்
உயிர் பெற வருவாயா நீீ

என்னை சிறை பிடித்தது
நீ மட்டும் அல்ல
உன் நினைவுகளும் தான்

நான் சொல்ல
நினைப்பதெல்லாம்
எந்தன் இந்த எழுத்துகள் தான்

என் சொந்தம்
என்று சொல்வேன்
உன் ஒருவனைத் தான்

கனவுகளும் கவிதை படிக்கும்
உன் நிழலில் நின்று
என் உயிரும் அடம் பிடிக்கும்
என்னில் நீயே என்று

ஒவ்வொரு பொழுதுகளும் கனக்கிறது
உன்னை எண்ணி எண்ணி
உன் நினைவுகள்
என்னை தின்று குடிக்கிறது
உண்மைச் சொல்லி

விழிகளில் நிறைந்தவனே
எந்தன் வலிகளை மறைக்கிறேன்
ஒரு விடை தருவாயா நீ
என் உணர்வுகள்
உயிர் பெற வருவாயா நீீ

ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

Sonntag, 4. Dezember 2016

தன்மானமே தமிழ் மானம்...!கவிதை கவிப்புயல் இனியவன்

ஏன் இந்த மாற்றம்........?
யார் தூண்டிய மாற்றம்.....?
மாற்றம் என்பது தேவையே.....
வாழ்க்கையின் முன்னேற்றத்தை.....
ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......
வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......
உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........?

பூட்டன் காலத்தை நோக்கு........
படிப்பறிவு கிடையாது ........
பட்டறிவே பெரும் படிப்பு .......
பட்டறிவை வைத்தபடி..........
தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்......
அனுபவத்தால் வாழ்க்கையை......
அனுபவித்த அனுபவசாலிகள்.........!!!

பாட்டன் காலத்தை நோக்கு......
படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்.....
சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்.......
படிகாத  மேதைகள் என்று வாழ்ந்து.......
கட்டிய அறிவாளிகள்...........!!!

தந்தையின் காலத்தை நோக்கு......
கண்விழித்து படித்து தன்னையும்.....
தன் தங்கைகளையும் வாழவைத்து......
வாழ்ந்துகொண்டிருக்கும் உடல்தேய.......
உழைக்கும் உழைப்பாளி..................!!!

மகனே நீ என்ன செய்கிறாய்.......?
பூட்டனின் நன்மதிப்பை.......
பாட்டனின் சொத்தை........
தந்தையின் தியாகத்தை......
தாயின் ஏக்கத்தை................
உடன் பிறப்பின் மானத்தை................
அழித்து கொண்டிருக்கிறாய்.............!!!

மகனே நீ தவறானவன் அல்ல......
தூண்டுதலால் துரோகம் போகிறாய்.........
தூண்டுபவனை துண்டித்துவிடு......
தூண்டுபவனின் துரோகத்தை கண்டுகொள்.........
மாயதூக்கத்திலிருந்து விழித்துகொள்.......
தமிழும் தமிழ் பண்பாடும்.......
வீரத்தையும் தியாகத்தையும் விதைத்தது.....
அவை விருட்சமாய் வளர்கிறது......
நீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....!!!



ஆக்கம் கவிப்புயல் இனியவன்
 

உறுதியாய் நின்ற விழுதினில்*கவிதைஈழத் தென்றல் *

படர்ந்து நின்ற பாரிய மரத்தின் விழுதுகள்
நின்றன உறுதியாய் நிஜம் நாங்களென
மேலிருந்து கீழாய் ஆழமாய் பற்றிய விழுதினை
அதிசயமாய் பார்த்தது புதிதாய் முளைத்த விதை!

பூப்பூவாய் கண்மலர் மலர்ந்து
புன்னகையாய் சிமிழ் வாய் திறந்து
பிஞ்சுக் கால்களை செல்லமாய் உதைத்து
பற்றிப் பிடித்திட கைகளை அசைத்து!

உறுதியாய் நின்ற விழுதினில் ஒன்று
புது விதையை பார்த்தது, சிரித்தது
முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக
நான் உன் மாமனடா என்றது!

மற்றொரு விழுதோ புன்னகை பூத்தது
பாசமாய் ஆயிரம் பொன்னகை வார்த்தது
கனிவுறும் குரலில் மென்மையாக
அத்தை நானடா கண்ணே என்றது!

ஒவ்வொரு விழுதும் ஒவ்வொரு உருவாய்
சொந்தங்கள் என்றே பந்தங்கள் காட்டின
ஆராவர இன்பக் களிப்பைக் கூட்டின
அன்பென்னும் அரும் அமுதை ஊட்டின!

தாய் மரம் விதையினை தழுவித் தாங்கிட
தந்தையின் கிளைகள் தலையைத் தடவிட
விதையின் விழிகளில் வியப்பும் திகைப்பும்
விரிந்த இதழ்களில் களிப்பும் சிரிப்பும்!

நாளை நானும் விருட்சமாவேன் நிஜமாவேன்
உ ன்னைப் போன்றே விதைகளை விதைப்பேன்
விழுதுகள் என்றே உறவுகள் வளர்ப்பேன்
அன்பில் என்றும் கலந்தே சிறப்பேன்!

பாசக்கரம் எனவே கிளைகளை விரிப்பேன்
நட்பெனும் பறவைகள் அமர்ந்திட சிலிர்ப்பேன்
உறவெனும் விழுதுகள் உரமாய் காத்திட
உறுதியாய் நின்றே நன்மைகள் பயப்பேன்!

புத்தம் புது விதையோ புதினங்கள் பார்த்தே
புன்னகையுடனே தலையினை அசைத்தது
விதையின் கண்களில் கனவுகள் விரிந்தன
பாசம் நேசம் பிறவிப் பயன் என்றன!

விதைக்கும் விதையில் வினையேதுமில்லை
விஷத்தை விதைத்தால் பயனேதுமில்லை
நல்லதை நினைத்தே நானிலம் போற்றிட
நல்விதைகள் விதைத்தால் குறையேதுமில்லை!

நல்லன ஒன்றையே நாம் என்றும் பகிர்வோம்
நாட்டுக்கும் வீட்டுக்கு நல்லதை நினைப்போம்
அன்பையும் பண்பையும் பகிர்ந்தே மகிழ்வோம்
மனிதம் மறவா மனிதராய் வாழ்வோம்!
 
ஆக்கம் ஈழத்
தென்றல்
 

Freitag, 2. Dezember 2016

ரட்சகி...!கவிதைநெடுந்தீவு தனு

மீட்புத் திட்டத்தின்
அன்பு வெளிப் பயணத்தில்
பரிணாமித்துக் கொண்டிருக்கும்
எனது தேவசகாயமே.
வனாந்தரங்களை
கடந்து கொண்டிருக்கையில்
உன் கால்களை
கவனிக்கின்றேன்...

நெய்தல் ஆடையிலே
மேகத்திடை தோன்றும்
அசரீரி போல்
ஓர் ஒளிப்பிளம்பு
எப்போது ஒட்டிக்கொண்டு
உன் முக அழகில்
பிரகாசிக்கின்றது...

பிரியமுள்ள புனிதவதியே
சத்துருக்களின் கோரப்பற்கள்
என் மன்றாட்டுக்களுக்கு
தடைகளாகின்றன.
களிகூர்ந்து அவர்களுக்கான
மோட்ச பாதையை
காட்டியருளும்...

ரட்சகியே
தீய சக்திகளின்
நெடிகளின் ஊடே
வாழ்ந்து கொண்டிருப்பவளே
இதோ உலகம் அழிகிறது
என் கரங்களை பற்றிக்கொள்
சாதி , மதமில்லா
மலை முகடு ஒன்றில்
குடியிருப்போம்.
கரங்களை பற்றிக்கொள்
என் ரட்சகியே...

ஆக்கம்   நெடுந்தீவு 
தனு

 


Donnerstag, 1. Dezember 2016

நான் எழுதுவது கடிதம் அல்ல!கவிதை ஈழத் தென்றல்

உணர்ச்சிகளை மையாக்கி
உண்மையை பதிகின்றேன் கண்ணே,
இதை கடிதம் என்று கொள்ளாதே
இனியும் கண்களால் என்னைக் கொல்லாதே!

சொல்புத்தி சுயபுத்தி இரண்டும் இன்றி
சொர்க்கத்தில் இருக்கின்றேன் பெண்ணே,
எல்லாம் உன்னாலே இம்மாற்றம்
எதுவென்றே சொல்ல தெரியா தேக்கம்!

காலடிச் சத்தம் காதில் இனிக்கின்றதே
கல கல சிரிப்பும் கருத்தைக் கலைக்கின்றதே,
பருவத்தின் மாற்றம் எந்தன்
பாதையை கூட மாற்றுகின்றதே!

தூது சொல்ல தோழனும் இன்றி
தொலை பேசி தொல்லை இன்றி
நான் வரையும் வரிகள் இவைகள்
உனக்கென்றான என் உணரவுகள்!

கடிதம் என்று கொள்ளாதே
கடிந்து ஏதும் சொல்லாதே
உள்ளம் என்றே உணர்ந்திடு
உண்மை அன்பை மதித்திடு!
ஆக்கம்
ஈழத் தென்றல்


Disqus Shortname

Comments system

 
Blogger Templates