Social Icons

Dienstag, 31. Mai 2016

கவிமகன்.இ எழுதிய அசலூரின் பார்வையில் ஒற்றை ரோஜா

காய்ந்த ஓலைகள் 
சருகாகி கிடக்கிறது
வீழ்ந்த விதைகள் முளை 
கொள்ள முடியாது 
முடங்கி கிடக்கிறது

குருத்தெறிய முடியாத
தாய் வள நிலம் 
தன் சேய்களோடு 
அக்னியின் அனலில் 
சுருண்டு கிடக்கிறது

அருகில் ஓடும் அருவி 
காய்ந்து வரண்டு 
பசித்த உடலின் 
எலும்புக்கூடாய் 
வெடித்துக்கிடக்கிறது

கோரை புற்கள் கடதாசியாய் 
உடல் சுருங்கி தூங்குகின்றன
நிலத்தின் மேனி எங்கும் 
குளிர்மைக்கான ஏக்கம் 
தீர்க்கப்படாமலே 
சாம்பலாகி கிடக்கிறது.

என் விழிகள் பசுமைக்காக 
ஏங்கி கிடக்கும் அந்நிலத்தை
நோக்க தொடங்கின 
எங்கும் பசுமையற்ற செவ்வாணம்
விரிந்து கிடக்கிறது

அருகில் தெரியா பச்சையம் நடுவே
அந்த ஒற்றை ரோஜா மட்டும் 
புன்னகைத்து துளிர்த்து கிடந்தது
என் அவதானிப்பின் முடிவில் 
அதன் வீச்சம் புரிந்து 
கொள்ளப்பட்ட போது 
அது செடியாக மாறியே இருந்தது

அதன் பச்சையத்தின் நியம் 
புரியாமல் தினமும் 
அந்த வீதியில் பயணிக்கிறது 
என் மனது 
அதன் இருப்பை 
நான் பார்த்துக் கொண்டே 
நகர்கிறேன்

இளம் பச்சை அல்லிக்குள் 
மூடப்பட்டுக்கிடந்த 
சிவப்பு இதழ்கள் தங்கள் 
புன்னகையை காட்ட 
எத்தனித்து கொண்டன

தினமும் மாறுதல்கள் 
இளம் பச்சை கரும்பச்சையாகி 
தன் உடல் பிரித்து 
ஊமையாக எட்டிப்பார்க்கத் துடிக்கும் 
சிகப்பு நிற உதடுகளுக்கு 
வழிதருகின்றன...

நான் அதை ரசித்துக் 
கொண்டே செல்கிறேன்
கொஞ்சம் உரமிட்டு நீரூற்ற 
மனதில் துளி எண்ணமில்லை 
விலங்கிடப்பட்ட என் விழிகள் 
என்னை வென்று
வெறுமையாக்குகிறது

நான் பார்வையாளனாய் 
ரசித்துக் கொண்டே இருக்கிறேன்
இதனால் எனக்கென்ன? 
அந்த நிலமாச்சு மரமாச்சு 
வளர்ந்தால் என்ன ? 
கருவிலே எருவானால் என்ன? 
என் மனம் நினைத்துக்கொண்டே 
இருக்கிறது.

மரம் வளர்ந்தால் 
அந்த நிலம் துளிர்த்திடும் 
சிவப்பு எச்சரிக்கை 
அடிக்கடி வந்தாலும் 
நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

அருகில் கூடாரமிட்டு தயாராய்
காத்திருக்கும் கருவண்டுகளால் 
மரம் பிடுங்கி வீசப்படும் 
உறுதியாக நம்புகிறேன்.

மரமும் திடம் கொண்டு எதிர்க்கிறது
எது நடந்தாலும் நான் மௌனியாகி 
பார்த்திருப்பதே என் முடிவு 
முகை வெடிக்க தன் வலி மறந்து 
இதழ் விரிக்கிறது அந்த செடி

பார்த்து 
பரவசமாகி என் இயலாமையை 
மறந்து அருகில் செல்கிறேன் 
இரத்த நிற ரோஜா இதழ்களை தீண்ட 
வட்டமிட்டு கொண்டிருந்தன 
பல பத்து வண்டுகள்

அவற்றோடு முட்டி மோதி நிமிர்ந்து 
நிற்கிறது அந்த மலர். 
அதற்கு உள வலிமை உண்டு 
ஆயிரம் வண்டுகள் சூழ்ந்தாலும் 
நிமிர்ந்தெழுந்து இனப்பெருக்கம் 
செய்யும் திடம் உண்டு

முட்டி மோதி முப்பது நாட்கள் 
தான் உதித்த செடிக்காக 
நிமிர்ந்து நின்றது அந்த செடி
பூவின் இதழ்கள் வண்டுகளின் 
தீண்டல்களால் உதிர தொடங்கின

தினமும் இதழ்கள் வீழ்ந்து 
மண்ணுக்கு எருவாக தொடங்கின 
என் விழிகள் புரிந்து கொண்டன 
வண்டுகளின் தீண்டலின் வீரியம் 
அதிகரித்தே கிடந்தது 
என் கரங்கள் வண்டுகளுக்கு 
சாமரம் வீச தொடங்கின

இதழ்கள் துணிந்து நிமிர்ந்து நின்றன 
பூவில் ஊறும் தேனினை 
குடிக்க இறுதி தீண்டல் தொடங்கி இருந்தது 
நான் பார்த்துக்கொண்டே இருந்தேன் 
தடுக்கவில்லை

எங்கோ பூத்த ஒற்றை ரோஜாதானே... 
மனது மீண்டும் எண்ணிக் கொண்டது.
வீழும் இதழ்களை நான் கணக்கிட்டு 
கொண்டே இருக்கிறேன்
அந்த ரோஜா செடியின் 
அடி வேரில் பாதுகாப்பாய் 
கிடந்த இளம்பச்சை புல்லிகள் கூட
கருகத்தொடங்கி இருந்தன 
அவற்றையும் கணக்கிட்டேன்

கருவண்டுகள் இறுதி தீண்டல்களை 
தொடங்கி இருந்தன 
சுற்றி சுற்றி ரோஜாவை 
முட்டிக்கொண்டிருந்தன 
பூவின் இதழ்கள் வண்டுகளின் 
எச்சிலில் கலந்து கிடந்த 
விசத்தில் உதிர்ந்து விழுந்தன 
நான் அதையும் மௌனியாய் 
பார்த்து கொண்டிருந்தேன்.

ரோஜா செடி கொஞ்சம் கொஞ்சமாய் 
தன் பச்சையம் 
தொலைக்க தொடங்கி இருந்தது 
புன்னகையோடு பார்த்து ரசித்தேன்

அன்று ஒரு காலைப்பொழுது 
கலையாத தூக்கம் கலைந்து போன அதிகாலை பொழுது 
கருவண்டுகள் ரோஜா காய்ந்து 
சருகாகியதாய் கொக்கரித்து 
கொண்டிருந்த குரல் கேட்டு 
எழுந்து பார்க்கிறேன்.

அந்த செடியின் பச்சையம் 
இரத்த சிவப்பு காய்ந்து 
சருகாகி கிடந்த இதழ்களின் 
கீழே மறைந்து கிடந்தது 
வண்டுகளின் கொக்கரிப்பில் ஒலியில்
ரோஜா செடியின் பச்சையம் 
நீண்டுகொண்டே சென்றது. 
என் விழிகளும் நகர்ந்து 
கொண்டே இருக்கிறது 
அந்த பச்சையத்தின் துளிர்ப்புத்தேடி


ஆக்கம்  
கவிமகன்.இ  



Montag, 30. Mai 2016

கவிப்புயல் இனியவன் எழுதியஒரு வழிப்போக்கனின் கவிதை


தெருவோரத்தில் உச்சி வெய்யிலில் .....
வாய்க்கு வந்தததை உளறியபடி ......
சென்ற வழிப்போக்கன் ஓரத்தில் ....
இருந்த "அரசடிப்பிள்ளையாரை"....
வாயில் வந்ததையேல்லாம் .....
தொகுத்து கவிதையாக்கினான் .....!!!


பார்க்கும் இடமெல்லாம் .....
இருக்கும் தெருவெல்லாம் ......
ஆற்றங்கரையெல்லாம் .......
வீற்றிருக்கும் பிள்ளையாரே ......
என்போன்ற வழிப்போக்கனுக்கு .....
பக்தியை அள்ளிவழங்க உம்மை ....
விட்டால் யார் உள்ளனரோ .....?

மிருகம் பாதி மனிதன் பாதி ....
கலந்திருக்கும் கடவுள் நீர் .......
அதனால் தானோ எல்லா ....
உயிரினங்களும் உம்மில் ......
இத்தனை அன்போ .....?

உம் வயிறும் நிரம்ம போவதில்லை .....
என் போன்ற வழிப்போக்கனின் .....
வயிறும் நிரம்ம போவத்தில்லை .....
பணம் படைத்தவன் வயிறும் ....
மனமும் நன்றாக நிரம்புகிறது .....
அவர்கள் பார்த்து நமக்கு ....
படைத்தால் தான் நம் வயிறு ......
நிரம்ப முடியும் ..........!!!

அதுசரி உமக்கும் புத்தனுக்கும் .....
அப்படியென்ன அரசமரத்தில் ....
காதல் - எங்கெல்லாம் அரசு 
முளைக்கிறதோ அங்கெல்லாம் ....
இருவரும் அரசை பிடிப்பதுபோல் ....
அரச மரத்தை பிடிக்கிறீர்கள் .....
அரசை பிடிப்பதில் அப்படியொரு ....
கடும் போட்டி உங்களுக்குள் .......!!!

போகிற போக்கில் அரசமரத்துக்கு ....
நீங்கள் போராட மக்களை தூண்ட ....
போகிறீர்கள் - போதுமையா....
நாங்கள் போராடிய போராட்டம் .....
நீங்கள் இருவரும் தொகுதி உடன் ...
பாட்டுக்கு வாருங்கள் ....
அரசடி பிள்ளையார் நீங்கள் ....
வடக்கு பக்கத்தையும் கிழக்கு ....
பக்கத்தையும் பார்த்து இருங்கள் ....
புத்தன் மற்ற திசைகளில் அமரட்டும் ......!!!

சற்று களைப்பாறிய வழிப்போக்கன் .....
தோள் துண்டை தலையில் போட்டபடி ....
அரசிடமிருந்து விடைபெற்றான் ....!!!


ஆக்கம் கவிப்புயல் இனியவன்


கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய இதயவானம்


என் மன வான் கலக்கத்தில் 
ஏதோ துடிப்பு இதயத்தில் 
ஆசையின் பாதையில் 
அணிவகுத்ததால்
அந்தரத்தில் காற்றாடுது இதயம்

சுற்றியடிக்கும் சுழல்காற்று
சுகம் பெற மறுக்கும் இதயம் 
சுழலாய் இழுக்கும் துன்பம் 
சுகப்படுமா என் இதயம்

நம்பிக்கை தளர்ந்தபோதும் 
நடைபயில நினைத்த கால்கள்
உறவென நினைத்த உள்ளங்கள் 
ஊதிப்பார்ப்பது கொடுமை

வேதனை என்பது வேடிக்கை அல்ல 
வேடமிட நான் நடிகையுமல்ல 
பூஞ்சை மனமும் நஞ்சை இதயமும் 
எனக்கே சொந்தம் 
அதனால் தானோ கலங்கிய வானும் கதறும் மனமும் எனக்கே பரிசானதோ ??
ஆனதோ???

சிவரமணி

Sonntag, 29. Mai 2016

மலேசியா கலையிலக்கிய வட்டம் சிவரமணிக்கு (கவித்தென்றல்பட்டம் வழங்கியுள்ளது

இனிய  நந்தவனம்  பதிப்பகம்  சிறீமுகவாரிஅறவாரியம் மலேசியா
தடாகம்  கலையிலக்கிய வட்டம்  இணைந்து  நடத்திய பன்னாட்டு கருத்தரங்கும்  விருதுவழங்கல்  விழாவும் நூல்  வெளியீடும்  நடைபெற்றிருந்தது
அதில் இலங்கை  திருகோணமலையைச்சேர்ந்த  கவிச்சுடர் சிவரமணிக்கு  

கவித்தென்றல்   என்ற பட்டமும்விருதும்.கிடைத்தமையும் அவரது  #அவள்ஒரு  தனித்தீவு  நூல்வெளியிட்டமையும்  குறிப்பிடத்தக்கது. இவரது ஆழுமை இன்னும் நிறைய எம்மவர் கலைஞர்கள் இணையமான  எஸ்.ரி.எஸ் இணையம் கலைஞர்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றது


Freitag, 27. Mai 2016

பவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016

இதயம் கூறும் இனிய
கீதம்.
உலகம் சேர்க்கும் உறவு
பாலம்.
காலங்கள் மாறி மாறியே 
போகலாம் 
கண்களின் காட்ச்சி கோலங்கள் 
வரையுமா?
பூக்களில் தேனும் தீர்ந்து தான் 
போகலாம்.
நன்பனின் தேவை இல்லாமல் 
போகுமா?
என் சோகம் என்றும் உன்னிடம்
தேடும் 
என் குரல் உன்னையே 
சேருமே 
நம்பிக்கை என்னும் வார்த்தைக்கு 
அர்த்தம் 
குருவின் தோழி நீயே ்்்்
Friendship Forever......நட்பே சிறந்ததே....

செல்லமுத்து வெளியீட்டகம்' வெளியீடு செய்யும், தோழி பவித்ரா எழுதிய 'அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு விழா குளத்தோர குளிர்காற்று தழுவும் வவுனியா நகர குடியிருப்பு பூங்காவில் இடம்பெறவுள்ளது. 28.05.2016 (சனிக்கிழமை) பிற்பகல் 03.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறும் . பல படைப்புக்கள் தர வேன்டும் என வாழ்த்துகிறேன்.
அன்புடன் 
தனுக்குட்டி
இவர்கள் வெளியீ டு சிறப்புற  எம்மவர் இணையமான எஸ்.ரி.எஸ். இணையம்வாழ்தி நிற்கின்றது

Donnerstag, 26. Mai 2016

கவிஞர் வன்னியூர் செந்தூரன் எழுதிய இதயம் உருகும் உணர்வே உனக்காக..

இரு ஒளிவண்டு விழிகள்
உருண்டோடிக்கொண்டிருக்கிறது
என் உலகமுமல்லவா அதில்

சுழன்றாடிக்கொண்டிருக்கிறது



வானவில்லின் வடிவிலே 
வரைந்து வைத்த
கண்ணின் காப்பரண்

தங்கக்கன்னங்களில் 
ததும்பும் சிறுகுறும்பலைகள்
படர்ந்தனவோ என்
பார்வை பட்டு..

வெண்பனி முத்துக்களூடே
வெளிவரமுயலும் புன்னகை
வேலியாய் தடுக்குது 
ரோஜாப்பூந்தோட்டம்

பொன்னைத்தாங்கியபடி
பொன் நிறத்தில் சிறுகழுத்து
ஆடையுடன் போட்டியிட்டு
போதைதரும் பேதையின் முன்னழகு

துள்ளிடும் இவள் துடியிடையில்
துவளுது என் இளவயது
சொன்னபடி அமைந்தது போல்
சொக்கவைக்கும் பின்னழகு

வண்ணமடி இவள் அழகு
வசந்தஅழைப்புவிடும் தொடையழகு
பின்னிடுமிரு காலழகு
பிறங்கால் நற்சிவப்பழகு

சொர்க்கத்தைத் தேடிய எனக்கு
சொல்லவில்லையே ஒருவரும் இந்த
செவ்விதழின் சேதி பற்றி...

என்வீட்டுச்சுவரில் 
மாட்டியிருந்த மோனலிசா
ஓய்வுபெற்று குப்பைக்குள்
ஒளிந்து கொண்டாள்
நான் இவளைப் பார்த்ததை அறிந்து


ஆக்கம்  கவிஞர் 
வன்னியூர் செந்தூரன் 

ரதிமோகன் எழுதிய பொழிந்திடுமா மாமழை..

கிழக்கில் உதயமும் 
மேற்கிலே அஸ்தமனமும்
மாற்றங்கள் இல்லாத
பொழுதுகளின் பிரவேசம்
பொசுங்கிபோன இதயத்தில்
பொழிந்திடுமா மாமழை..

வலுவிழந்த சிறகுகள்
பறத்தல் எத்தனிப்புக்கள்
தொடுவான கதையாகுமா
கானல் நீரின் நிலையாகுமா...

பாலைவனத்து மேகங்களின்
பன்னீர்த்தூறலுக்காய்
ஒற்றைகால் கொக்காகி
காத்திருந்த கனவுகள்
கலைந்துதான் போயிடுமா..

ஆக்கம்  கவிஞை
ரதிமோகன் 


மேடை வானொலி தொலைக்காட்சிதொகுப்புக்காண பயிற்சிப்பட்டறை 26.6.2016

மேடை நிகழ்வுகள் , வானொலி நிகழ்ச்சித் தொகுப்பு..... அரங்க நிகழ்வுகள் ,
தொலைக்காட்சி தொகுப்பு ...போன்றவற்றில் சிறப்புப் பயிற்சிப்பட்டறை 
26.6.2016 எசன் மாநகரில் காலை 10.30- 17.30 வரை.
இளையோர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கானது ! 
முற்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

டென்மார்க் வேல் முருகன் மாம்பழத்திருவிழா (25.05.2016)சிறப்பாக நடைபெற்றது:

டென்மார்க் வேல் முருகன் மாம்பழத்திருவிழா புதன்கிழமை 25/05/2016மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்ற்றது 

அதில்  பத்தர்கள் வந்து கலந்து முருகனைவேண்டி வணங்கி தங்கள் நேத்திகளை நிறைவேற்றி கொண்டனர்

 இதன் உபயதை சிலேசாஅடியார்கள்எடுத்து மிகச்சிறப்பிக்கிறார்கள் .



மம்முட்டியின் White படத்தில் நடித்துள்ள பிரபல ஈழத்து கலைஞர்

ஈரோஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது மலையாள திரைப்படம் White. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மம்மூட்டி மற்றும் ஹுமா குரேஷி நடிக்கின்றனர்.
விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் ஈழத்து கலைஞர் பாஸ்கி மன்மதன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
தீராநதி, வஞ்சகம், A gun & A ring, The Last Halt போன்ற பல முழு நீளத்திரைப்படங்களை நடித்தவர் இன்று மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்துள்ளார் என்றால் இவரது திறமையின்வளர்ச்சியை பாராட்டியாக வேண்டும்.

டென்மார்க் வேல் முருகன் ஆலய தேர்த்திருவிழா (28.05.2016 )

டென்மார்க் வேல் முருகன் ஆலய திருவிழா ஆரம்பமாகி நடந்து வருவது யாவரும் அறிந்ததே  

அந்த வகையில்  தேர் பவணிவாணும் நேரமாக வருகின்ற  28/05/2016 சனிக்கிழமை டென்மார்க் வேல் முருகன் ஆலய தேர்த்திருவிழா 

 இதில் முருகன் பத்தர்கள் கூடிக்கலந்து தெய்வத்தை தேர் இருத்தி தேரின் வடம்பிடித்து நான்கு திசையும் தெய்வத்தை நாம் நகர்த்தி வேண்டுதலை நிறைவேற்ற கூடிவாருங்கள் என நிர்வாகக்குழுவினர்  அழைக்கின்றனர் 

Mittwoch, 25. Mai 2016

ஜெசுதா யோ எழுதிய நதியின் அழகு

பசுமை நிறை காடு
நதியின் அழகு அருகில் 
வானுயர்ந்த மரங்கள் 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மலர்கள் .
.

பறவைகளின் சல்லாபம்
மலர்களுமில்லை 
இலைகளுமில்லை 
வினோதமாக இருக்கிறது 
பலவண்ணங்களில்
அழகு நிறை வண்ணத்துப் பூச்சிகள் .
..

துளிர் விடும் புற்தரை
இத்தனையும் இயற்கையின்
கொடையல்லவா
காணக் கண் ஆயிரம் 
வேண்டுமல்லவா....?!!!

 ஆக்கம் ஜெசுதா யோ

நெடுந்தீவு தனு எழுதிய மமதை..!

காளான்களில்
அப்பிக்கொள்ளும்
மரக்கீழ் திசுவாக
நான்...

முன்பு
முனிவனாக
கனவு கண்டவன்...

பிரளயங்களை
எடுத்தெறிந்து
உணர்வை
பிரித்துப் பார்த்தவன்...

இலைச்சுருட்டி
புழுவாக
மரவுச்சியில்
ஊஞ்சலாடியவன்...

நிலக்கீழ்
வேர்தேடி
நித்தம் நடந்த
நாடோடி....

பிராந்துகளின்
கண்களில்
பிம்பங்கள் சேகரித்த
பொருள் விரும்பி...

எழுத்துக்களை
கோர்த்தெடுக்க
நிலவில் முகம் புதைத்த
கவிதைக்காரன்...

ஆழ்நிலை
தியானமொன்றில்
முன்நின்ற
யாசகன்...

விடையில்லா
வினா தேடும்
முதிர்ச்சி நிலை
கண்டுபிடிப்பாளன்...

பிரபஞ்ச நீரோட்டத்தின்
நிகழ்வுகளை 
அனுமானித்தபடி
மரித்துக் கொண்டிருக்கின்றேன்...

உயிர் ஊரும்
வரைபடத்தில்
திசுக்களை சுமந்தபடி
காளான் கருகிட....

காளான்களின்
விம்மல்களில்
கருகி கொள்கிறது
"நான்" என்ற மமதை..

.ஆக்கம் நெடுந்தீவு தனு 


Dienstag, 24. Mai 2016

மன்மதன் சிறி நடிப்பில் காணொளி குழந்தைகளின் விடுமுறை நாட்கள்.



புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழர்கள் அதிகமானோர் மாதவிடுமுறை லீவில் வெளி ஊருக்கு செல்வதில்லை. சொல்வதானால் என்ன பலன்கள்  செல்லவிட்டால் என்ன விளைவுகள் என்பதை நகைச்சுவையாக வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். முக்கியமாக குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் பார்க்கவேண்டிய வீடியோ.


தற்போது குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கும் அணுகுமுறை.... குழந்தைகளின் விடுமுறை நாட்களை பெற்றோர்கள் எவ்வாறு களிக்க வேண்டும்.... அவர்களின் ஆசை, எதிர்காலம் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தும் காட்சியே இதுவாகும். 

குமுதினி ரமணன் எழுதிய வரதட்சணை!

பெற்றவள் பெற்றாள் பிள்ளை வரம்
பெற்றதும் பெண்ணே, செலவாம்.
கற்றவள் உயர்ந்து கவலை தீர்ப்பாள்
கடமையாய் கல்வியைப் பெற்றே
நற்றவள் நாளும் நலமாய் உயர்
நன்மை படைப்பாள் உலகில்.
மற்றவள் கூறும் வசைச்சொல்
மாற்றியே நடப்பாள் வாழ்வில்.

பெண்மையை போற்றிய பாரதியும்
பெருமையை புதிப்பித்த ஆண்மகனே.
கண்மை தீட்டிய பெண்ணழகில்
கவிழ்ந்திடாதே சீதனம் பார்.
வெண்மையாய் மனது புரிந்திருந்தும்
வெறுப்பாய் வறுமையில் பேசுவரோ.
தண்மையில் சுகமாய் சுகித்திருந்தும்
தணலாய் சொற்களைப் வீசுவாரோ .

குணமாய்ப் பெண்ணிருந்தும் குப்பையில்
குறைவாய் வதைத்திடுவாரோ மனதை.
பணமாய்த் தேடிப் பந்தியிலே, முந்தியே
பாரமாய் மனதையும் விற்றிடுவாரோ.
மணமாய்ப் பெண் உயிராக,நேசித்தாலும்
மாறுமா பாசம் வரதட்சணை தேடியே.
பிணமாய் மாமா போகும் வரை
பிடுங்கியே உயிரை மாய்ப்பாரோ.

சிரம் தாழ்த்திப் பணிவதெல்லாம்
சிறப்பறியாப் பணத்திற்காமோ.
தரம் பார்த்து பதவி உயர் தகுதிக்கு
பாசம் நிகர் நிறையோ.
கரம் பற்றி வாழ்வளித்து, மனக்
கருத்து வேறுபட பணமிங்கு மனைவியாமோ.
வரம் நீயென மனையவளை
வாழ்வளிக்கப் பாசமே தட்சணையாகுமே

தாய்மை காக்கும் உறவென்று,
தாரமாகும் வாழ்வு அவளே.
பொய்மையவள் நோயாக, மலடியென
பொறுத்திட்டாள்,பெரும் பழியும் தனதாக.
சேய்மை வாழத் தாயாக, தத்தெடுத்துச்
சேர்ந்திடவே அனாதையென யாருமில்லை.
வாய்மையது வாழ்வினிலே,அன்பு
வாழ மூலதனம் என்றும் நாளை வென்றிடவே.

தந்தையாகப் பெண்ணிற்கு சீதனமாய்
தருவதெல்லாம் கல்வியோடு ஒழுக்கமது.
கந்தையாக உடுத்திருந்த, வறுமையிலும்
கருத்தாகக் கண்ணாக காத்திருப்பர்.
நிந்தை செய்து அவர் உழைப்பை மீறி
நித்தம் திருடுவதோ வரதட்சணை.
சந்தையிலே மாடாக விற்றிடுதல்
சரித்திரமாய் தொடர்ந்திடுமோ சீதனம்.

நிலை இல்லாத உலக வாழ்வில்
நிரந்தரமாம் அன்பொன்றே.
உலை வைத்துப் பாசமதை
உயர்ந்திடுமோ சமூகம் நன்றே.
தலை விதியாய்ப் பெண்ணவளும்
தரித்திரமாய் மாற்றிடுமோ காலமது.
வலை விரித்துத் தேடுவதும் சாதி,பணம்
வகுப்பதுவும் நாளை நம் வீழ்வே.

மாற்றுவோம் நாளை பெண்
மறுமலர்ச்சி உலகை உயர்வாய்,
ஏற்றுவோம் அவள் நன்மைகளை
ஏட்டோடு உயர்த்தி நாளும்.
சாற்றுவோம் நன்றே,வரதட்சணை
சரிந்து, முதிர்கன்னிகள் வாழ.
போற்றுவோம் அவள் தாய்மை
போல், பெண்மை என்றும் வெல்ல


ஆக்கம் குமுதினி ரமணன்  யேர்மனி

Disqus Shortname

Comments system

 
Blogger Templates