Social Icons

Dienstag, 12. September 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது நான்காவது .
பிறந்த நாளை 12.09.2017. இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார்
மாமாமார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று
இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்  ற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழிய
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் —-
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்குயை  அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம்
   வாழிய நீ பல்லாண்டு
 இணையமும் வாழ்தி நிற்கின்றது

Samstag, 18. Februar 2017

திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின் "கூரம்பு" திரைப்படம் திரையிடப்படுகிறது!...

மீண்டும் இன்று சனிக்கிழமை (18.02.2017) பாரிஸ் மாநகரில் விசேட திரையரங்கில் பிரத்தியோக காட்சி!
திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின்
"கூரம்பு" திரைப்படம் திரையிடப்படுகிறது!...

எமது கலைப்பயணத்திற்கு பல வகையிலும்
தொடர்ந்து நல் ஆதரவு தந்து, அரவணைத்து,
நல் ஆசி வழங்கி வருகின்ற பிரான்ஸ் நாட்டு
பொதுச்சேவை உயர் நிறுவனங்களின் அதிகாரிகள்,
அவர்கள் சார்ந்த பிரைஞ்சு நாடக/சினிமா கலைஞர்
பெரு மக்களின் பார்வைக்காக (பிரத்தியோக காட்சி)
அவர்களை கெளரவிக்கும் முகமாக எங்களின்
"கூரம்பு" திரைப்படம் திரையிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...
"கீதாலயா" நிறுவனத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர்:
திருமலையூரான் எஸ்.அசோக்குமார்.

முல்லை கடற்கரையில்முல்லைஸ்சுவரம் இசைக்குழுவின் சிறப்பு கலைமாலை

முல்லைமாவட்டத்தில் சிறப்பாக மக்கள் மனங்களில் நிற்கும் இசைக்குழுவான முல்லைஸ்சுவரம் இசைக்குழு
முல்லை நகரில் கடற்கரைப்பகுதியில்18.02.17 ஆகிய இன்று சிறப்பாக சிறுவர்கள் பெரியோர்கள் என இணைய முல்லைஸ்வரம் இசைக்குழு  கலை நிகழ்வை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்
முல்லைஸ்வரம் இசைக்குழு நேரஞ்சல் சற்று நேரத்தில் ஆரம்பமாக இருகின்றது. என்றும் அவர்களுக்கான வாழ்த்தயைும் வல்லிபுரம் திலகேஸ்அவர்களும் இணைய நிர்வாகமும் கூறி நிற்கின்றனர் இன் நிகழ்வில் பல கலைஞர்கள் இணைந்து பலபாடல்களைப்பாடிக்கொண்டிருக்கிறார்கள்...



மதிசுதாவின் ஊமாண்டியும் அதில்பயணித்த உறவுகளும்

"மரணம் என்பது மற்றவருக்கு நடக்கும் போது ஒரு சம்பவம் ஆனால் எமக்கென்று நடக்கும் போது ஏதோ புதிசா நடக்கிற மாதிரி இருக்கும்"

உம்மாண்டி முன்னோட்டத்தில் வரும் இக் காட்சித் துண்டை படமாக்கியவனும் இன்று அதை நேரடியாக நிருபித்து விட்டான்.
உம்மாண்டியில் பணியாற்றியவரை அறிமுகப்படுத்தும் பதிவை தொடராக எழுதிக் கொண்டிருக்கும் நான் அடுத்து எழுத நினைத்தவன் தன் மரணப்பதிவையும் இணைக்க வைத்து விட்டான்.

2) Sanjee Sanjeev
படத்தில் வரும் ஒஸ்மோ, phantom shots முழுவதுக்கும் சொந்தக்காரன் இவன் தான்.
அவனிடம் சூட் பண்ண வரச் சொல்லிக் கேட்டால் வரும் முதல் கேள்வி "அப்பா (செல்லா) சொன்னால் சரி"
செல்லா அண்ணாவிடம் கேட்டால் "அவன் free எண்டால் நீ கொண்டு போ" இந்த இரு வார்த்தைகளும் போதும் அவர்கள் உறவின் நெருக்கம் சொல்ல...
படத்தின் முதலாவது காட்சியானது சந்நிதி கோயிலில் top view, அதை எடுப்பதற்கு 2 நாள் காலை சூரியன் உதயமாகும் நேரம் போய் சனம் போதாது என திரும்பி வந்து மூன்றாம் நாள் போய்த் தான் எடுத்தோம்.
ஒரு ஒற்றைக் காட்சிக்காக சன்சிகனோடும் என்னோடும் சங்குப் பிட்டிவரை சலிக்காமல் வந்து எடுத்து விட்டுப் போவான்.
அவனுக்கென்று இருந்தது ஒரே ஒரு ஆசை தான். அடிக்கடி சொல்வான் "அண்ணா அப்பாவும் ஓகே சொல்லீட்டார் நீங்கள் ஒரு நல்ல பாட்டை வாங்கி வாங்கோ கமரா போக்குவரத்துச் செலவு எங்களோடை. நல்லதா ஒரு பாட்டுச் செய்யோணும்"

ஒரு உண்மையான உழைப்பாளியின் வாழ் நாட்கள் அவன் ஆசையோடு செய்த படத்தைப் பார்க்காமலே முடிந்து விட்டது.

நேற்று நான் வேலைக்குச் செல்லும் போது மூத்தவிநாயகர் கோயிலடியில் நின்று கூப்பிட்டான் "அண்ணா ஒரு கதை நில்லுங்கோ" என, "நேரம் போட்டுதட வரேக்கை வாறன்" என்று சொன்னது கூட அவன் போயிட்டான் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது.

உன்னை இழந்து நிற்கும் செல்லா அண்ணாவுக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறோம்.

இன்று நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் எமை விட்டுப் பிரிந்த அன்புச் சகோதரனது ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்.

Freitag, 17. Februar 2017

""பரதநாட்டிய அரங்கேற்றம்

""பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்"". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,திருமதி, சுரேஸ்.ரேணுகா ஆசிரியர் அவர்களின் மாணவியுமான செல்வி,"அட்ஷயா" அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால் அன்பு உறவுகள்,நண்பர்கள்,அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து இக்கலைநிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து செல்வி "அட்ஷயா"வை வாழ்த்தி ஆசீர்வதித்துச்செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
"நன்றி".
இடம்:-Theatre Silvia Monfort, 12,Rue Pasteur. 95350,SAINT BRICE SOUS FORET.
காலம்:- 18/02/2017 பிற்பகல். 4-00 மணிக்கு ஆரம்பமாகும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்:- உங்கள் அபிமான அறிவிப்பாளர்:-S.K.ராஜன்.


மிகவிரைவில்எஸ்.ஏ. நிலான் இயக்கத்தில் இருடங்கள் வெளிவருகின்றது


எஸ்.ஏ. நிலான் இயக்கத்தில் உருவான தயாரிப்பாளர் இயக்குனர் கவனத்திற்கு,
எதிர் பார்க்கலாம். அத்துடன் எஸ்.ஏ. நிலான்.அடுத்த படைப்பில் பணியாற்ற விரும்பும் கலைஞர்கள் #Inbox இல் தொடர்பு கொள்ளவும்...! என்றும் (தோழமையுடன். எஸ்.ஏ. நிலான்) கேட்டுக்கொண்டுள்ளார்
கானிபாலிசம் இவ்விரு குறும்படத்தினையும் விரைவில் திரையில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்   திரையிடுவது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். என்னறும் அதன் பின் இணையத்தளத்திலும்

Donnerstag, 16. Februar 2017

மு.செளந்தர்ராஜன் 'நாங்கள் விட்டில்கள் அல்ல' கவிதை நூல் அறிமுக விழா.

சுவிட்சர்லாந்து மு.செளந்தர்ராஜன் தொகுத்த 'நாங்கள் விட்டில்கள் அல்ல' கவிதை நூல் அறிமுக விழா.

வவுனியா தமிழ் விருட்சம் தொண்டமைப்பு மற்றும்செல்லமுத்து வெளியீட்டகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் ஜீ.எம்.பரம்சோதி அவர்களால் எழுதப்பட்டு, அவரின் சகோதரன் சுவிட்சர்லாந்து மு.செளந்தர்ராஜன் அவர்களால் தொகுக்கப்பட்ட 'நாங்கள் விட்டில்கள் அல்ல' கவிதை நூலின் அறிமுக விழாவானது, 19.02.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு, வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வுக்கு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் தலைமை வகிப்பார்.

*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்


நெஞ்சமதில் நீந்தித் திரியும்
------நினைவலைகளால்
செஞ்சுவைத்தேன் புரியும்படி
------நல்ஓவியமாய்–என்
மஞ்சமதில் நீயொருமலராக
-----வருவாயென- நாளும்
கெஞ்சிக்கேட்டும் வரமறுக்கிறாயே
-----பேதைப்பெண்ணே
கொஞ்சிப்பேச ஆசைமேவி
-------நானும் உந்தன்-வெண்
பஞ்சுப்பிறைநெற்றி நோகாமைல்
-----இறகால் வருடவிழித்த பின்னும்,
வஞ்சப்பெண்ணே!! வாய்மொழி
--------மட்டும் மறுப்பதேனோ,
பொன்குஞ்சரமே ஓவியமே கொஞ்சம் பேசடி
ஆக்கம் (ஓவியநேசன்)

உம்மாண்டி படத்தில் உழைத்த உழைப்பாளிகள்

இந்த சிறுகுறிப்பானது உம்மாண்டி படத்தில் உழைத்து கிரெடிட் கார்ட் பெயர்களுடன் மட்டும் நின்று போகும் உழைப்பாளிகள் பின்னால் நான் நுகர்ந்த அவர்கள் வியர்வையின் நறுமணத்தை தனித்தனியே பகிர்வதாகும்…
1) ஜனகன் சிவஞானம்.
எமது உறவு சினிமாக்காரர்களாக ஆரம்பித்த உறவு அல்ல ஆனால் நான் சினிமா எடுக்கிறேன் என்றதும் எனக்காக என்னோடு வெயில் காய்ந்த உறவு இவன்.
என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குனருக்கான முற்று முழுதான தகுதிகள் கொண்ட ஒருவன் ஆனால் எத்தனை தடவை கேட்டிருந்தும் தனக்கு அந்த எண்ணமே இல்லை அண்ணா இது தான் அவன் பதிலாக இருந்தது.
என்னோடு
தொடரி குறும்படத்தில் – ஒளிப்பதிவாளர்
தாத்தாவில் – நடிப்பு
கொண்டோடி – உதவி இயக்குனர்
கருவறைத் தோழன் – உதவி இயக்குனர் என்பதோடு மட்டுமல்ல என் பெரும்பாலான படங்களின் திரைக்கதை ஆலோசனையில் இருந்திருக்கிறான்.

உம்மாண்டி திரைப்படத்திற்கான திரைக்கதை கலந்துரையாடலில் ஆரம்பத்தில் இருந்து படத்தின் அத்தனை கட்டங்களிலும் என்னோடு வருடக்கணக்காக இழுபட்ட ஜீவன்களில் ஒன்று.
படத்தில் உதவி இயக்குனர் என்று சாதாரணமாகக் கூறி விட்டுக் கடந்து போய் விட முடியாது. காரணம் நடிப்பவருக்கு நான் எழுதிய வசனங்களை நான் எதிர்பார்ப்பது போல சொல்லிக் கொடுப்பது என்பது அவனால் மட்டுமே முடிந்த காரியமாகும். காரணம் என்னோடு மிக நெருக்கமாக இருந்த தம்பிகளில் ஒருவன். நான் என்னென்ன mood இல் எப்படிக் கதைப்பேன். அந்தக் காட்சிக்கு என்ன mood create பண்ணி வைத்திருக்கிறேன் எப்படி எதிர்பார்ப்பேன் என்பது அவனுக்கு தெளிவாகத் தெரியும்.
நடிப்பவருக்கு வசனத்தை முதல் நாளே கொடுத்து படப்பிப்பு ஆரம்பிப்பது வேறு விடயம் அதே போல படப்பிடிப்புத் தளத்தில் வசனத்தைக் கொடுத்து உடனேயே சொல்ல வைப்பது என்பது வேறு. உம்மாண்டியில் இரண்டாவது ரகமே கடைப்பிடிக்கப்பட்டது காரணம் அந்தக் காட்சிக்குரிய mood என்னவெனத் தெரியாமல் அவர்கள் வசனத்தை அறிந்து வைத்திருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படியானதொரு நிலையில் நடிக்க வந்தவருக்கு வசனத்தை புகுத்துவது என்பது இலகுவான விடயமல்ல.
அந்த இடத்தில் தான் ஜனகன் பணி என்பது படத்தில் முத்திரையான இடமாகும்.
தற்போது கனடாவுக்கு குடிபெயர்ந்து அங்கு கற்பதோடு வானொலித் துறையிலும் கால் தடம் பதித்து சாதித்துக் கொண்டு வரும் அவனது அர்ப்பணிப்பான உழைப்புக்கு இன்னும் எத்தனையே வெற்றியிலக்குகள் வெகு அருகில் உள்ளது.
வாழ்த்துக்கள் ஜனா…
நாளை மறுதினம் இன்னொரு உழைப்பாளியுடன் இதே 7.30 மணிக்குச் சந்திக்கிறேன்

Montag, 2. Januar 2017

சபையோரால்; மண்டபம் நிறைந்து வழிந்த 'வணக்கம் ஐரோப்பா 2017 ' கந்தையா முருகதாஸ் அவர்களின் ஒருபார்வை

சபையோரால்; மண்டபம் நிறைந்து வழிந்த நிலையில் நடந்து முடிந்த 'வணக்கம் ஐரோப்பா 2017 ' கலை நிகழ்வு. சபையோர் முன்னிலையிலேயெ வரவு செலவுக் கணக்கை அறிவித்த முன்னோடிச் செயல்.

எழுத்தாளர் கவிஞர் ஆய்வாளர் நடிகர்  என பண்முகம் ஆற்றல்கொண்ட கந்தையா முருகதாஸ் அவர்களின் ஒரு நேரியல் பார்வை

நேற்றைய தினமான புதுவருடப் பிறப்பன்று (01.01.17) ஜேர்மனி ஒபகௌசன் நகரில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாதிப்புற்ற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக கலைக்கூடம் ஒன்றை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் நிகழ்வாக 'வணக்கம் ஐரோப்பா 2017 நெஞ்சம் மறக்குமா என்ற பல்துறை கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

சபையோரால் மண்டபம் நிறைந்து வழிந்த நிலையில் மேடையேறிய அத்தனை கலை நிகழ்ச்சிளும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு நடந்தன. சபையோர் மகிழ்ச்சியுடனும் வியப்புடனும் இரசித்து மகிழ்ந்தனர்.

இனிவருங்காலம் என்பது இளந்தலைமுறையினரின் கைகளிலேதான் என்பதை யாருமே மறுக்க முடியாது. இளந்தலைமுறையினரின் கலை நிகழ்வுகளும் பெரியவர்களின் நிகழ்வகளும் சபையோரை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தன.ஆர்ப்பரித்து இரசிக்க வைத்தன.

இந்த விழாவை ஐந்து அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்கள்.
விடுதலைப்பாடல்கள் திரையிசைப் பாடல்கள் என எல்லாவற்றையும் சபையோர் இரசித்தனர். ஈழ மக்களுக்கு எதிரான மக்கள் என்று யாரும் இல்லை என்பதையும். தவறுகளை கண்டிப்பதாலும் விமர்சிப்பதாலும் அதை நேர் கொள்ள முடியாதவர்கள் , மடியில் கனம் இருப்பவர்கள் பழிக்குப் பயப்படுவது போல பயந்து கொண்டு நானே எல்லாம் என்ற கோயல்பல்சின் தந்திரங்களை கட்டவிழ்த்து இந்நிகழ்விற்கு பல வழிகளிலும் இடைஞ்சல் கொடுத்துப் பார்த்தார்கள். (விமர்சனங்களையும் கண்டனங்களையும் நிராகரிப்பவர்களால் நேர்ப்பாதையில் செல்லவே முடியாது.)
ஆனால் எதுவுமே எடுபடவில்லை.பொதுமக்களின் ஆதரவுடன் இவ்விழா வெற்றிவிழாவாக நடந்திருக்கின்றது. பொது வாழ்வில் ஊழலற்றவன் எங்கும் எந்தச் சபையிலும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்பான் என்பதற்கு இந்த விழா சான்றாக அமைந்துவிட்டது.

இறுக்கமான புலம்பெயர் வாழ்வில் மக்களை ஆறுதல்படுத்த கலைவிழாக்கள் தேவை. இந்த விழா இரண்டு செயலைச் செய்திருக்கின்றது. மக்கள் இரசித்து சிரிக்க கலை நிகழ்ச்சிகளையும், நிகழ்ச்சிகளைப் பார்க்க மக்களால் கொடுக்கப்பட்ட நிதி விழுப்புண் அடைந்த போராளிகளின் கலைக்கூடச் சேவைக்கும் போயச் சேருகின்றது.

விழாவின் இறுதியில் அண்ணளவாக விழாவுக்கான வரவு செலவினை சபையோருக்கு விழா அமைப்பாளர்கள் வாசித்துக் காட்டியமை ஒரு முன்னோடிச் செயலாகும்.

'நாங்களே எல்லாம், நாங்கள் சொல்வதையே நீங்கள் கேட்க வேண்டும், கேட்காவிட்டால் மேடை இல்லை 'என்று கலைஞர்களை கொத்தடிமைகளா கோழைகளாக எண்ணியவர்களின் கோட்:டை பொதுமக்களின் ஆதரவினால் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.

ஓவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை என்பது அவனது பிறப்புரிமை. அதனைச் சீண்டினால் என்ன நடக்கும் என்பதை இந்த விழா சர்வாதிகாரிகளுக்கு நினைவூட்டிவிட்டது


























































Disqus Shortname

Comments system

 
Blogger Templates