Social Icons

Donnerstag, 31. März 2016

மட்டுவில் ஞானக்குமாரனின் எல்லாம் இழந்த பின்னால்
















உப்புக்கும் அரிசிக்கும்
அடிபட்டுக்கிடக்கின்ற
இந்த ஒப்பற்ற வரத்தை அருளியவன் யாரோ
ஒற்றைத் துளி கூட இல்லாமல் 
கண்ணீர் கிணறு வற்றிக்கிடக்கிறது
அஞ்சலிக்க
ஒரு வார்த்தை இல்லாது
வார்த்தைக்கடல் வறண்டு போனது
அதிகாரத் திமிரின்
அக்கிரமத்தை வெளிச்சம் போட
கோபுரத்தின் உச்சத்திலேறி
உயிரைக் கொழுத்தியெறிந்திருக்கிறான்.
எல்லாம் இழந்த பின்னால்
மிச்சமாய் இருக்கும் ஒற்றைத்துளி உயிரைக்கூட
எரித்துக்காட்டவேண்டியிருக்கிறது
அனுமான் போல் நெஞ்சை
உரித்துக்காட்ட வேண்டியிருக்கிறது
நாங்கள் நல்லவர்களென்று
வெறும் காற்றுப்பட்டாலே
கரைந்து போகும் கற்பூர மனிதனை
தீக்குச்சி சொற்களால் உரசலாமா
இலவசஅரிசி என்பதற்காய்
அதை வாய்க்கரிசிபோல மாற்றலாமா
அந்த அரிசியோடு சேர்த்து
அகதியெனும் அடைமொழியையும்
சேர்த்தே ஊற்றலாமா
அகதியெனும் இழிசொல்லை
உயிரைப் பிச்செறியும் உச்சவலு
மின்சாரத்தால் கழுவ நினைத்தானோ
உச்சத்;திலேறி நின்று உரக்க கத்தி
ஏது பலனும் ஆகப்போவதில்லையென
அறிந்தே சாவைத்
தழுவ நினைத்தானோ
உயரமேறிப் பாய்ந்துவிட்டான்
உயிரோடு
சாய்ந்து விட்டான்
அவன் சாவென்பது
ஊடகங்களைப் பொறுத்தவரை
ஒரு நாள் தலைப்புச்செய்தி
அரசியல் வாதிக்கு
அன்றைய தேதிக்கான கண்டன அறிக்கை
அவன் குடும்பத்துக்கு
காலமெல்லாம் நடுத்தெருவல்லவா
ஒரு நடிகை தடுக்கி விழுந்தால்
அலறித்துடிக்கும் மாந்தரில்
பாதிப்பேர் கூட இல்லையா உனக்காக
ஒரு துழி நீர் சிந்த
(தமிழ் நாட்டு அகதி முகாமில் தற்கொலை செய்து கொண்ட ஈழத்து தமிழ் அகதி இரவீந்திரனுக்காக)


                          ஆக்கம் மட்டுவில்                                      ஞானக்குமாரன் 





ஜெசுதா யோவின் என் இதயத்தில்




















உன்னோடு நானும் இல்லை 
என்னோடு நீயும் இல்லை 
இருந்தும் நான் வாழ்கிறேன்
உன்னோடு நானே..


எங்கு நான் இருந்தாலும்
என்னைச்சுற்றிய நினைவுகள்
உன்னைப் பற்றியது மட்டுமே ...


எத்தனை உருவங்கள்
எதிரில் தெரிந்தாலும்
அதில் காட்சியாவது
நீ மட்டும் தான் ...


பச்சைகுத்தியது போல்
உன் நினைவுகள்
என் இதயத்தில்
அழியாத இடம்கொண்டு
அழிந்தால் அழிந்திடுமே
என் உயிரும் தானே .../

ஆக்கம் ஜெசுதா யோ


jesu

கவித்தென்றல்‬ எழுதிய என்றும் வருவேன்
















சிலையாய் மனதில் உறைந்தாய் கண்ணா
கலையாய் என்னுள் வளர்ந்தாய் கார்மேக வண்ணா
அலையாய் மனமதை இழுத்தாய் மன்னா..
நிலையாய் இருப்பேன் உந்தன் பெண்ணா

மலையாய் மனதில் வாழ்கிறாய் நீயே
கலையா கனவுகள் கோடி தருவாயே
தொலைவில் இருந்தும் எனை தொடுவாயே
நுழைவாய் மனதில் என்னுள் நீயே
கணையால் உன்னை கவர்ந்தேனே
இணையாய் காதல் தருவேனே
துணையாய் என்றும் வருவேன் நானே
மனையில் வாழும் மலர் தானே

ஆக்கம்கவித்தென்றல் aஏரூர்

நோர்வே நக்கீராவின் மலர்
















மலர்
மலர்(க்) கண்டில்
மலர்கண்டு
முகம் மலர்ந்து 

மலர்
மலர் பிடுங்கி
மனம் மகிழ்ந்து மலர்
மலர் சூடும்.
மலரும் முகம் மலர்ந்து
மகிழ்வில் மலர் முறுவலுறும்.
கொடுப்பதில் பெருமை மலருக்கு
பறிப்பதில் பெருமை மனிதனுக்கு.
இன்னும் மலரா 

ஆக்கம்  நோர்வே நக்கீரா

சுதர்சன் எழுதிய யாரும் இல்லாத விடியாத




















அறை கூவல்!
விடியும் என்று
காத்திருந்தேன்
நிலமும் ஏங்குகிறது
என்னோடு சேர்ந்து
விடியலுக்காய்
விட்டு விட்டு போக
மனம் விடுதில்லை
நடுக்கம் உடலுறுப்புக்கு தானே

மனம் என்பது
பிரம்மையின்
வடிவில்லா
உணர்வே என்பதால்
கூக்குரல் இட்டு
அழைக்க ஆளில்லை
ஆனாலும்
இரவு நாய்களின்
அலறல்கள்
அருகில் தான் கேட்கிறது

சென்று பார்க்க
கால் நடுங்குகிறது
அறைகூவல்
கூவுகிறேன்
யாரும் இல்லாத
விடியாத
வனாந்தரத்தில்


ஆக்கம் சுதர்சன்


             

குறுங்கவிதை கவித்தென்றல்‬ எழுதிய

















சிரித்தழைக்கும் உன் சிரிப்பொலியில் 
ஒரு ராகம்.....

தெறித்தொளிக்கும் உன் விழியில் 
ஒரு வேகம்......

கொதித்தாறிய பால் நிறத்தில் 
உன் தேகம்......

வெடித்தெழுகிறது என்னுள் ஒரு வகை 
இனம் புரியாத மோகம்...


ஆக்கம்கவித்தென்றல் aஏரூர்

மார்ஷல் வன்னி எழுதிய உன்னோடு ஒரு நொடி

















தினமும் காலையில் 
கண்விழிக்கையில்
கண்ணோரம் ஒரு முத்தம் !

கை கொண்டு உன்னை வருடி 
விட கன்னத்தில் இன் முத்தம் !


என்னுள் வெறும் கனவு தான் 
ஆனாலும் இதமாகிறது என்
மனம் உன் மணத்தால் !


எனக்கு மட்டும் பேனா முனை
உனக்கு மட்டும் இதழ்களா??


உன்னோடு
ஒரு நொடி
உன் இதழ்களாக
வேண்டும் !!

ஆக்கம் மார்ஷல் வன்னிvan


Mittwoch, 30. März 2016

கவித்தென்றல்‬ எழுதிய மீனைப் போல்












நிரம்பிய நீர் குளத்திலிருக்கும் வரை மீனுக்காய்
உறவாடும் கொக்கை போல் உறவுகள்
குளம் வற்றிய போதும் அதனுள்ளேயே இறக்கும்
மீனைப் போல் வாழ்வதே நட்புகள்..
சிறந்த நட்பு துன்பத்திலும் பிரியாது 
உயிரையும் தரக்கூடியது..!!
உடுக்கை இழந்தவன் கைபோல ...
இடுக்கண் களைவதாம் நட்பு

ஆக்கம்கவித்தென்றல் ஏரூர்

a 






கவிக்குயில் சிவரமணியின் குறுங்கவிதை "கண்ணீர்க்கடலில்"















காதல் எனும் முத்து எடுக்கமுடியும் 
முத்து கரை சேர்வதும் உண்டு 
கண்ணீர் கடலில் தத்தளிப்பதும் உண்டு 
கையாள்பவர் கைகளில் தான் முத்தின் சிறப்பும் 

கரைசேர்ந்து சிரிப்பதும்
கண்ணீர்க்கடலில் மூழ்குவதும்!!

ஆக்கம்  கவிக்குயில்









சிவரமணி

Dienstag, 29. März 2016

ஈழத்துப்பித்தனின்‬ குறுங்கவிதை "ஆடை உடுத்தி அழகுறும் காலம்"
















அம்மணமாய் கிடந்த மரங்கள்
ஆடை உடுத்தி அழகுறும் காலம்ஆடையோடு திரிந்த மனிதர்
ஆதாம் ஏவாள் காலம் நோக்கிஅடி வைக்கும் காலம்..


ஆக்கம் 












ஈழத்துப்பித்தன்














கவித்தென்றல்‬ எழுதிய தீண்டும் மண்ணறையோ..





















இரவில் கல்லெறிந்து
என் கனவு கலைந்ததம்மா...
உன் நினைவில் நெஞ்செரிந்து 
என் இதயம் கரைந்ததம்மா...
நிலவே நிலவே நீ தான்
என் உயிரம்மா...

காதல் என்பது தற்கொலையோ...
நீ பாவமென்றெனை ஏற்கலயோ..
சோகமென்றும் என் நிலையோ...
என் தேகம் தீண்டும் மண்ணறையோ.


.ஆக்கம்கவித்தென்றல்aஏரூர்

சுவிசில் இசைக்குயில் 2016 பாலர்பிரிவுத்முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்"பிரஷா”

இன்று புலம் பெயர்நாடுகளில் எமது சமூகத்தினர் முறைப்படி வாய்பாட்ட இசைக்கருவிகள்னர் ,

அந்தவகையில்  சுவிசில் இடம்பெற்ற  இசைக்குயில் 2016 பாலர்பிரிவு பாடல் போட்டி நிகழ்வில், பாடி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்  உள்ளார் பிரஷா,
                                              
 இவர் இதுபோன்று இன்னும் பல போட்டி நிகழ்வில்கலந்து தன் திறனைக்காட்டி சிறப்புற வாழ்த்துவோம்

இவர்கலைவானில்
இன்னும் சிறந்தோங்கி
இசை‌மழையில் எம்மை
நனையவைத்து
இனிமையுடன் சிறந்து
என்றும் வாழ்க வாழ்க பல்லாண்டு எனவாழ்த்துகள்

இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
எஸ்.ரிஎஸ்.இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோகோட்டை இணையம்
சிறுப்பிட்டிகொம்இணையம்

Montag, 28. März 2016

முல்லைத்தீவில் 'செங்கை ஆழியான்' நினைவேந்தல்28.2.2016 நடந்தேறியது

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் கலாநிதி கா.குணராசா அவர்கள் கடந்த 28.2.2016 அன்று இறைபதம் அடைந்தார். அவருக்கான 31 ம் நாள் நினைவேந்தல் ஒன்று இன்று (28.03.2016) நடைபெற்றுள்ளது.

மு/ ஒட்டுசுட்டான் ம.வி யில், அதிபர் தலைமையில் நடைபெற்ற காலைக் கூட்டத்தில்.. வே.முல்லைத்தீபனால் சில நிமிடங்கள் நினைவுரை நிகழ்த்தப்பட்டது. இவரின் படைப்புகள்  ஊடாக எம்ஈழத்து மக்களின் நினைவில் வரறாற்றில்  இவர் பதிவு இருக்கும் காலம் எமக்களித்த கலைப்பொக்கிசங்களில் ஒன்றாணபதிவு  ஈழத்தின் மூத்த எழுத்தாளர் கலாநிதிகா.குணராசா  அவர்களின்   படைப்புக்கள்  உலகம் உள்ளவரை அவர் படைப்புக்கள் இருக்கும் இவ்வேளையில் ஈழத்துக்கலைஞர்களின் சார்பாக அவரின் 31 ம் நாள் நினைவேந்தல் நாளை மனம் நிறுத்தி அவர் ஆத்மா சாந்தியடைய வணங்குகின்றோம்


தகவல் முல்லை தீபன் 

கவிக்குயில் சிவரமணியின் அழகி
















வெண்மேகம் குழைந்தெடுத்த
குழைந்தெடுத்த 
பொன்மேனி தழுவிடும்
வெண்னாடை மறைத்து நிற்கும்
வெள்ளை நிறத்தழகி


கண்ணிரண்டில் கூர்மை கத்திபோல் வீச்சு
திறவாத இதழோசெம்பருத்திப்பூ
நீண்ட சாலையிலேநேர்பாலம்
நின் முகத்தில் கூர் மூக்கு

கோபத்தில் கொதித்தாலும்
கொஞ்சினால் மிஞ்சும் கடன்காரி
சாமுத்தித்திராக இலட்சனத்தில் சற்றே அகங்காரி
தலைசாய்த்து பார்த்தாலோ
தனைமறக்கும் காளைகள் தான்.

ஆக்கம்  கவிக்குயில் சிவரமணி


Sonntag, 27. März 2016

கவிஞை ரதிமோகனின் பெண்ணின்றி வாழ்வேது.















வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்பவள்
வாழ்நாள் பூரா உன் கூட வருபவள்
விழியிலே அன்பை சொல்லி
வழி நடத்திச் செல்பவள் பெண்..


இல்லத்தை கோயிலாக்குவாள்
குத்துவிளக்காக ஒளி தருவாள்
அன்பெனும் மழையாலே நினை
நீராட்டி தாலாட்டி தூங்க வைப்பாள்..

அன்பிற்கு மட்டும்அடிமையாகிடுவாள்
ஆள நினைத்தால் சீறும் புலியாவாள்
பொறுமைக்கு இலக்கணமும் அவளே
பொறுமையை சோதித்தால்
பொசுக்கிடும் மின்சாரமும் அவளே..

பெண்ணோடு மெய்யென வாழ்ந்திடு
மெய்கொண்டு உயிரோடு கலந்திடு
கையோடு கை சேர்த்து நடந்திடு
கண்கலங்காமல் அவளை காத்திடு

காதல் கொண்ட தேவதையும் அவளே
கனி மொழி பேசும் த த்தையும் அவளே
பெண்ணின்றி உன் வாழ்வு சுவைத்திடுமா
கண்களாக அவளை நினைத்திடு
கடவுள் தந்த வரம் நீ என்றிடு
அவளின்றி இன்பமான வாழ்வேதுனக்கு...
ஆக்கம்: ரதிமோகன்

  கவிஞை ரதிமோகன்

நெடுந்தீவு தனுவின் நிறைவுறும் நியதிகள்.... !












பலிப்பீடத்தில்
அடுக்கப்பட்ட
விறகுகட்குள்
இரகசிய ஒப்பந்தம்
நடக்கின்றது...
மந்தை ஒன்றின்
எரிபலியில்
பூப்பெய்கிறாள்
நிர்வாண பெண்...
வாசனை
மலர் தோப்பில்
ஒற்றை இதழின்
அட்சய கண்களால்
குன்றுகளின்
தலையில்
வழிந்தோடுகின்றது....
மரணத்தின்
உள் சுத்திகரிப்பில்
சருகுகளின்
வியர்வைகளும்
வாசனையாகிறது...
மூங்கில் துளைக்குள்
புகுத்தப்பட்ட
காற்றை
விசிக்கிய படி
நடக்கின்றான்
வெறுங்காலான்...
விகாரமான
சொற்களால்
ரசனை இழக்கின்றது
ஒற்றையடி
பாதையோர
முட்செடி காடு....
அந்தி சாய்ந்த
சூரியனே
அகத்தினையை
காட்டி கொடுத்த
உளவாளி
போலும்...
பிசுபிசுத்த
கொழுத்த
ஆடொன்றின்
இரத்தம் தோய்ந்த
கால் மிதிகள்...
புகைந்து கொண்டிருக்கும்
பட்டைகளுக்கு இடையில்
நிர்வான பெண்ணுக்கும்
வெறும் காலோனுக்கும்...
பலிப்பீடத்தில்
அடுக்கப்பட்ட
விறகுகளுள்
இரகசிய திருமணம்
நடக்கின்றது.

ஆக்கம் நெடுந்தீவுநெடுந்தீவு தனு இன் சுயவிவரப் படம் தனு

Disqus Shortname

Comments system

 
Blogger Templates