Social Icons

Mittwoch, 17. August 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய அக்கம் பக்கம் பார்த்து

அப்பனுக்கு சாக்குச் சொல்லி
ஆத்துப் பக்கம் வாறேன் மச்சான் நானு
அக்கரையில் ஆறுமில்லையென்றா
ஆள விட்டு மச்சான் சொல்லு தூது

அக்கம் பக்கம் பார்த்துப் புட்டு
ஆத்துக்குள்ள மூழ்கி நில்லு
அச்சமின்றி நான் வருவேன்
அணைச்சி என்னை தொட்டுக் கொள்ளு

அந்தி சாயும் நேரத்துக்குள்ள உன்
ஆசைகளை தீர்த்துக் கொள்ளு
அத்துமீறி ஆறும் வந்தா என்ன
ஆத்துக்குள்ள அமுக்கிக் கொள்ளு

அப்புறமா நீரில் என்ன
ஆடையாக உடுத்துக் கொள்ளு
அவ்வப் போதும் நீயும் என்ன
அயிர மீனு போல கடித்துக் கொள்ளு

ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

Montag, 15. August 2016

எழுத்தாளர் க.முருகதாசன் எழுதிய பாரம் தூக்கியி

ஓட்டமும் நடையுமான வாழ்க்கை
பரபரப்பும் படபடப்புமான வாழ்க்கை
மனம் தெளிய உடல் இளைப்பாற
மகிழ்வான நாட்கள் காண
தினங்களாய் உருவெடுக்கும்

குதூகல காலமாம் ஓக்டோபர் நாள்
Oktoberfest என்றுபெயர் கொண்டு
குடித்து மகிழ்ந்து நடனமாடி
கெக்கட்டுமிட்டு சிரித்திடும்
நாளுக்காய் பாரம் தூக்கியின்
துணையுடன்
ஆயத்தம் நடக்கிறது


ஆக்கம்  ஆய்வாளர் எமுத்தாளர்     
                             க.முருகதாசன்                                  




Sonntag, 14. August 2016

மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய ஆனந்த யாழ் மீட்டினாய்

எழுது கோலெடுத்து இனிமையாய் இதயங்களில்
நீங்கா இடம்பிடித்தாய்
மெட்டுக்கு பாட்டெழுதி
சொட்டு சொட்டாய் இடம் பிடித்துவிட்டாய்
அனா .ஆவனா என்ற கவிநூலில்
ஆழம் பந்திந்தாய்
அப்பாவில் மகிமைகளை அழகாக
ஆனந்த யாழ் மீட்டினாய்
பருவ மழைத்துளியில்
பல உயிர் வாழ்வது போன்று
உன் கவித்துளியில் பல உயிர்களில்
உறுதியாய் நிலையானவனானாய்
நா முத்துக்குமார் என்ற நவீன கவிஞனின்
எழுதுகோலை உடைத்து விட்டடான்
கல்லாய் அமர்ந்த கடவுள்
கவிஞனின் கவிகளை ரசித்தவர்களி

ஆக்கம் மட்டுநகர்
கமல்தாஸ்

Samstag, 6. August 2016

யேர்மனி ஹாம்அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாகர் ஆலயத்தில் சப்பறத்திருவிழா 06.08.16 நிழல்படங்களைப்பார்க்க

 யேர்மனியின் 06.08.16 சிறப்பானமுறையில் ஹாம் மக்களால் சப்பறத்திருவியா நடைபெற்றுள்ளது பல ஆண்டுகளாக சிற்பாக இடம்பெற்றுவரும் ஹாம் ஆலயத்திருவிழா நடைபெற்று இன்று சப்பறத்திருவிழாவானது சிறப்பாக பிள்ளையார் வெளிவிதிஊலாவந்து  இருப்பிடத்தை அடைநதுள்ளார் என எமது முகவர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் அவர்கள் அறியத்துந்துள்ளார்
 












நிழல்படங்கள்  ஊடகவியலாளர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன்
முல்லை மோகன் 




கவிஞர். ஏரூர் கே. நெளஷாத் எழுதிய வயிற்றுப்பிளைப்பு

ஓரடி வயிற்றுக்கு
உணவுக்கு வழி தேட
நூறடி கயிற்றினில்
நுண்ணிய நடையிது.
பாரடி மீதிலே
பசிக்காக ஏங்கியே
மாரடித்து வாழ்ந்திடும்
மழலைகள் சாபமோ ?
கோரப்பிடி வறுமையோ
கொல்லுது தினம் தினம்
ஊரடி போயினும்
உதவுவார் யாருளர்
நேரடியாய் எம்மை
நேசத்தை காட்டிலர்
வாரடி படுகின்றோம்
வஞ்சகர் கைகளால்
போராடி வாழ்கிறோம்
பொய்யான வாழ்க்கையை
உருப்படியாய் எமை
உயர்த்துவோர் காண்கிலேன்
தெருப்படி ஓரமே
தேயு து காலமே
ஆரடி காரணம்
என்பதைக் கூறணும்
சீரடி சிறப்படி
சீக்கிரம் தோன்றுமோ?
#
 
ஆக்கம் கவிஞர்.
ஏரூர் கே. நெளஷா

Dienstag, 2. August 2016

கவிப்புயல் இனியவன் எழுதிய மனைவிக்கு ஒரு கவிதை

ஒரு வேளை எனக்கு முன்...
என் மனைவி இறந்தால்...
அவளுக்காக உலகிலையே ...
கோயில் ஒன்றைக்கட்டுவேன் ....
.இதுவே மனைவிக்கு கட்டிய ....
மனைவி மஹாலாகஇருக்கும்...
அந்த கோயிலை நான் தான்...
நான் தான் அதன் அமைப்பை
வடிவமைப்பேன்...!

நான் தான் கல் உடைப்பேன் ...
நான் தான் மண் சுமப்பேன் ...
நான்தான் கட்டி முடிப்பேன்...
நானே அழகு பார்ப்பேன்...
அந்த கோவிலில் என்குடும்ப...
உறுப்பினரை யாரையும் ...
வணங்க விடமாட்டேன் ....!!!

அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ...
நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!!
என் மீதிக்காலத்தை அங்கேயே ..
உண்ணா நோன்பிருந்து ......
இறந்து விடுவேன் ... !!!

ஆக்கம்

கவிப்புயல்

      

இனியவன்

கவிஞர் எழுத்தாளர் தயாநிதிய வேட்டைகள்...!

அழிவுகள்
அடிதொடர
ஆணவங்கள்
அத்து மீற
மானிடம்
மரண விழிம்பில்...!

இனம் ஒன்று
தன் இனத்தை
அழிப்பதில்லை
மனிதன் மட்டும்
விதி விலக்கனான்..!

குறி வைப்பதும்
குழி வெட்டுவதும்
பழி போடுவதும்
பழி தீர்ப்பதும்
விதியல்ல சதி..!

முன்னேற முடியாத
மூர்க்க சிந்தனைகள்
மார்க்கம் சொன்னதை
மறந்த மந்தைகள்
மதத்தின் பெயராலே
மனித வேட்டைகள்..!
 
ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி


 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.எழுதிய சந்திப்பு

சந்திப்பு - கூட்டம் - கலந்துரையாடல் சிந்திப்பு
பந்தியிடும் உலக இயக்கத் தொடர்பு.
விந்தையுடை பல சாதனைகள் உழைப்பு
சந்திக்கும் மனிதரால், சிந்தனைகளால் உதிப்பு.

சந்திக்கும் உடல்களால் சீவராசிகள் பிறப்பு.
சந்திக்கும் ஆதவனால் நாளின் பிறப்பு.
அந்தமற்ற அணுக்கதிர்கள் ஆற்றும் இணைப்பு
அளவற்ற கோள்கள் கண்களிற்குப் பதிப்பு.

சாலைகள் சந்திப்பு உலக இணைப்பு.
வேலை குறைவுபாடு குறுக்குச் சந்திப்பு.
மாலைச் சந்திப்பு இருட்டு வியப்பு.
மூலை ஒரு நிகழாத சந்திப்பு.

முகநூல் கணனியிலொரு சிறந்த சந்திப்பு.
அகம் விரும்புவதும் விரும்பாததும் தொகுப்பு.
தகவுடை நிலாமுற்றக் குழு இணைப்பு.
முகம் மலருதென் கவிதையும் தரிப்பு

சிந்தனையில் உதிக்கும் கவிதைக் குதிப்பு
சொந்தப் பூவை அரங்கேற்றத் தவிப்பு.
வந்தது நிலாமுற்ற ஆண்டுப் பிறப்பு.
முந்தினால் பொறலாம் முன் வரிசையிருப்பு.

பா ஆக்கம் பா வானதி
வேதா.
இலங்காதிலகம்.
                                                              டென்மார்க்.

சுதாகரன் சுதர்சன் எழுதிய புதை குழி

மயானத்தில் படுத்துக்கொண்டு
புதை குழி தேடுகிறேன்
ஆனாலும் தேவையில்லை

மரணத்தின் பின் விரும்புகிறேன்
தென்னோலையில்
படுக்கை கட்டி
ஒரு துளி கண்ணீர் இன்றி
அழு குரல் கேட்காமல்
ஒரு வெட்ட வெளியில்
புதைத்து விடுவதை

உயிருடன் இருக்கும் கொடுக்காத
சுகத்தயா
மரணத்தின் பின்
கொடுக்க போகிறார்கள்
மரத்தில் பெட்டி செய்து
கல்லறை எனும்
பேயுறங்கும் வீடமைத்து
மரணத்தும் உக்கா
நிலையில் உடலை
மூடி வைத்து
மீண்டும் கொடுமையை
தானே கொடுக்க போகிறார்கள்

காடுகளில் உணவின்றி
அலையும் மிருகங்கள்
சந்தோசப்படட்டும்
ஒரு வேளை உணவு
தேடாமல் கிடைத்து
விட்டது என்று
அங்காவது என்னால்
ஒரு புண்ணியம் கிடைக்கும்
 
 
ஆக்கம்
சுதாகரன் சுதர்சன்
 
 

கவிப்புயல் இனியவன் எழுதிய தேனிலும் இனியது காதலே



என்னவளின் .....
இடையில் மடிப்பு அழகு ...
நடையில் சுவடு அழகு ...
சடையில் பூ அழகு ...
விழியில் மை அழகு ...!!!

பேச்சில் வார்த்தை அழகு ...
மூச்சில் காற்றழகு ..
பார்வையில் வீச்சழகு!

சொல்லழகு...
பல்லழகு...
உள்ளம் அழகு...
புருவ வில்லழகு....!!!

காலழகு...
மேலழகு...
கண்ணழகு...
மெய் அழகு,.....
அவளை வர்ணிக்கும்
கவிதை அவளைவிட ...
அழகு ............!!!

கவிப்புயல் இனியவன் எழுதிய தேனிலும் இனியது காதலே



என்னவளின் .....
இடையில் மடிப்பு அழகு ...
நடையில் சுவடு அழகு ...
சடையில் பூ அழகு ...
விழியில் மை அழகு ...!!!

பேச்சில் வார்த்தை அழகு ...
மூச்சில் காற்றழகு ..
பார்வையில் வீச்சழகு!

சொல்லழகு...
பல்லழகு...
உள்ளம் அழகு...
புருவ வில்லழகு....!!!

காலழகு...
மேலழகு...
கண்ணழகு...
மெய் அழகு,.....
அவளை வர்ணிக்கும்
கவிதை அவளைவிட ...
அழகு ............!!!

ஆக்கம் கவிப்புயல் இனியவன்

Montag, 1. August 2016

மீண்டும் நாசகாறர்களால் stsstduio.com முடக்கப்பட்டுள்ளது

வணக்கம் stsstduio.com எம்மகர்கலைஞர் இணைய அன்பர்களே   மீண்டும் எம்மவர் இணையமானது கிருமிநாசகாறர்களால் தடைக்குள்ளாக்கப்பட்டுள்ளது  இந்த ஆண்டில் மட்டும் ஒண்பதாவது முறையா இந்தச்செயல் நடைபெற்றுள்ளது இதனை சீர்செய்யும் பணியில் நாம் கடும் முயற்ச்சியில் செயலாற்றிவருகின்றோம் நாளை  இதன் பணிகள் நிறைவாகும்  அதுவரை துவை இணையமானhttp://stsstudio1.blogspot.de
அல்லது http://ststamil.blogspot.de என்கின்ற எம்மவர் கலையின் உதவிணையமாக இதுபோன்ற இடையூறைத்தவிக்கவே இந்த துணை இணையங்கள் உருவாக்கப்பட்டது உங்கள் ஆதரவுக்கு உங்கள் ஆக்கத்துக்கு என்றும் இந்த  இணையங்கள் பணியாற்ற காத்திருக்கின்றது தொடர்வோம்  அன்புடன் எமது கலைஞர் இணைய நிர்வாகத்தினர்

கவிப்புயல் இனியவன் எழுதிய இந்த சுகம் போதும் அன்பே

அதிகாலை வேளை....
அகிலமே அமைதியாய் ...
இரு விழியை அகன்றேன் ...
வான் குருவிகள் வானிசை ..
சில்லென்ற காற்று உடல் பட ...
எனைமறந்து உன்னை .....
நினைத்தேன் ...

(இந்த சுகம் போதும் அன்பே ...)

தண்ணிரை மோர்ந்தேன் ....
பன்னீரை போல் உன் மென்மை..
ஒருதுளி உடலில் பட ...
இணைந்துவிட்டேன் உன் ...
நினைவில் ......

(இந்த சுகம் போதும் அன்பே ...)

ஒற்றையடி பாதையிலே
ஓற்றைசடை முடி தேடி ...
பற்றைக்குள் பதுங்கி இருக்க ...
பற்றை செடிகள் ஆடியது ...
காற்று அசைக்க வில்லை ..
என் இதய துடிப்பு அசைத்தத்தடி ...!!

(இந்த சுகம் போதும் அன்பே ...)

கண் மூடினால் கனவாய் ..
கண் திறந்தால் நினையாய் ...
கனவில் வந்து நினைவை இழப்பதா ...?
நினைவில் வந்து கனவை இழப்பதா ...?
வந்தது உன் குறுஞ்செய்தி ...
நான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..?
கனவில் வர நான் தயார் என்று ...!!!
 
 
ஆக்கம் கவிப்புயல் இனியவன்


Disqus Shortname

Comments system

 
Blogger Templates