Social Icons

Samstag, 18. Februar 2017

மதிசுதாவின் ஊமாண்டியும் அதில்பயணித்த உறவுகளும்

"மரணம் என்பது மற்றவருக்கு நடக்கும் போது ஒரு சம்பவம் ஆனால் எமக்கென்று நடக்கும் போது ஏதோ புதிசா நடக்கிற மாதிரி இருக்கும்"

உம்மாண்டி முன்னோட்டத்தில் வரும் இக் காட்சித் துண்டை படமாக்கியவனும் இன்று அதை நேரடியாக நிருபித்து விட்டான்.
உம்மாண்டியில் பணியாற்றியவரை அறிமுகப்படுத்தும் பதிவை தொடராக எழுதிக் கொண்டிருக்கும் நான் அடுத்து எழுத நினைத்தவன் தன் மரணப்பதிவையும் இணைக்க வைத்து விட்டான்.

2) Sanjee Sanjeev
படத்தில் வரும் ஒஸ்மோ, phantom shots முழுவதுக்கும் சொந்தக்காரன் இவன் தான்.
அவனிடம் சூட் பண்ண வரச் சொல்லிக் கேட்டால் வரும் முதல் கேள்வி "அப்பா (செல்லா) சொன்னால் சரி"
செல்லா அண்ணாவிடம் கேட்டால் "அவன் free எண்டால் நீ கொண்டு போ" இந்த இரு வார்த்தைகளும் போதும் அவர்கள் உறவின் நெருக்கம் சொல்ல...
படத்தின் முதலாவது காட்சியானது சந்நிதி கோயிலில் top view, அதை எடுப்பதற்கு 2 நாள் காலை சூரியன் உதயமாகும் நேரம் போய் சனம் போதாது என திரும்பி வந்து மூன்றாம் நாள் போய்த் தான் எடுத்தோம்.
ஒரு ஒற்றைக் காட்சிக்காக சன்சிகனோடும் என்னோடும் சங்குப் பிட்டிவரை சலிக்காமல் வந்து எடுத்து விட்டுப் போவான்.
அவனுக்கென்று இருந்தது ஒரே ஒரு ஆசை தான். அடிக்கடி சொல்வான் "அண்ணா அப்பாவும் ஓகே சொல்லீட்டார் நீங்கள் ஒரு நல்ல பாட்டை வாங்கி வாங்கோ கமரா போக்குவரத்துச் செலவு எங்களோடை. நல்லதா ஒரு பாட்டுச் செய்யோணும்"

ஒரு உண்மையான உழைப்பாளியின் வாழ் நாட்கள் அவன் ஆசையோடு செய்த படத்தைப் பார்க்காமலே முடிந்து விட்டது.

நேற்று நான் வேலைக்குச் செல்லும் போது மூத்தவிநாயகர் கோயிலடியில் நின்று கூப்பிட்டான் "அண்ணா ஒரு கதை நில்லுங்கோ" என, "நேரம் போட்டுதட வரேக்கை வாறன்" என்று சொன்னது கூட அவன் போயிட்டான் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது.

உன்னை இழந்து நிற்கும் செல்லா அண்ணாவுக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறோம்.

இன்று நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் எமை விட்டுப் பிரிந்த அன்புச் சகோதரனது ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates