Social Icons

Montag, 19. September 2016

ஈழத் தென்றல் கவிதைகள்எழுதிய பட்டுப் பாதங்களை தொட்டிட நினைத்தேன்

பட்டுப் பாதங்களை தொட்டிட நினைத்தேன்
அவளின் தோழி உறுத்துப் பார்த்தாள்.

இடையழகில் மயங்கி கிறங்கி நின்றேன்
நீயார் எனவே முறைத்துப் பார்த்தாள்.

சொற்கள் மறந்து ஊமையாய் நின்றேன்
கண்களாலே பல கணைகள் எய்தாள்

என்னவள் அழகை அள்ளிட நினைத்தேன்
அநியாயம் ஈதென அரணாய் நின்றாள்.

என்னவள் இவளென அவளிடம் சொன்னேன்
ஆகாதென்றே பல வாதங்கள் செய்தாள்.

கள்ளியே எந்தன் காதலி நீயும்
தள்ளியே நிற்கும் பாவனை ஏனோ?

தோழி எறியும் கூர்முனை வீச்சு
காதலை சொல்லும் சாகசம் தானோ?

நாழிகை கழியும் சோகத்தை அறிவாய்
வேல்விழி திருப்பி மலர் முகம் காட்டு!

ஆக்கம் 

                                                              ஈழத் தென்றல் கவிதைகள்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates