Social Icons

Dienstag, 23. Februar 2016

நெடுந்தீவு தனுவிபவளமல்லி பங்கயமே..

கொண்டையில மல்லி வைத்து
கொத்தாக எனை ஈர்த்து...
கொவ்வைப்பழ உதட்டால
கொல்லத்தான் பார்ப்பவளே...
வளைந்திருக்கும் கையினில
வளையல்கள் சிரிக்குதடி - நீ
வதனம் பார்த்து நடக்கையில
வண்டுகள் அழுகுதடி...
காதோர கம்மல்களாய்
காலோரம் சுத்துறனே...
காணாமல் நடிக்குறீயே - உன்
காதோர முடிபோல...
பச்சை வயலோரம்
பவளமாக போறவளே - அந்த
பங்கயமும் தோற்றிடுமே
பண்பான உன் முகத்தில்...
இடையிலே பானையோடு
இடுப்பாட்டி போறவளே...
இங்கிருந்து நோக்கையில
இதமாக இருக்குதடி...
கழுத்திலே வளையலிட்டு
கட்டுடலால் எனையீர்த்து...
கன்னத்தில் நச்சொன்று - நீ
கதறாமல் தந்திடவா.....நெடுந்தீவு தனு

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates