பூத்த வானம்
கருமையாகும் 
கண்கள் சொரியும்
இரத்த மழை
இனியும் வரும்
உனைத்தேடி
பனிச்செடிகளில்
இரத்தம் ஓட
ஓடிவிட்டோம்
என நினைக்காதே
வருகிறோம்
புது நடை போட்டு
இளைய புலிகளாய்
அருகம் புல்
சாறு குடித்து
தவழ்ந்து
விளையாடிய
என் வீட்டு முற்றத்தில்
விரைவில்
ஏற்றுவேன்
காவியக்கொடி
புலிக்கொடியை
பகையே
ஓடிவிடு
புகை பார்த்து
அதில் நீரூற்றி
அணைத்து விட்டு
வெற்றிக்கொண்டாட்டமா
உனக்கு
எரி மலையாய்
எழுகிறோம் பார்
இளைய தலைமுறை நாம்
கண் கட்டி வித்தை
காட்டி
கனவுலகில்
மிதந்து
மாண்டு போன
வரலாறு பல
நீ மறவாய்
புலிப்பாய்ச்சல்
குடல் கிழிக்க
புற முதுகிட்டு ஓடியதை
நாம் மறவோம்
பகையே
மழைச்சாரல்
எனை நனைக்க
ஜன்னலோரம்
அமர்ந்திருந்து
அழகை ரசிக்க
அதையும் கறையாக்கி
என் முற்றத்தில்
புதை குழி புதைத்தாயே
என் குடல் உருவி
கையில் எடுத்து
தவழ்ந்து
ஓடியதே
பல உறவுகள்
அவைகளின்
தியாகங்கள்
மறவேனா
பகையே
விழித்திரு
உனக்கும்
காலக்கெடு
தருகிறோம்
முன் எச்சரிக்கையாய்
புலிகள் நாம்
இளைய புலிகள்
நாம்
ஆக்கம் பவித்ரா நந்தகுமார்