Social Icons

Mittwoch, 13. Juli 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய சீதனம் பெண்ணின் மூலதனம்

 அம்மி மிதிச்சு
அருந்ததி பார்த்து அழகா முடிப்போம் திருமணம்
இல்லறம் தொடங்க
இம்மியளவும் குறையாமல் கொடுப்போம் சீதனம்

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன் உண்மை வாக்கியம்
சொல்லால் அடங்கா
சுகங்கள் பெற்றால் பெண்கள் பெரும் பாக்கியம்

பெண்ணை சீரழிக்க
பெற்றவர்கள் கொடுப்பதில்லை சீதனம்
தன்னை வாழ வைக்க
தங்கம், ரொக்கமுடன் கொடுப்பார் சொகுசு வாகனம்

கணவன் கேட்ட நகைகள்
கழுத்தில் ஆடி பலர்முன் அழகா ஜொலிக்கும்
அதிகம் கேட்டதாக
அயலவர்கள் கடும் சொல் கணவனை பழிக்கும்

கேட்டதெல்லாம் தனக்கல்ல
கெட்ட பெயரை மட்டும் அவனில் ஒற்றிக்கொள்ளும்
வரதட்சணை வாங்கி
வாழ்கிற கபோதியென்று ஊரே கரிச்சிக் கொட்டும்

தன் உழைப்பால்
தாலி கட்டி பெண் ஆசைகளை தீர்க்க முடியாது
அளவுக்கு அதிகமாக
ஆசைப்பட்ட பெண்ணை வைத்து உலகில் வாழ இயலாது

கைக்கூலி வாங்கி
கரைப்பான் தண்ணி போல அவள் காசி என்ற நினைப்பாலே
கடனாளி இல்லாமல்
கவலைகள் மறந்து நிம்மதியாக இருப்பான் அவள் கூட

சீதனம் கொடுத்து
சிறப்புடன் வாழுது பிள்ளை பெற்று தம்பதி
சீ என சொல்லி
சினத்தில் அலைகிறது வாழ்வினை வெறுத்த சில புத்தி

ஆக்கம்

கவித்தென்றல் ஏரூர்


                                      

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates