Social Icons

Dienstag, 7. Juni 2016

ஈழத்து சினிமாவின் கனவுகள் மெய்ப்படும். !!!!

எமது கலைஞர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று எம்மால் வரும் இரண்டாம் திகதி பிரான்ஸ் மண்ணில் நடத்தப்பட இருக்கின்றது. எமது நிர்வாக குழுவை தெரிவுசெய்யும் பாரிய பொறுப்பு எமக்கும் அனைத்து கலைஞர்களாகிய உங்களுக்கும் உண்டு என்று நாம் ஆழமாக நம்புகின்றோம். எம் கொள்கைகளை பூரணமாக உள்வாங்கி எமது நிர்வாக குழுவை கொண்டு செல்வதற்கான தலைவர், உபதலைவர், செயலாளர், பொருளாளர் என்ற பதிவிக்கான வெற்றிடங்களுக்கு கலைஞர்களான நீங்களும் மக்களும் உங்களுக்கு தெரிந்த நபர்களின் பெயர்களை முன்மொழியுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்
எமது கொள்கைகள் உங்களுக்காக
அமைப்பின் முன்னிலை நோக்கங்கள்
''தமிழர்கள்'' என்ற நிலைபாட்டில் இருந்து மாற்றம் பெறாமல்
‪#‎உண்மை‬,
‪#‎நீதி‬,
‪#‎சத்தியம்‬,
‪#‎ஒழுக்கம்‬,
‪#‎சகோதரத்துவம்‬
என்ற மேன்மை பண்புகளுக்கு களங்கம் செய்யாமல் எமது ஈழத்து சினிமாவை வர்த்தக சந்தையை நோக்கி நகர்த்துவதுடன் நாம் அனுபவித்த வேதனையையும் துன்பத்தையும் கலைவடிவில் உலக மேடைக்கு எடுத்துச்சென்று எமக்கான ஒரு ஒரு விடியலை பெற்றுக் கொள்வதுடன் எமக்கான ஒரு சிறந்த கலைத்துறையை உருவாக்குவதுமேயாகும்.
அமைப்பின் இதர நோக்கங்கள்
1)எமது தேசிய,கலாச்சார விழுமியங்களுக்கு பங்கம் ஏற்படாமல் எம் நகர்வுகளை மேற்கொள்வதுடன் அனைவரையும் சகோதர உணர்வுடன் ஒருங்கிணைத்தல்
2)எமது கலைஞர்களுக்கு இடையில் ஒரு நல்லுணர்வை ஏற்படுத்துவதுடன் எம் கலைஞர்களுக்கு இடையில் ஏற்படும் பிணக்குகளை நீதி வழுவாது சமநிலையுடன் தீர்த்து வைத்தல்
3)எமது படைப்பாளிகளின் படைப்புக்களை பார்வையிட்டு அவர்களின் படைப்புகள் பற்றிய திறனாய்வுகளை வழங்குவதுடன் அவர்களின் நலனில் அக்கறையுடன் செயற்படல்
4)தேவையற்ற வதந்திகளையும் கலைஞர்கள் மீது களங்கம் விழை விப்பவர்களையும் இனம் காண்பதுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு துணை செல்பவர்களையும் மக்களின் படைப்பாளிகளின் பார்வைக்கு கொண்டு செல்லுதல்
5)பொதுவெளியில் தவறான வார்த்தையாடல்கள் பெண்கள் இருக்கும் பொது இடத்தில் கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்துபவர்களை படைப்பாளிகளுக்கும் மக்களுக்கும் தெரியபடுத்துதல்.
6)பிரதேச வாத நகர்வுகளை இனம் காண்பதுடன் பிரதேசவாதத்தினை உருவாக்கும் நபர்களை அடையாளப்படுத்துதல்
7)உலகில் உள்ள ஈழத்து சினிமா படைப்பாளிகள் அனைவரையும் சம மனிதர்களாக மதிப்பதுடன் எம் சக கலைஞர்களையும் வேற்று மொழி கலைஞர்களையும் உள்வாங்குவதுடன் எமது நீதியான எண்ணங்களையும் செயல்பாடுகளையும் எமது கலையின் வடிவில் வேற்று இன கலைஞர்களுக்கு விளங்கப்படுத்துவதுடன் வேற்று மொழிக் கலைஞர்களுடன் எம் முதன்மை நோக்கிற்கும் களங்கம் ஏற்படாமல் பயணித்தல்.
8)மாவீர் மாதமான கார்த்திகை, எம் இன அழிப்பு மாதமான வைகாசி ஆகிய மாதங்களில் கேளிக்கை நடவடிக்கைளை முற்று முழுதாக தடை செய்வதுடன் எம் வலிகளின் வடுக்களை சம சகோதர கலைஞர்களுக்கு எடுத்துச் செல்லுதல்.
9)ஒரு படைப்பு வெளிவரும்போது எமது அங்கத்தவர்கள் அனைவரும் அந்த படைப்புக்களை பகிர்ந்து அளிப்பதுடன் குறிப்பிட படைப்பு சம்பந்தமான விளம்பரங்களை செய்ய முன்வரவேண்டும்.
அதே சமயம் தமது படைப்புகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை மற்றவர்களின் படைப்புக்களுக்கும் வழங்க வேண்டும்.
10)வருடாந்த கூட்டத்தின் போது தனிப்பட்ட முறையிலான புகைப்படங்கள் மற்றவர்களின் பார்வையில் தவறான எண்ணத்தை தூண்டாத வரையில் எடுக்கப்பட வேண்டும்.
11)ஈழத்துச்சினிமா சாதனையும் வேதனையும் அமைப்பின்கீழ் இன்னும் பல கிளை அமைப்புக்கள் உருவாக்கப்படும்.
அந்த அமைப்புக்களாக
1)தயாரிப்பாளர் சங்கம்
2)இயக்குனர் சங்கம்
3)இசையமைப்பாளர் சங்கம்
4)நடிகர் சங்கம்
5)தொழினுட்பவியலாளர் சங்கம்
இந்த ஒவ்வொரு சங்கமும் தமது அங்கத்தவர்களின் உரிமையை பாதுக்காப்பதுடன் நியாமான ஊதியத்தை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை செய்தல்
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தொழில்நுட்ப வியலாளர் அனைவரது சம்பளங்களும் பொதுமைப்படுத்தப்பட்டு அவர்கள் வாழும் நாட்டின் சம்பள சட்டதிட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட வேண்டும்.
நன்றி
உருவாக்கல் குழுமம்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates