Social Icons

Dienstag, 3. Mai 2016

புலவூரான் ரிஷியின் சிறகு தேடும் தேவதைகள்




அழுகையின் ஈரம் 
அணையுமுன் 
எனை 
அணைத்துக்கொள்!
கோபத்தில் 
இதழ்களின் 
படபடப்பை 
விழிகளால் விழுங்கு!
நோயில் மருந்து 
தேடுவதை மறந்து 
மையலால் 
மருந்துசெய்!
நகங்களை 
இமைகளின் மேனியில் 
நகர்த்த்தி 
உயிருக்குள் 
உயிர் சுரக்கச்செய்!
தேனீருக்கு பதில் 
முத்தங்களோடு 
அதிகாலையை 
முடிக்க‌ பழகு!
ஒரு பிடியேனும் 
ஊட்டிவிடு 
உதட்டோரத்தில் 
ஒட்டியதை மட்டும் 
உறிஞ்சியெடு!
கண் அசைவுகளில் 
என் வெட்கங்களை 
கட்டியிழுத்து_உன் 
புன்னகைக்குள் 
தொட்டிலிடு!
பனியிரவில் 
மூச்சுக்காற்றால் 
என் தேக தேசத்தில் 
பணிசெய்!
உன் உயிர் 
குழைத்து_என் 
உணர்ச்சிகளில் 
ஊற்றி உறையவிடு!
மெளனத்தால்
என் மனதை
அளவை செய்
தென்றல் எனை
மயக்கும் வேளை
தலை சாய‌
மடிகொடு
என் தவறுக்கு
தந்தையாகி
தீர்ப்பளி
பசிக்கையில்
தாயாகி
உணவூட்டு
துன்பத்தில்
தோழியாகி
துணிவுசெய்
முத்த திருடா! 
செத்தவளை 
சேர்ந்தவனே! 
என் பிராணவாயுவில்
பிரியத்தை
கலவைசெய்
முதல்காதலனை 
முத்தங்களால் 
வெளியேற்றி! 
முதல்காதல் 
நினைவு மூச்சை 
முரட்டன்பால் 
மூழ்கச்செய்
மாதம் ஒரு 
முறையேனும் 
நீ மனைவி 
நான் கணவன்!
உன் முதல்காதல் 
மறந்துபோக‌ 
மனைவியாய் 
என் செய்ய 
நான்?????

ஆக்கம் புலவூரான் ரிஷி

a

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates