Social Icons

Sonntag, 1. Mai 2016

மஞ்சு மோகன் எழுதிய ஒரு கணம் சிந்திப்போமா?

பேசித்தீர்க்க முடியாத விடயம் ஒன்று இருக்கா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் எந்தப் பிர்ச்சனை என்றாலும் பேசித்தீர்க்கலாம்.
ஒரு உறவு, அது நட்பாக இருந்தாலும், கணவன் மனைவியாக இருந்தாலும், அண்ணா, தங்கை, தம்பி.. பல உறவுகள். என்ன உறவாக இருந்தாலும் ஏதாவது ஒரு சிறு மனக்கஷ்டம் ஏற்பட்டால் அது சில சமயம் பெரிதாகவும் மாறிவிடுகிறது.
இதெல்லாம் வாழ்க்கையில் சகசமான விடயங்கள். ஆனால் இப்படியான மனக்கஷ்டங்கள் தீரவேண்டுமானால் நீண்ட இடைவெளி கூடாது. இடைவெளி கூடும்போது பகை உணர்ச்சியும் கூடும். இதனால் மன உளைச்சலும் கூடும்.
இந்த இடைவெளி நமது ஈகோ என்பதனால் தான் ஏற்படுகிறது.
அதை விட்டெறிந்தால் வாழ்க்கை எவ்வளவு சுவாரஷ்யமாக இருக்கும். யார் முதல் தொடங்குவது என்பதும், ஏன்
அவர் பேசினால் என்று நினைப்பதும்தான்.. அப்பப்பா..
ஒரு சமயம் கடந்து வந்த பாதையை நினைத்துப்பார்த்தால் எமக்கே வேடிக்கையாக இருக்கும். நாம் தான் இதை செய்தோமா என்று எண்ணவும் தோன்றும். ஆனால்
வாழ்க்கை முடிந்துவிடும்.
ஆகவே, எந்த உறவாக இருந்தாலும் மனம் திறந்து பேசுங்கள். மலைபோல் இடைவெளி வேண்டாம்.
ஈகோவை விட்டெறியுங்கள்.
பொதுவாக இது எல்லாருக்கும் தெரிந்த விடயம்தான்.
ஆனால் நாம் இதை கடைப்பிடிக்காமல் தடுப்பது நம் அறியாமையே!



ஆக்கம் மஞ்சு மோகன்



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates