Social Icons

Sonntag, 8. Mai 2016

யேர்மனி எசன் திருக்குறள் மாநாடு 7.5.2016 சிறப்பாகநடந்தேறியது

சாதனை படைத்த யேர்மனி எசன் திருக்குறள் மாநாடு !
கொள்கைகளால் ஒன்றிணைந்த வள்ளுவரும் வள்ளலாரும் !
கடந்த 7.5.2016 அன்று எசன் நகரில் மண்டபம் நிறைந்த மக்களோடு ஐரோப்பியத் தமிழர் வரலாற்றில் முதன்முதலாக வள்ளுவப் பெருந்தகை தந்த
தெய்வத் திருக்குறள் மாநாடு .சிறுவர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டியைத் தொடர்ந்து, நடைபெற்றது. 

சுவிஸ் ,ஹொலண்ட் ,புதுவை , தமிழகம், மலேசியா, பிரான்ஸ் , யேர்மனி போன்ற நாடுகளிலிருந்து பேராசிரியர்களும்,கவிஞர்கள்,,எழுத்தாளர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், தமிழார்வலர்கள் என பலரும் கலந்துகொண்ட இம்மாநாட்டில் ,குழந்தைகளின் வள்ளுவர் சிறப்புப் பாடல் ஒலிக்க பேராளர்கள் சபை நடுவே அழைத்துவரப்பட்டனர்.
மணிக்குரலின் முல்லை மோகன் அவர்களின் கம்பீரக் குரல் மாநாட்டுக்கு  
மெருகூட்டத் தொடங்கியது !


மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.வரவேற்புரையை தமிழருவி ஆசிரியரும் மாநாட்டு ஏற்பாட்டாளரும் எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத் தலைவருமான தமிழவேள் நயினை விஜயன் அவர்கள் அனைவரையும் வரவேற்றதோடு மாநாட்டின் நோக்கம்,தேவை,துறைதோறும் திருக்குறளின் பயன்பாடு குறித்து உரையாற்றி மாநாட்டை தலைமை தாங்கி நடாத்தும்படி முனைவர் , தமிழ் மரபு அறக்கட்டளை பொறுப்பாளர் ஆய்வாளர், எழுத்தாளர் சுபாஷினி,(மலேசியா ) அவர்களிடம் மாநாட்டு நிகழ்வை தொடர கையளித்தார்.
    
டாக்டர். சுபாஷினி அவர்கள் தனது திருக்குறள் சார்த்த ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்து யேர்மன் நாட்டில் திருக்குறளின் தாக்கம் குறித்தும், யேர்மன் மொழியில் 1803 லிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதையும் யேர்மன் மக்கள் மத்தியில் குறளின் பயன்பாட்டையும் விரிவாக எடுத்துக்கூறினார். முனைவர் , தமிழ் மரபு அறக்கட்டளை பொறுப்பாளர் ஆய்வாளர், எழுத்தாளர் சுபாஷினி, பல்கலைக்கழக மாணவர் திரு,நகுஷாந்த் நயினை விஜயன் Bsc . உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் யுனஸ்கோ பொறுப்பாளர் ஆய்வாளர் திருமிகு.சாம் விஜய் ஆகியோரின் காட்சிப் படுத்தலும் விரிவுரையும் (powerpoint presentation )மிகச்சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது.நவீன தொழில் நுட்பமுறையில் திருக்குறளை எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என்பதையும், திருக்குறளின் தொன்மை சிறப்பு , மற்றும், ஐரோப்பாவில் 1803 லிருந்து யேர்மனிய மொழிபெயர்ப்பில் குறள், போன்றவிடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன. திருக்குறளும் தமிழிசையும் இணையும் ஆற்றலும் விளக்கப்பட்டது. அனைவரும் இந்த காட்சிப்படுத்தலும் விளக்கவுரையும் முழு கவனத்தோடு உள்வாங்கிக்கொண்டனர்.தொடர்ந்து ,

ஆய்வாளரும் எழுத்தாளரும்,கவிஞருமான கங்கைமகன் - செல்லத்துரை ஸ்ரீஷ்கந்தராஜா அவர்கள் (சுவிஸ்)
எக்காலத்திற்கும் புதிய புதிய கண்ணோட்டத்தில் குறளை விரிவாக ஆராய்ந்து வாழ்வை செம்மைப்படுத்தும் வித்தையை குறள் கொண்டிருப்பதை ஆதாரங்களோடு எடுத்துக்கூறினார்.பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த சுத்த சன்மார்க்க சபைப் பொறுப்பாளர் பேராசிரியர் இரா.அறிவழகன் அவர்கள், வள்ளுவரும் வள்ளலாரும் எனும் தலைப்பில், அருமையான சொற்பொழிவை தந்திருந்தார்.மனிதகுல மேம்பாட்டுக்காக, வள்ளுவரும் வள்ளலாரும் ஆற்றிய பணிகளை ஒப்பிட்டு அன்பு கருணை, கொல்லாமை இன்னோரன்ன அனைத்து வாழ்வில துறைகளிலும் இருவரின் கொள்கைகளை யும் அற்புதமாக எடுத்துக்கூறினார்.25 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளுவரும் வள்ளலாரும் தந்த அற்புத நெறியை மக்கள் மத்தியில்
பரப்பிவருவதாகக் குறிப்பிட்டார்கள்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த இசையமைப்பாளரும்,ஆய்வாளருமான திரு. ஸ்டார் ஸ்ரீ அவர்கள், 1330 குறள்களையும் 168 பாடகர்களை கொண்டு பாடி விளக்க உரையோடு பதிவிட்ட இறுவட்டு ஒன்றை வெளியீடு செய்துள்ளதை குறிப்பிட்டு உலகின் பல நாடுகளிலும் தனது முயற்சி பாராட்டப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்ற நிதியைக்கொண்டு தாயகத்தில் மாணவர்களின் கல்வித்தேவைகளை இயன்றளவில் செய்வதாகக் கூறினார்,இவருடைய சேவையை பலரும் பாராட்டியதோடு, இறுவட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர். 
தொடர்ந்து சிங்க்கப்பூர், மலேசியப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து கொலண்ட் நாட்டிலிருந்து கலந்துகொண்ட கல்விக்கழக பொறுப்ப்பளர் திரு,பரமானந்தன் அவர்கள் இம்மாநாட்டின் சிறப்புப் பற்றியும் எங்கள் எதிர்காலச்சந்ததிகள் , திருக்குறளை கற்றுக்கொள்ள இலகு வழிமுறையை முன்வைத்ததைப் பார்டாட்டி இம்மாநாட்டின்
மூலம் பல விடயங்களை தமது நாட்டுக்கு எடுத்த்குச்செல்வதாகவும் மாணவர்களுக்குப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடு படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.இணைய வலைத்தளங்களில் குறளின் பதிவுகள் எங்கெங்கு மாணவர்கள் இலகுவாகத் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் இம்மாநாட்டில் விரிவாகத் தாம் அறிந்ததாகவும் பாராட்டினார். இவரோடு ஆசிரியர்களும்
வருகைதந்திருந்தனர்


மதியபோசனத்தைத்தொடர்ந்து,
எசன் நுண்கலைக்கல்லூரி, மற்றும் சலங்கையொலி நாட்டிய மன்ற மாணவிகளின் நடனம், தமிழிசை இசைவிருந்து, கவியரங்கம்
நாடகம் என்பன இடையிடையே சபையோரை மகிழ்வித்து சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, யேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த , அறிவிப்பாளர் மணிக்குரலின் முல்லை மோகன்,பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும் எழுத்தாளருமான திரு. எலையா முருகதாசன், கவிதாயினி கோசல்யா சொர்ணலிங்கம், எழுத்தாளர் நகுலா சிவநாதன் , ஐரோப்பியத் தமிழ் வாசகர் வட்டம் , மற்றும் பண்ணாகம் டாட் கொம் பொறுப்பாளார் திருமிகு.இ. கிருஷ்ணமூர்த்தி,ஆய்வாளர் எழுத்தாளர், திரு,சபேசன், பேச்சாளரும் வன்னியில் மாணவர்களுக்கென பயிற்சிப் பாடசாலையை உருவாக்கிவருபவரும் யாழ் சுபெர்மாக்ட் திரு. தயாநிதி அவர்கள், எழுத்தாளரும் கவிஞருமான திருமதி . கங்கா ஸ்டான்லி , கவிஞர் பசுபதிராஜா, சன்மார்க்கக் கழகம் firance திரு.மகேந்திரன், ஆகியோரும் துறைதோறும் திருக்குறளின் பயன்பாடுகுறித்தும், விரிவாகப் பேசினார். 

எதிர்காலச்சந்ததிகள் கல்வியிலும் பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்க பெரியவர்கள் குறள் நெறி கற்றுக் கற்பித்து உதவ வேண்டும். என்றனர்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழினத்துக்கு உலககளாவிய ரீதியில் பெருமை சேர்த்தவர் வள்ளுவப் பெருந்தகை. 140 க்கும் மேற்பட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்ட குறள் உலகுள்ளவரை தமிழினத்திற்குப் பெருமை சேர்க்கும் என்றனர். 
மாநாடு சிறப்புற ஒத்துழைத்த அனைவருக்கும் எசன் அறநெறிப்பாடசாலை பொறுப்பாளர், ஆசிரியை.திருமதி.சசிகலா நயினை விஜயன் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார், குறளைப் போற்றுவோம் குறள்வழி வாழ்வோம்.
மணிபல்லவன். (படப்பிடிப்பு தமிழருவி )

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates