Social Icons

Montag, 11. April 2016

உரும்பிராயில் இறுவட்டு வெளியீட்டு விழா .

உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் மீது பாடப்பெற்ற ‘பார் போற்றும் கருணாகரனே’ என்ற இசைப்பாமாலையின் வெளியீட்டுவிழா 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை ஆலய மணி மண்டபத்தில் ஞானகதாசுரபி வண. குமார. சுவாமிநாதசர்மா (கவிஞர் வீரா) தலைமையில் நடைபெற்றது.
.
இந்நிகழ்வில் இளைப்பாறிய கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ.ஸ்வரநாதன் வரவேற்புரையையும் இணுவில் காயத்திரிபீட அதிபர் வண. தா. மகாதேவக்குருக்கள் ஆசியுரையையும் கலாநிதி ஆறு. திருமுருகன் சிறப்புரையையும். என்.டி.பி. வங்கி
முகாமையாளர் செ. சர்வேஸ்வரன் வெளியீட்டுரையையும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் நயப்புரையையும் வழங்கினர்.
.
ஆலய ஆதீன கர்த்தா வண. வை. சபாரத்தினக்குருக்கள் இறுவட்டை வெளியிட்டு வைக்க யாழ். பெஷன் ஹவுஸ் உரிமையாளர் த.கந்தசாமி முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
.
உரும்பிராய் கருணாகரப்பிள்ளையார் கோவில் உரும்பிராய்க்கும் இணுவிலுக்கும் இடையிலான உறவுப்பாலமாக விளங்குகின்றது. கோவில் பிரதேசத்திலேயே இரண்டு ஊர் எல்லைகளும் சங்கமிக்கின்றன.
.
இவ்வாலயம் சோழ நாட்டுப் படைத் தளபதி கருணாகரத் தொண்டைமானால் அமைக்கப்பட்ட சிறப்பிற்குரியது. பண்டைய செப்புப் பட்டயம் இன்றும் ஆலயத்தில் பேணப்படுகின்றது.
.
ஆறு பாடல்கள் கொண்டதாக இந்த இறுவட்டு வெளிவந்துள்ளது. பாடல்களை கவிஞர் இன்பம் அருளையா எழுதியுள்ளார். உமா சதீஸ் இசையமைத்துள்ளார். கன்னியசீலன் தரன் தயாரித்துள்ளார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates