Social Icons

Montag, 14. März 2016

இரத்தினம் கவிமகனின் "மகனே...!"












நீ கடந்து
வந்த பாதையை
தாண்டிய முள் வெளியை
நடந்த நடையை
நீச்சல் தெரியாது நீந்தி கடந்த
தூரத்தை
மாத்திரையே இன்றி
மாற்றிய உடல் வலியை
தாய் எனும் காண்டீபம்
கொண்டு தகர்த்த தடையை
உன் மலர்ந்த விழி திறந்து
திரும்பி பார்
பூக்கள் மலரவேண்டிய
பாத சுவடுகள் எங்கும்
முட்கள் முளைத்தெழுந்து
உன் நிலை எண்ணி சிரிகிறதே
உன் உடலோடு உயிரை
நிலம் தாங்கும் முன்னே
தொப்புள்கொடியோடு உனை
சுமந்த அட்சயமாய்
உன்னை காத்த காய்ந்து போன
கருவறையை பார்
உன் ஒளியாகி மின்மினித்து
வழியாகி பயணித்து
உன் சினந்த வரியாலே
தினமும் வதைபட்டு
சிறைபட்டு ஒளியற்று
கருமை பெற்று
சுருங்கி விட்ட
கருவிழிகளை பார்
உன் கரம் பிடித்து நடை
பழக்கி கருத்துடனே
நெறிப்படுத்தி மனிதனாய்
உருப்படுத்திய மனிதத்தை
வலக்கரம் பற்றிய
மாங்கல்ய கரம் வேண்டி
மறு கரத்தால் வெட்டி வீழ்த்திய
உன் தாயின்
திரு முகத்தை பார்
நீ வெட்டி வீழ்த்திய
வெளிறிய சிறகுகளின்
துடிப்படங்கும் நேரத்தின்
சிந்திய குருதித் துளியின்
இறுதி வினாடிகளின்
தரிசனத்தில் விழி மூடி கிடக்கின்றன
துடிப்புகள் ஒவ்வொன்றும்
உன் நலனுக்காய் இறைஞ்சுகின்றன
குருதி துணிக்கைகளில் உன் நாமமே
நிறைந்து கிடக்கிறன
உன் விழி திறந்து ஒரு கணமேனும்
அன்போடு பார்
உன் விழிகள் மட்டுமல்ல மனசும்
மரணித்து விட்டது மகனே…
உன் உயிர் தந்து
உரமூட்டி சிகரம் வரை
வளர்த்த திருமேனி
தவி தவிக்க கரிய
முலாம் பூசி கல்லறை
நிழல்களை கூட மறைத்து
மரணிக்க வைத்துள்ளதை
கொஞ்சம் திரும்பி பார்
விடை கொடு மகனே
உன் தாய் மனதின் வேதனைக்கு
அணைத்திடு மகனே
அவள் இறுதி நாளின்
மகிழ்வினை நீ
முடிவுற ஒரு நடைமுறை எடு
மூத்தவர் இல்லம் என்ற
ஒரு சொல்லினை அழி
ஆக்கம் :இரத்தினம் கவிமகன்
k a

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates