Social Icons

Samstag, 26. März 2016

மீரா குகனின் சின்ன கதை

ஒரேயொரு ஊரில ஒரு அழகான வண்ணாத்திபூச்சி சோலைவனத்தில் வாழ்ந்து வந்தது .
வர்ணங்களுக்கு அழகு சேர்த்தது அந்த வண்ணாத்திப்பூச்சி. அந்த வண்ணாத்திப்பூச்சிக்கு ஒரேயொரு கனவு இருந்தது . அதாவது எல்லோரும் தன்னை வாழ்த்த மிக இனிமையான வாழ்வு வாழ வேண்டும் என்பதே . பொதுவாக விரும்பும் எல்லாமே கிடைத்து வந்ததால் தான் விரும்பும் நல்வாழ்வும் நிச்சயம் கிடைக்கும் என்று காத்துக்கிடந்தது . 
அப்படியே ஒரு வாழ்வும் தானாக தேடி வந்து அமைந்தது . தன் சோலைவனத்தை விட்டு வாழ்வு தந்தவனை நம்பி காடாக இருந்தாலும் குடி புகுந்தது . நன்றியுணர்வுடன் அந்த வண்ணாத்திப்பூச்சியும் தன் இல்லம் செழிக்க ஓடாய் தேய்ந்தது .
காட்டில் வாழ்ந்த காரணத்தினாலோ அன்றி தன்னுடன் கூடி இருந்தவர்களின் வற்புறுத்தலினாலோ நம்பி வந்த வண்ணாத்திப்பூச்சியை ஒரு நாள் தன் கூட்டை விட்டே விரட்டி விட்டது அந்த வஞ்சக பூச்சி.
„எத்தனை உயிராக இருந்தேன் ? எத்தனை ஏற்றம் கொடுத்தேன் . அத்தனையிலும் பலன் கண்டு விட்டு ஒரு சிறு தயக்கமுமின்றி விரட்டி விட்டப்பட்டு விட்டேனே“ என்று மனவேதனை கொண்டாலும் அந்த வர்ணங்கள் கொண்ட வண்ணாத்திப்பூச்சி இனி இப்படி ஒரு நிலை எந்த ஜீவனும் அனுபவிக்க கூடாது என்று மனதில் திடம் கொண்டது .
ஆம் கனவுகள் கலைந்து போனாலும் இனி வரும் காலம் முழுவதும் நியாயத்துக்கும், தர்மத்துக்கும், உண்மைக்கும் போராட துணிவு கொண்டு விட்டது அந்த ஏமாளி வண்ணாத்திப்பூச்சி . 

ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates