Social Icons

Samstag, 26. März 2016

என்னவள்













அவள் அழகு காண்பதற்கு
ஆயிரம் கண்வேண்டுமெல்லோ!

செந்நிறத் தாவணியின்
செங்கரை புரண்டு வர
வெண்ணிலவின் ஒளிதனிலே
விண்ணுலகத் தாரகையாய்
என்னவள் மின்னி நின்றாள்
என் அருகில் வந்து நின்றாள்

அவள் அழகு காண்பதற்கு
ஆயிரம் கண்வேண்டுமெல்லோ!

நெற்றியில் சுட்டியும்
நீண்ட கருங் கூந்தலும்
பாவையவள் மேனிக்கு
பல அழகு சேர்த்ததம்மா
அவள் அழகு காண்பதற்கு
ஆயிரம் கண்வேண்டுமெல்லோ

மின்னும் வைரமென அவள் பற்கள்
உதடு விரித்துச் சிந்தும் புன்னகையில் - என்
உள்ளமது பறி போனதம்மா...

ஆக்கம்
2zxDa-38MPN-1
 ஈழத்துப்பித்தன்‬

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates