அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை .
ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்ற இவ்விழாவில் மீரா குகன் கவிதையும் இடம் பெற்றமை அவர் சிறப்பான எழுத்தாற்றலுக்கு கிடைத்த மதிப்பாகும் அவர்கவிதையை கீழ் இணைக்கின்றது கலைஞர்கள் இணையத்தின் துணை இணையமான www.stsstuddio1

பொழுதினை புலரச்செய்யும் பூவையவள்
பூவிலும் மென்மையாய் புதுமனம் கொண்டவள்
பூவிதழில் புன்னகை தவழ பேச்சில் இனிப்பவள்
புகழ்ச்சியில் மயங்காது மனதில் மகிழ்பவள்
பூவிதழில் புன்னகை தவழ பேச்சில் இனிப்பவள்
புகழ்ச்சியில் மயங்காது மனதில் மகிழ்பவள்
பொறுமையின் சிறப்பினை உலகுக்கே உணர்த்தியவள்
வடுக்களை தான் சுமந்தாலும் வலி சொல்ல தெரியாதவள்
கருணையின் பிறப்பில் காவியங்கள் பல படைத்தவள்
கனவுதனை வர்ணங்கள் கொண்டு ஓவியமாக்கியவள்
வடுக்களை தான் சுமந்தாலும் வலி சொல்ல தெரியாதவள்
கருணையின் பிறப்பில் காவியங்கள் பல படைத்தவள்
கனவுதனை வர்ணங்கள் கொண்டு ஓவியமாக்கியவள்
காதலில் உருகியே உணர்வுகளில் மரிப்பவள்
வீட்டையும் நாட்டையும் வெற்றியுடன் ஆள்பவள்
விண்ணுக்கும் பறந்து விந்தைகள் பல புரிந்தவள்
வேங்கை அவள் வீரத்தில் விடுதலை பறவை அவள்
வீட்டையும் நாட்டையும் வெற்றியுடன் ஆள்பவள்
விண்ணுக்கும் பறந்து விந்தைகள் பல புரிந்தவள்
வேங்கை அவள் வீரத்தில் விடுதலை பறவை அவள்
விடுதலை மகளீராய் மண் காக்க தன்னையே ஈந்தவள்
அன்பை ஒளியாக்கி மெழுகாய் தேய்ந்தவள்
விந்தையான ஜன்மம் இவள்
பெண்மை எனும் பெயரும் கொண்டவள்
அன்பை ஒளியாக்கி மெழுகாய் தேய்ந்தவள்
விந்தையான ஜன்மம் இவள்
பெண்மை எனும் பெயரும் கொண்டவள்
ஒளி விடும் தீபமாய் அழகு பெண்ணவள்
பெண்ணாய் அவள் பிறந்ததினால்
வீட்டுக்குள் அவள் சுடரை மறைக்க நினைத்தாலும்
வெளிச்சத்தை என்றும் மறைக்க முடியாதே
ஒளிதீபத்தை என்றும் அணைக்க முடியாதே
பெண்ணாய் அவள் பிறந்ததினால்
வீட்டுக்குள் அவள் சுடரை மறைக்க நினைத்தாலும்
வெளிச்சத்தை என்றும் மறைக்க முடியாதே
ஒளிதீபத்தை என்றும் அணைக்க முடியாதே
ஆக்கம் மீரா குகன் ஜெர்மனி
Keine Kommentare:
Kommentar veröffentlichen