Social Icons

Sonntag, 27. März 2016

மார்ஷல் வன்னி எழுதிய உன் அருகில் வந்து விடுகிறேன்




















பந்தயப்புறா வலிமையானது !
மாடப்புறா பயந்தாங்கொள்ளி !

நான் வெளி கண்களுக்கு
பந்தயப்புறாவாகவும்-உன் 
இதயத்தில் மட்டுமே
மாடப்புறாவாகவும் இருக்கிறேன் !

ஏழு மலையும் ஏழு கடலும் தாண்டி
அசுரனின் உயிர் பாதுகாப்பாய்
இருக்குமாம்-அதே போல்
ஆற்றாமையும் ஆவேஷமும்
என்னுள் வரும் போதெல்லாம்
அத்தனை கடல் வெளி தாண்டியும்
உன் அருகில் வந்து விடுகிறேன்
உன் அரவணைப்பு நாடி !

என் அடைக்கலம் புகுதலுக்கு
உன் இதயம் தான் சரியான இடமாக
இருக்கும் போது உன் கண்களை
தாண்டி உன்னோடான என் காதலை
யார் என்ன செய்திட முடியும்..???

 ஆக்கம் மார்ஷல் வன்னிvan

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates