Social Icons

Sonntag, 20. März 2016

மார்ஷல் வன்னி எழுதிய உனக்காக இதோ இலவசமாய் ஓர் இதயம் !











உன் இதயம் தந்து என் இதயம்
எடுத்து கொள் என்று இடமாற்றம் 
ஏதும் செய்ய வில்லை !
மறந்தாலும் மங்கி போனாலும்
தேர்வெழுதினாலும் தேரடியில்
பிரதட்டை செய்தாலும்
இது உனக்கே உனக்கென
உறுதியும் உண்டு !
உத்தரவாதமும் உண்டு !
யாவும் முற்றிலும் இலவசம்
உடனே அபகரிப்பாயா..?
இலவசமாய் உனக்கு கிடைத்த
என் இதயத்தை..?
என்னுள் இதம் தந்து
என்னுயுரில் கலந்து
இறுகி இறுதிக்கும்
இவள் உன்னவள் என
உள்ளெழுந்த உணர்வால்
இலவசமாய் என் இதயம்
முற்றிலுமே உனக்கே உனக்காக..!!

 ஆக்கம்van
மார்ஷல் வன்னி 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates