மெல்ல வந்த தென்றலில்
மேலும் கீழும்
துள்ளித் துள்ளி
என்ன என்ன சொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சம்
சொல்வாயா..
மேலும் கீழும்
துள்ளித் துள்ளி
என்ன என்ன சொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சம்
சொல்வாயா..
உன் வண்ண வண்ண மேனியிலே
சின்ன சின்ன பனித்துளிகள்
சேர்த்து வைத்த துளிகளை
எண்ணி எண்ணி
எழில் கொள்கிறாயா தென்றலிடம்
சின்ன சின்ன பனித்துளிகள்
சேர்த்து வைத்த துளிகளை
எண்ணி எண்ணி
எழில் கொள்கிறாயா தென்றலிடம்
மொட்டு மொட்டாய் நீ
இருக்கையிலை
சிட்டு சிட்டு
குருவிகள்
செல்ல செல்ல கதைகளை
சொல்லி சொல்லி போனதை
அள்ளி அள்ளி சொல்கிறாயா
அருகில் வந்த தென்றலிடம்
இருக்கையிலை
சிட்டு சிட்டு
குருவிகள்
செல்ல செல்ல கதைகளை
சொல்லி சொல்லி போனதை
அள்ளி அள்ளி சொல்கிறாயா
அருகில் வந்த தென்றலிடம்
பட்டிதழின் வாசத்திலே
பறந்து வந்த தென்றலுமே
சேர்த்து வைத்த நறுமணத்தை
எட்டி எட்டி தெறிக்கையிலே
நந்தவனம் சிரிக்குதென்று
நகைக்கிறீயா தென்றலிடம் .....
பறந்து வந்த தென்றலுமே
சேர்த்து வைத்த நறுமணத்தை
எட்டி எட்டி தெறிக்கையிலே
நந்தவனம் சிரிக்குதென்று
நகைக்கிறீயா தென்றலிடம் .....
அனைவருக்கும் கவிதைகள் தின
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ஆக்கம் கவிதாயினி சுமதி
Keine Kommentare:
Kommentar veröffentlichen