Social Icons

Dienstag, 15. März 2016

பவித்ரா நந்தகுமாரின் விடுதலை!















வீணான உலகம்பந்தாடுகிறது வாழ்வை
சாதி(தீ)
எனும் கொடு நோய்
பணம் எனும்
விசம்
துண்டாடுகிறது
மனித உடலையும்
தனி நபர் விடுதலை
பெறவே முடியல
இன விடுதலை
கிடைக்குமா
வையத்தினுள்
மனித நேயம்
பறந்து போனதா
சிறகு உடைந்து
மூலையில்
உறங்குகிறதா
இயலாமை
தடுக்கிறதா
இயன்றும் வஞ்சிக்கிறதா
பிரபஞ்சம்
மனித கூறுகளால்
மனிதனே
தோற்றுவித்த
விடுதலை கோசம்
மனிதனால்
பெற முடியாமல்
போனதேன்
விட்டு விட போவதில்லை
துரோகமும்
வல்லாதிக்கமும்
விடுதலை சங்கிலியின்
பூட்டு உடைக்க
மரத்து போகிறது
மனம் மட்டுமல்ல
மனித அவதாரமும் தான்
காட்டிலே வாழ



விடை கேட்டும்
புதர்கள்
சொல்கிறது
வரவேண்டாம்
நானும் அடிமைதான்
அதிகார பெருங்குழியில்
நான் என் செய்வேன்
விடுதலை
கனவில் மட்டுமே
சுவாசிக்கும்
ஒட்சிசன் போலாயிற்று

ஆக்கம்  பவித்ரா நந்தகுமார்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates