இமைகள் தூக்கத்தைத்திருடி
எங்கோ ஒளித்துவிட்டாலும்.
ஏதோ சாதித்துவிட்டதாய்
புலர்கிறது ஒவ்வோர் நாட்
காலையும்.
எங்கோ ஒளித்துவிட்டாலும்.
ஏதோ சாதித்துவிட்டதாய்
புலர்கிறது ஒவ்வோர் நாட்
காலையும்.
என் அகம் நீர்த்து
துகள்களாகி காற்றிலடிபட்டு
எங்கே படிகின்றன.
துகள்களாகி காற்றிலடிபட்டு
எங்கே படிகின்றன.
இதுவரை உங்களுக்கு
எதைத்தான் பரிசளிக்கமுடிந்ததென்பதை
ஜீரணிக்க முடியாத
என் ஆன்ம உருக்குலைப்புக்களில்
என்னம்மாவிற்கான
ஒத்தாசைகளையும்
மறந்துபோகிறேன்.
எதைத்தான் பரிசளிக்கமுடிந்ததென்பதை
ஜீரணிக்க முடியாத
என் ஆன்ம உருக்குலைப்புக்களில்
என்னம்மாவிற்கான
ஒத்தாசைகளையும்
மறந்துபோகிறேன்.
ஜீவிய ஓட்டத்தில் உங்களுக்கு
முன்னான இறப்பைத்தான்
கடவுளிடம் விண்ணப்பம் பண்ணுகிறேன்.
உங்கள் பிரிவுகளுக்குள்
என்னால் வாழமுடியாதம்மா
முன்னான இறப்பைத்தான்
கடவுளிடம் விண்ணப்பம் பண்ணுகிறேன்.
உங்கள் பிரிவுகளுக்குள்
என்னால் வாழமுடியாதம்மா
இருப்புக்கொள்ளாதென்
வேதனையாரணிங்கள்
தீப்பிடித்தெரிந்து
சுடுகாடாய்ப்போகும் போது.
ஆடைசேபனையில்லாதென்
அம்மாவின்
அரவணைப்புக்களில்
ஒவ்வோர் நாட் காலையும்
ஏதோ சாதித்ததாய்
புலர்கிறது.
வேதனையாரணிங்கள்
தீப்பிடித்தெரிந்து
சுடுகாடாய்ப்போகும் போது.
ஆடைசேபனையில்லாதென்
அம்மாவின்
அரவணைப்புக்களில்
ஒவ்வோர் நாட் காலையும்
ஏதோ சாதித்ததாய்
புலர்கிறது.
ஆக்கம் நெடுந்தீவு அரவிந்
Keine Kommentare:
Kommentar veröffentlichen