கனடாவில் மிகப்பெரிய நடனப்பள்ளியை நிர்வகித்துவரும் பரத நாட்டிய சூடாமணி, பரத நடன அசைவுகளின் இமயம் என பலராலும் வர்ணிக்கப்படும் பெரு மதித்புக்குரிய ரேணுகா விக்னேஷ் அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களை தங்களது கல்லூரியில் வைத்திருப்பதனையும் அவர்களது நடனப்பள்ளியான கலை அருவி நுண்கலைக்கூடம் வருடம் தோறும் மாணவர்களின் நலன் கருதி வருடாந்த நடன இசைத் திருவிழாவுடன் மாணவர்களின் தேர்ச்சியின் அடிப்படையில் பட்டமளிப்பு விழாவினையும் கடந்த 20 வருடங்களாக நடத்தி வருவதனையும் நாம் அறிவோம்.
இம்முறை சற்று வித்தியாசமாக பெங்களூரில் இருந்து சிறப்பு விருந்தினராக தற்பொழுது கனடா வந்திருக்கும் பரத நாட்டிய அசைவு சக்கரவர்த்தி பிரபின் வில்லரீஷ் அவர்களை இன்று சீனா கலாச்சார மண்டபத்தில் ஓர் சிறந்த நேர்காணலை காணுமுகமாக இலங்கேஸ் அவர்கள் ஓர் தீடிர்சந்திப்பினை அவர்களுடன் ஏற்படுத்தியிருந்தார்கள். வருகின்ற ஞாயிற்று கிழமை அதாவது மார்ச் 20ஆம் திகதி சரியாக திட்டமிடப்பட்டவாறு நிகழ்சிகள் ஆரம்பிக்கப்படும் என்பதினையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
நடன ஆசிரியை மிகவும் சந்தோசம் கலந்த சிரித்த முகத்துடன் மாணவர்களுக்கு தேவையான இறுதி ஒத்திகையினை வழங்கிக்கொண்டு இருப்பதனையும் அவதானித்துக்கொண்டென். ரேணுகா அவர்களின் கணவர் கூட மிகவும் உற்சாகமாக நடன ஒத்திகையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதனையும் அவதானித்தேன். நூற்றுக்கணக்கான மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் தங்களை முழுமையாக அர்பணித்து ஒத்திகையில் ஈடுபடுவதனையும் அவதானிக்க முடிந்தது.
ஒத்திகையை அவதானித்துக்கொண்டிருந்த நான் மாணவர்களின் திறமையை கண்டு அசந்து போனேன். பரத நடனங்களுக்கு மேருகூட்டும்வகையில் பாடல்களின் தெரிவும் அசத்தலாக இருந்தது. பாவம், ராகம், தாளம்மற்றும் ஸ்ருதி இவை நான்கும் சேர்ந்ததே பரதம் எனப்படும். பாரத தேசத்தில் முதன்முதலாக தோன்றியதால் பரதநாட்டியம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் பரத முனிவரால் முதன் முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதால் இது பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய ஒத்திகை நிகழ்வில் ரேணுகா ஆசிரியையின் சிறப்பு தேர்ச்சியையும் அவர்கள் மாணவர்களுக்கு சிறந்த யுக்திகளை பயன்படுத்தி பரதத்தினை பயிற்றுவருவதனையும் அவதானித்தேன். உணர்ச்சிகளும் அபிநயங்களும் நன்கு கலந்து ஆடப்படும் நடனம் நிருத்தியம் எனப்படும்.
இதை நிரூபிக்கும் பொருட்டு ரேணுகா அவர்கள் தங்களை மறந்து உணர்ச்சிகளும் அபிநயங்களும் நன்கு கலந்து ஓர் சிறப்பான ஒத்திகையினை வழங்கியவண்ணம் இருந்தார்கள். பல மாணவர்கள் தங்களது பரத நாட்டிய அரங்கேற்றம் மிகவும் குறுகிய காலத்தில் நடைபெறும் என்பதினையும் தெரிவித்திருந்தார்கள். உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது ‘அடவு’ என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது ‘ஜதி’ எனப்படும். ரேணுகா அவர்கள் மாணவர்களுக்கு பல்வேறுவிதமான உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் பயிற்றுவித்துக்கொண்டிருந்தார்கள்.
இறுதியில் ரேணுகா அவர்கள் சரியாக பிற்பகல் 5 மணியளவில் நிகழ்சிகள் யாவும் ஆரம்பிக்கப்படும் என்றும் 25க்கு மேற்பட்ட நனடங்கள் இருப்பதினால் நிகழ்சிகள் முகவும் விறு விறுப்பாக அமையும் எனவும் கூறினார்கள். பரத நாட்டிய அசைவு சக்கரவர்த்தி பிரபின் வில்லரீஷ் அவர்களும் தாங்கள் மூன்று நாட்டிய நடனங்களை அரகேற்ற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen