Social Icons

Sonntag, 27. März 2016

நெடுந்தீவு தனுவின் நிறைவுறும் நியதிகள்.... !












பலிப்பீடத்தில்
அடுக்கப்பட்ட
விறகுகட்குள்
இரகசிய ஒப்பந்தம்
நடக்கின்றது...
மந்தை ஒன்றின்
எரிபலியில்
பூப்பெய்கிறாள்
நிர்வாண பெண்...
வாசனை
மலர் தோப்பில்
ஒற்றை இதழின்
அட்சய கண்களால்
குன்றுகளின்
தலையில்
வழிந்தோடுகின்றது....
மரணத்தின்
உள் சுத்திகரிப்பில்
சருகுகளின்
வியர்வைகளும்
வாசனையாகிறது...
மூங்கில் துளைக்குள்
புகுத்தப்பட்ட
காற்றை
விசிக்கிய படி
நடக்கின்றான்
வெறுங்காலான்...
விகாரமான
சொற்களால்
ரசனை இழக்கின்றது
ஒற்றையடி
பாதையோர
முட்செடி காடு....
அந்தி சாய்ந்த
சூரியனே
அகத்தினையை
காட்டி கொடுத்த
உளவாளி
போலும்...
பிசுபிசுத்த
கொழுத்த
ஆடொன்றின்
இரத்தம் தோய்ந்த
கால் மிதிகள்...
புகைந்து கொண்டிருக்கும்
பட்டைகளுக்கு இடையில்
நிர்வான பெண்ணுக்கும்
வெறும் காலோனுக்கும்...
பலிப்பீடத்தில்
அடுக்கப்பட்ட
விறகுகளுள்
இரகசிய திருமணம்
நடக்கின்றது.

ஆக்கம் நெடுந்தீவுநெடுந்தீவு தனு இன் சுயவிவரப் படம் தனு

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates