கனவாக வந்தது
உறவாகிப்போனது
மீண்டும் கனவென்று ஆகுமோ
கானல் தான் யாவுமோ
நிலையில்லா உலகில்
தினம் மாறும் மனிதர்
புரியாத அர்த்தமாய் புரிந்தென்ன இலாபம்
மீண்டும் கனவென்று ஆகுமோ
கானல் தான் யாவுமோ
நிலையில்லா உலகில்
தினம் மாறும் மனிதர்
புரியாத அர்த்தமாய் புரிந்தென்ன இலாபம்
கறையான் புத்தெடுத்தால்
பாம்பு குடிகொள்ளும்
சந்தேக கண்ணாடி அணிந்தால்
சத்தியமும் பொய்க்கும்
வேதனையின் உச்சம்
வேடிக்கையானது
குறையில்லா பலருக்கு
நகைக்கவா தோனுது
விடியாத பொழுது விடிந்தாய் இருந்தேன்
விலக்கியவார்த்தையில் விழலுக்கு இறைத்த நீர் ஆனேன்
பாம்பு குடிகொள்ளும்
சந்தேக கண்ணாடி அணிந்தால்
சத்தியமும் பொய்க்கும்
வேதனையின் உச்சம்
வேடிக்கையானது
குறையில்லா பலருக்கு
நகைக்கவா தோனுது
விடியாத பொழுது விடிந்தாய் இருந்தேன்
விலக்கியவார்த்தையில் விழலுக்கு இறைத்த நீர் ஆனேன்
கனவை தந்து கற்பனையாக்கினாய்
நியமமாய் வந்து நிழலாய் போகிறாய்
மனசோடு மனச்சாட்சி
மௌணமாக பேசுது
மனமே மனமிருந்தால் வா..!!
நியமமாய் வந்து நிழலாய் போகிறாய்
மனசோடு மனச்சாட்சி
மௌணமாக பேசுது
மனமே மனமிருந்தால் வா..!!
♥கவிக்குயில் சிவரமணி♥
Keine Kommentare:
Kommentar veröffentlichen